சிறகடிக்க ஆசை சீரியலில் இனி கதாநாயகி மீனா இல்லையா? இது புது டுவிஸ்ட்! அதிரடியாக மாற்றப்படும் கதை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இதுவரைக்கும் மீனா தான் கதாநாயகியாக இருந்தார். ஆனால் இப்போது இந்த சீரியலில் கதாநாயகி மாற்றப்பட்டு விட்டாரா? என்பது தான் பலருடைய கேள்வியாக இருக்கிறது. என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

விஜய் டிவியில் டிஆர்பியில் சிறகடிக்க ஆசை சீரியல் தான் முதலிடத்தில் இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்ப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கிறது. சீரியல் தொடங்கி 600 எபிசோடுகளை கடந்துவிட்டது. ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் ரோகிணி மாட்ட வேண்டும், அவர் பற்றிய உண்மைகள் குடும்பத்திற்கு தெரியவரும் என்று எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள்.

television siragadikka aasai serial vijay tv

ஆனால் சீரியலில் கதாநாயகன் முத்து, மீனாவிற்கு தான் பிரச்சனை மேல பிரச்சனை வந்து கொண்டு இருக்கிறது. இதற்கு இல்லையா சார் என்ட் என்று ரசிகர்களின் மனது கதறி கொண்டிருக்கிறது. ஆனால் ஒவ்வொரு வாரமும் ஒரு திருப்பம் என்கிற பெயரில் இயக்குனர் ரசிகர்களை ஏமாற்றிக் கொண்டே இருக்கிறார்.

ஜீவாவிடம் மனோஜும் ரோகிணியும் பணம் வாங்கிய விஷயம் மட்டும்தான் வீட்டிற்கு தெரிய வந்திருக்கிறது. அதற்கு பிறகு ரோகிணியின் அப்பாவை பற்றிய உண்மைகளை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக முத்து குடும்பத்தை கூட்டிக்கொண்டு மலேசியா போகலாம் என்று பிளான் போட்டு இருந்தார். ஆனால் அங்கேயும்பெரிய அணைக்கட்டை ரோகிணி போட்டுவிட்டார்.

என்னுடைய அப்பாவே இறந்து போய்விட்டார் என்று முத்துவிற்கு பெரிய செக் வைத்திருக்கிறார். அதுபோல முத்துவின் செல்போனை தொலைத்தது வித்யா தான் என்ற உண்மையை செருப்பு தைக்கும் தாத்தா மூலமாக முத்துவிற்கு தெரிய வர வைத்திருந்தனர். இதனால் ரோகிணி பற்றிய அடுத்த உண்மைகள் தெரியும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

television siragadikka aasai serial vijay tv

ஆனால் இன்றைய எபிசோடில் அதுவும் ஆசைப்படாதீங்க மக்களே என்று சொல்ற மாதிரி தான் காட்சிகள் இருந்தது. அதாவது நேற்று வரைக்கும் வித்யாவும், ரோகிணியும் சண்டை போட்டு இனி எனக்கு நீ தேவையில்லை... உனக்கு நான் தேவை இல்லை என்று பிரிந்து போயிருந்தனர். அதனால் செல்போன் பற்றி முத்து விசாரிக்க வரும்போது ரோகிணியை வித்யா போட்டுக் கொடுத்து விடுவார் என்று ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு இன்று பெரிய நாமத்தை வித்யா போட்டு விட்டார்.

நான் இந்த செல்போனை பிளாட்பாரம் கடையில் தான் வாங்கினேன். இதுக்கும் ரோகிணிக்கும் சம்பந்தம் கிடையாது. இது உங்க போன் என்று எனக்கு தெரியவே செய்யாது என்று வித்யா அடித்து சொல்லிவிட்டார். இதனால் முத்து வழக்கம் போல இந்த உண்மையை கண்டுபிடிக்கிறேன் என்று சபதம் போட்டு விட்டு வந்திருக்கிறார். இந்த பாயிண்ட்டை தான் இப்போது ரசிகர்கள் பிடித்து கேள்வி எழுப்புகிறார்கள்.

television siragadikka aasai serial vijay tv

இதுவரைக்கும் இயக்குனர் குமரன் இயங்கும் சீரியல்களில் கதாநாயகிக்கு தான் நல்ல தோழி இருப்பார். ஒவ்வொரு பிரச்சனைகளிலும் அவர்தான் கதாநாயகிக்கு ஹெல்ப் பண்ணுவார். ஆனால் இப்போ இந்த சீரியலில் ரோகிணிக்கு தான் நல்ல பிரண்ட் கிடைத்திருக்கிறார். எந்த பிரச்சனையிலும் ரோகிணியை விட்டுக் கொடுக்காமல் வித்யா இருக்கிறார்.

இதனால் மீனாவை விடவும் ரோகிணி தான் இந்த சீரியல் கதாநாயகியா? அவருக்கு தான் இயக்குனர் எப்போதும் சாதகமாக கதையை கொண்டு போய்க் கொண்டே இருக்கிறார். இப்போது நல்ல தோழியும் ரோகிணிக்கு கிடைத்திருக்கிறார். இந்த சீரியலில் கதாநாயகியாக இருக்கும் மீனாவுக்கு மட்டும் இப்படி ஒரு தோழி கிடைக்கவில்லையே என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.

television siragadikka aasai serial vijay tv

ரோகிணி எப்போ மாட்டுவார் என்று எதிர்பார்த்து இருக்கும் ரசிகர்களுக்கு நாளை எபிசோடில் ஸ்ருதி காணாமல் போகும் காட்சிகள் தான் இருக்கிறது. வழக்கம்போல இதில் தலையிட்டு முத்துவும் மீனாவும் ஸ்ருதியை கண்டுபிடிக்க போகிறார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கடைசியில் அவர்களுக்குத்தான் ஆப்பு எப்படியும் கிடைக்கும். ஆனாலும் இந்த முறை என்ன நடக்கிறது என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+