நாங்க அன்றைக்கு இரவு உயிர் தப்பியது அதிசயம், அப்போ நெப்போலியன் செய்த உதவி! நெகிழ்ந்த டிஜே பிளாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவி பிரபலமான டிஜே பிளாக் சமீபத்தில் பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது தான் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்போது நெப்போலியன் தனக்கு செய்த உதவி குறித்து எமோஷனலாக பேசி இருக்கிறார்.

நடிகர் நெப்போலியன் 90ஸ் காலகட்டத்தில் வில்லனாக சினிமாவில் அறிமுகமாகி அதற்குப் பிறகு கதாநாயகனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்திருந்தார். அதேபோல அரசியலிலும் எம்எல்ஏவாக தன்னுடைய பயணத்தை தொடங்கி மத்திய அமைச்சராகவும் பதவி வகித்திருந்தார். இப்போது சினிமா மற்றும் அரசியல் எல்லாவற்றையும் விட்டு விலகி தன்னுடைய குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கிறார்.

Napoleon

நெப்போலியன் மகன் திருமணம்

கடந்த நவம்பர் மாதத்தில் தான் அவருடைய மூத்த மகன் தனுசுக்கு திருமணம் செய்து வைத்தார். அப்போது விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் அந்த பங்க்ஷனில் கலந்து கொண்டனர். அதுபோல சில மாதங்களுக்கு முன்பு நெப்போலியன் மற்றும் அவருடைய குடும்பத்தோடு எடுத்த புகைப்படத்தை விஜய் டிவி பிரபலமான மாகாபா மற்றும் டிஜே பிளாக் பகிர்ந்து இருந்தார். அது பலருடைய பாராட்டை பெற்றது.

டி ஜே பிளாக் பேட்டி

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட டிஜே பிளாக் அந்த புகைப்படத்திற்கு பின்னாடி இருக்கும் கஷ்டத்தை பகிர்ந்து இருந்தார். அதில் அவர் பேசுகையில், நானும் மாகாபா அண்ணனும் அமெரிக்காவில் ஒரு பங்க்ஷனில் கலந்து கொண்டிருந்தோம். அங்கு நெப்போலியன் வந்திருந்தார். அவருக்கு ஏற்கனவே மாகாபா அண்ணனை தெரியும். ஆனால் என்னை தெரியாது.

Napoleon

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டு இருக்கும்போது நான் தனியாக நின்று கொண்டிருந்தேன். அவர் என்னிடம் எப்படி இருக்கீங்க டி.ஜே பிளாக் என்று கேட்டார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது என்னை உங்களுக்கு தெரியுமா சார் என்று கேட்டேன். உங்களுடைய புரோகிராம் எல்லாம் வீட்டில் நாங்கள் எல்லோரும் பார்ப்போம் என்று சொல்லிவிட்டு அவருடைய மகன் தனுஷுக்கு வீடியோ கால் செய்தார்.

நெப்போலியன் சொன்ன வார்த்தை

தனுஷ் எங்களை பார்த்ததும் ரொம்பவும் ஆச்சரியப்பட்டார். உடனே நெப்போலியன் என்னுடைய மகன் இவ்வளவு ஆச்சரியப்பட்டு நான் பார்க்கல நீங்க கண்டிப்பா வீட்டுக்கு வரணும் என்று சொல்லி இருந்தார். நாங்க ஏற்கனவே வேறு சில பிளான் வெச்சிருக்கோம் என்று சொன்னோம். அதற்கு அவர் அதுவெல்லாம் அப்படியே இருக்கட்டும். நான் உங்களுக்கு நாங்கள் இருக்கும் இடத்திற்கு பிளைட் டிக்கெட் எல்லாம் அரேஞ்ச் பண்றேன் நீங்க கண்டிப்பா வரணும் என்று சொல்லிவிட்டார்.

நடுவானில் தவிப்பு

நாங்களும் சரி நீங்கள் போங்க வரோம் என்று சொன்னோம். அவர் முதல் பிளைட்டில் போனார் அடுத்த பிளைட்டில் நாங்கள் கிளம்பினோம். அந்த நேரத்தில் வானத்தில் சூறாவளி இடி மின்னல் எல்லாம் வந்தது. நாங்கள் இருண்ட மேகம் சூழ்ந்த பகுதியில் மாட்டிக்கொண்டோம். அப்போது பிளைட் தரை இறங்க முடியாமல் போய்விட்டது.

Napoleon

உயிர் பயம்

அந்த பிளைட்டில் பைலட் இன்னும் 25 நிமிடம் தான் நம்மால் பறக்க முடியும் அதற்குள் எரிபொருள் தீர்ந்துவிடும் என்று சொன்னார். நாங்க நம்முடைய வாழ்க்கை அவ்வளவு தானா? நாம செத்தோம் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனாலும் கடவுளிடம் தீவிரமாக வேண்டிக் கொண்டிருந்தோம். பிறகு ஒரு வழியாக பக்கத்தில் இருந்த இன்னொரு இடத்தில் லேண்ட் செய்து விட்டார்கள்.

இரவெல்லாம் தூங்கல

அங்கு வைத்து நெப்போலியன்க்கு போன் செய்து விஷயத்தை சொன்னோம். அப்போது நெப்போலியன் சார் நாங்க வருவோம் என்று இரவு முழுக்க தூங்காமல் குடும்பத்தோடு முழித்துக் கொண்டு இருந்தார். உடனே நாங்கள் இருந்த ஏர்போர்ட்டில் இருந்தவர்களுக்கு போன் செய்து எப்படியோ எங்களுக்கு பிளைட் அரேஞ்ச் செய்து விட்டார்.

Napoleon

செல்போன் பரிசு

நாங்கள் அவர் வீட்டிற்கு அடுத்த நாள் காலையில் தான் போனோம். அவருடைய உறவினர்கள் நண்பர்கள் என்று பலரும் வந்திருந்தார்கள். எல்லோரும் எங்களிடம் ரொம்பவும் தன்மையாக நடந்து கொண்டார்கள். நெப்போலியன் சார் எனக்கு ஒரு செல்போன் வாங்கி கொடுத்தார். செலவுக்கு பணமும் கொடுத்து அனுப்பினார். அதை எல்லாம் மறக்கவே முடியாது.

நெப்போலியன் செய்த உதவி

நெப்போலியன் எங்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு போன பலருக்கு ஏதாவது பிரச்சனை என்றால் உதவி செய்து இருக்கிறார். அதுபோல சமீபத்தில் கூட சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நெப்போலியன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒரு குழந்தை கலந்து கொண்டது. அந்த குழந்தைக்காக நாங்கள் அவரிடம் பேசியபோது அவர் பல உதவிகளை செய்து இருக்கிறார் என்று டிஜே பிளாக் நெகிழ்ந்து பேசி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+