நீயா நானா ப்ரோமோ: ஏமாற்றுகிற விஷயத்தை கேள்வி கேட்கணுமா? பொறுமையா இருக்கணுமா? கொந்தளித்த கோபிநாத்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் மார்ச் 23ஆம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோக்கள் வெளியாகி இருக்கிறது. அதில் இந்த வாரம் இஎம்ஐ இன்றைய வாழ்வின் இயல்பான ஒரு விஷயமா? என்ற தலைப்பில் விவாதம் நடைபெறுகிறது. அதில் இஎம்ஐ மூலம் வீடு வாசல் வாகனம் வாங்கியவர்கள் மற்றும் அதை விமர்சிப்பவர்கள் கலந்து கொண்டு பேசி இருக்கிறார்கள்
விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சி கடந்த 10 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் மக்களின் அடிப்படை பிரச்சனைகளில் இருந்து விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பல டாபிக் யாரும் எதிர்பார்க்காத அளவில் சமூகத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

நீயா நானா ஹிட் டாபிக்
அதிலும் வீட்டு ஓனர்கள் மற்றும் வீட்டில் வேலை பார்ப்பவர்கள், அப்பா மீது குழந்தைகளுக்கு இருக்கும் பாசம், குழந்தைகளுக்காக அப்பா செய்யும் தியாகம் என்று பல தலைப்புகள் மக்கள் மனதில் இருக்கும் வலியையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தும் வகையில் இருந்தது. அதுபோல சில வாரங்களுக்கு முன்பு மும்மொழிக்கொள்கை பற்றிய விவாதம் நடைபெற்றது. ஆனால் சில காரணங்களால் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யவில்லை.
மும்மொழி கொள்கை
அதற்கு பதிலாக தான் கடந்த வாரத்தில் யூடியூபில் சமையல் கற்றுத்தரும் யூடியூபர்கள் மற்றும் அதை பார்க்கும் பாலோவர்ஸ்களும் கலந்து கொண்டு விவாதித்தார்கள். இதுவும் சுவாரசியமாகவும் ஜாலியாகவும் இருந்தது. ஆனாலும் அதிகமான ரசிகர்கள் மும்மொழிக் கொள்கை எபிசோடு எதனால் ஒளிபரப்பு செய்யவில்லை என்று கேள்வி எழுப்பி கொண்டிருக்கின்றனர்.
போன வாரம் எபிசோடு
இப்படியான சூழ்நிலையில் இந்த வாரமும் பரபரப்புக்கு பஞ்சமில்லாத வகையில் தான் ஒரு தலைப்பில் விவாதம் நடைபெறுகிறது. அதாவது இஎம்ஐயில் பொருள்கள் வாங்குவது அதிகரித்துக் வருவதை வைத்து இஎம்ஐ தான் இன்றைய வாழ்க்கையில் இயல்பான ஒரு அங்கமாக இருக்கிறதா? என்ற விவாதம் நடைபெறுகிறது.
முதல் ப்ரோமோ
இதில் இஎம்ஐயில் பொருட்கள் மற்றும் பண உதவி பெறும் மக்கள் ஒரு பக்கமும், இஎம்ஐயில் வாங்க கூடாது என்று சொல்பவர்களும் விவாதிக்கிறார்கள். இந்த வாரத்திற்காக நான்கு ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் முதல் ப்ரோமோவில் ஒரு நபர் எனக்கு 60 லட்சத்துக்கு மேலே இஎம்ஐ இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். அதை தொடர்ந்து பேசியே இன்னொரு பெண் வீடு, கார் வீட்டுக்கு தேவையான பொருட்கள் எல்லாமே இஎம்ஐ தான் என்று சொல்ல, அதற்கு கோபிநாத் நம்மை தவிர எல்லா பொருள்களும் இஎம்ஐ தான் என்று கிண்டல் செய்கிறார்.
இரண்டாவது ப்ரோமோ
அதை தொடர்ந்து பேசிய இன்னொரு நபர் என்னுடைய பிள்ளைகளின் படிப்புக்காக இஎம்ஐ போட்டு இருக்கிறேன் என்று சொல்ல, அது குறித்து விளக்கத்தையும் கோபிநாத் கேட்டிருக்கிறார். அதுபோல இரண்டாவது ப்ரோமோவில் ஒரு நபர் மற்றவர்களிடம் கடன் கேட்க கூச்சமாய் இருக்கும்போது நம்மளுக்கு இஎம்ஐ சப்போர்ட் பண்றது என்று கூறியிருக்கிறார்.
இஎம்ஐயால் வரும் பிரச்சனை
அடுத்ததாக பேசிய பெண் நம்மால் காசு கொடுத்து ஒரு பொருளை உடனே வாங்க முடியாது ஆனால் இஎம்ஐ என்ற ஒரு ஆப்ஷன் இருக்கிறதுனால தான் நாம வாழுறோம் என்று சொல்கிறார். அதற்க்கு விமர்சிப்பவர்கள் அணியில் இருக்கும் ஒரு நபர் அது கமிட்மெண்ட் கிடையாது பிரஷர் என்று சொல்கிறார். அதுபோல அதே அணியில் இருக்கும் இன்னொரு பெண் இன்னிக்கு நீங்க இஎம்ஐ வாங்க ஆரம்பிச்சா அது தொடர்ச்சியா வாங்கணும் என்று உங்களுக்கு தோணும் என்று சொல்கிறார்.
கோபிநாத் கேட்ட கேள்வி
அதற்கு கோபிநாத் நாம சம்பாதிச்சு பொறுமையா வாங்கணும் என்று சொல்லிவிட்டு இஎம்ஐ மூலம் பொருட்கள் வாங்குபவர்களிடம், "என்னை ஏமாற்றும் விஷயத்தை நான் கேள்வி கேட்கணுமா? உஷாரா இருக்கணுமா?" என்று கேட்க, அதற்கு இஎம்ஐ வாங்கியவர்கள் அணியில் இருந்த ஒரு நபர் உஷாரா இருக்கணும் என்று சொல்கிறார்.
கோபிநாத் விளக்கம்
அதற்கு கோபிநாத் ஒரு பொருளை நீங்கள் எடுக்கும்போது இஎம்ஐ ஷார்ட்ஸ் என்று இருக்கும். ஆனால் அதற்கான விலை போடப்பட்டிருக்காது. இது வந்து இல்யூஷன். உங்களை அந்த பொருள் வாங்க வைப்பதற்காக செய்யும் முயற்சி என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். இந்த ப்ரோமோ இணையத்தில் பலருடைய பாராட்டு பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications