சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. சேனல் எடுத்த முக்கிய முடிவு! சூப்பர் மாற்றம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நேர மாற்றம் ஏற்படப்போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது வரைக்கும் 9 மணி முதல் ஒன்பது முப்பது வரைக்கும் ஒளிபரப்பாகி வந்த சீரியல் இனி 10 மணி வரைக்கும் ஒளிபரப்பாக போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
விஜய் டிவியில் டிஆர்பியில் முதலிடத்தில் இருந்து வரும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்கள். இந்த சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்த்த கதைகளும் இப்போது அடுத்தடுத்து நடந்து கொண்டே இருக்கிறது.

ரோகிணி இந்த சீரியலில் எவ்வளவோ தப்பு செய்கிறார் ஆனால் அவர் மட்டும் எந்த இடத்திலும் மாட்டாமல் தப்பித்துக் கொண்டே இருக்கிறார் என்பதுதான் பலருடைய கேள்விகளாக இருந்தது. ஆனால் இப்போது ரோகிணி அடுத்தடுத்து பிரச்சனையில் சிக்குகிறார். ஆனால் மொத்தமாக அவர் பற்றிய ரகசியங்கள் இப்போதைக்கு தெரிய வர வாய்ப்பு இல்லை.
ஆனால் ரோகிணியும் மனோஜும் ஜீவாவிடம் இருந்து வாங்கிய 30 லட்சம் பணம் பற்றிய விஷயம் முத்து மூலமாக குடும்பத்திற்கு தெரிய வந்திருக்கிறது. அதை தொடர்ந்து மலேசியாவில் இருந்து முத்துவின் காரில் இரண்டு பேர் வந்திருந்த நிலையில் அவர்களிடம் ரோகிணியின் அப்பாவை பற்றி விசாரிக்கலாம் என்று முத்து மீனா போட்ட பிளான் கடைசியில் பிளாப் ஆகிவிட்டது.
இப்போது ரோகிணிக்கு புது பிரச்சனை வந்திருக்கிறது. அதாவது இன்றைய எபிசோடில் ரோகிணிக்கு அவருடைய அம்மா வாடகைக்கு இருக்கும் வீட்டில் ஹவுஸ் ஓனர் போன் பண்ணுகிறார். ஆனால் அந்த நேரத்தில் ரோகிணி இல்லாததால் மனோஜ் போனை எடுத்து பேசுகிறார். மனோஜிடம் வாடகை வேண்டும் என்று அந்த நபர் கேட்டதால் மனோஜ் குழப்பம் அடைந்து ரோகிணி இடம் கேட்க எனக்கு வந்த போனை நீ எதற்காக அட்டென்ட் பண்ணுன என்று ரோகிணி கோபப்படுகிறார்.

இதனால் இந்த பிரச்சனை பற்றி விஜயாவிடம் சொல்வாரா என்ற கேள்விகளும் எழுகிறது. ஒருவேளை இது விஜயாவிற்க்கு தெரிய வந்தால் விஜயா ரோகிணி மீது சந்தேகப்பட வாய்ப்பு இருக்கிறது. இதே நேரத்தில் இந்த சீரியலில் அடுத்தடுத்து இனி எதிர்பாராத திருப்பங்கள் வர இருக்கிறது. ஏற்கனவே ரோகிணி மற்றும் மனோஜ் கதிர் என்ற நபரிடம் வீடு வாங்குகிறோம் என்று 30 லட்சம் பேர் ஏமாந்து இருக்கிறார்கள்.
இதனால் இந்த பிரச்சனை பற்றி விஜயாவிடம் சொல்வாரா என்ற கேள்விகளும் எழுகிறது. ஒருவேளை இது விஜயாவிற்க்கு தெரிய வந்தால் விஜயா ரோகினி மீது சந்தேகப்பட வாய்ப்பு இருக்கிறது. இதே நேரத்தில் இந்த சீரியலில் அடுத்தடுத்து இனி எதிர்பாராத திருப்புங்கள் வர இருக்கிறது. ஏற்கனவே ரோகிணி மற்றும் மனோஜ் கதிர் என்ற நபரிடம் வீடு வாங்குகிறோம் என்று 30 லட்சம் ஏமாந்து இருக்கிறார்கள்.
கதிரை கண்டுபிடிப்பதற்காக முத்து மீனா முயற்சி செய்தபோது ரோகிணி நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் சிட்டி இடம் உதவி கேட்டிருக்கிறார். இதனால் ரோகிணிக்கு புது பிரச்சனை வரப்போகிறதா? என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. இப்படியான நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி கிடைத்திருக்கிறது.
அதாவது இதுவரைக்கும் இந்த சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணி முதல் 9:30 மணி வரை ஒளிபரப்பாகி வந்தது. ஆனால் இப்போது ஒன்பது முதல் 10:00 மணி வரைக்கும் ஒரு மணி நேர எபிசோடாக இந்த சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. அதுவும் வரும் 20ம் தேதி திங்கள்கிழமை முதல் இந்த மாற்றம் வர இருக்கிறது.
இந்த வாரத்தோடு பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இருப்பதால் புது சீரியல் ஒளிபரப்பாகும் வரைக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் ஒரு மணி நேர எபிசோடாக ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications