பாடும் குழந்தைகளுக்கு விஜய் டிவியில் வாய்ப்பு.. சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 ஆடிஷன் தொடங்கியது
சென்னை: விஜய் டிவியின் பிரம்மாண்ட நேயர்களின் அபிமான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இதுவரை பத்தொன்பது சீஸன்களை நடத்தி முடித்துள்ளது. இது பெரியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கான தனித்தனி சீசன்களாக நடத்தப்பட்டு சமீபத்தில் பெரியவர்களுக்கான பத்தாவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 12ம் தேதி, முதல் கட்ட நேர்முக தேர்வு (ஆடிஷன்) தொடங்கப்படவுள்ளது. அனைவரும் அறிந்ததுபோல இது பாடும் திறமை வாய்ந்த யார் வேண்டுமானாலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உலகப்புகழ் அடைந்துவிடக்கூடிய வாய்ப்பு மக்களாகிய நேயர்களுக்கு வழங்கப்படுகிறது.

வரும் ஆகஸ்ட் 12ம் தேதி புதுக்கோட்டையில் இதன் நேரடி தேர்வு ஆரம்பமாகவுள்ளது. முதல் கட்ட தேர்வாக புதுக்கோட்டையில் தொடங்கி 40 நகரங்களில் இந்த நேரடி தேர்வுகள் விஜய் டிவியால் நடத்தப்படுகிறது.
திருச்சி, மதுரை, கோவை, மற்றும் சென்னையில் இதன் இரண்டாம் கட்ட தேர்வுகள் மற்றும் அடுத்தகட்ட தேர்வுகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நேர்முக தேர்வில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் திறமை வாய்ந்த போட்டியாளர்கள் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சியில் பங்குபெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் கலந்துகொள்ள வயது வரம்பு 6 வயது முதல் 15 வயது ஆகும் சிறுவர்கள். இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் விஜய் டிவியின் தொலைக்காட்சி மற்றும் அதன் சோசியல் மீடியா பிளாட்ஃபார்ம்களில் தெரிவிக்கப்படும் அறிவிப்புகளில் அடிப்படையில் நேரடி தேர்வுகள் இடம்பெறும் இடங்களை தெரிந்துகொண்டு நேரில் வந்து கலந்துகொள்ள வேண்டும், இந்த ஆடிஷன்கள் முடிந்த பின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 விரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications