Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேப்டன் பிரபாகரன் போது மரணத்தை தொட்ட விஜயகாந்த்! அந்த இடத்தில் நடந்த சம்பவம்! நெகிழ்ந்த ஆர்.கே செல்வமணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜயகாந்த் நடிப்பில் இயக்குனர் ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளியான 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம் 34 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த மறுவெளியீடு குறித்து இயக்குனர் செல்வமணி மற்றும் இப்படத்தின் நடிகர்களான ரம்யா கிருஷ்ணன் மன்சூர் அலி கான் போன்றோர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர்.

Vijayakanth Captain Prabhakaran RK Selvamani

படக்குழுவினர் மற்றும் நடிகர்கள்

கேப்டன் பிரபாகரன் திரைப்படம் விஜயகாந்தின் 100வது படம் என்பதால் இந்த படம் ரீ ரிலீஸ் செய்யப்படுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்தப் படத்தில் விஜயகாந்த் கதாநாயகனாக நடித்தார். சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். மேலும் நடிகை ரூபினி, ரம்யா கிருஷ்ணன், லிவிங்ஸ்டன் மற்றும் வில்லனாக மன்சூர் அலி கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

ஆர்.கே. செல்வமணியின் கடின உழைப்பு

'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம் தற்போது 'கூலி' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் 400 திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இதுவே படக்குழுவினருக்கு பெரிய வெற்றி என்று செல்வமணி கூறினார். "இந்தப் படம் வெளியான போது விஜயகாந்தின் 100வது படம் என்பதால் சென்டிமென்டாக ஓடாது என்று சிலர் சொன்னார்கள். அது போலவே நான் விஜயகாந்துடன் இணைந்த இரண்டாவது படம் என்பதாலும் ஓடாது என்று சிலர் கூறினர். ஆனால் அனைத்தையும் முறியடித்து இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது" என்று செல்வமணி கூறினார்.

வனப்பகுதியில் படப்பிடிப்பு

"இந்தப் படம் 290 நாட்களுக்கு மேலே படமாக்கப்பட்டது. அதில் 100 நாட்களுக்கு மேலே காட்டில் தான் படப்பிடிப்பு நடைபெற்றது. அங்கு எந்த அடிப்படை வசதிகளும் கிடையாது. நாங்கள் தான் அந்த காட்டிற்கு பொருட்களை கொண்டு போவதற்காக ரோடு போட்டு சென்றோம்" என்று அவர் கூறினார்.

இந்த படம் எடுத்த காலகட்டத்தில் எந்த ஒரு வசதியும் கிடையாது CG, ட்ரோன் கேமரா என்று எந்த வசதியும் கிடையாது. ஒரு காட்சியில் 2000 பேர் நடிக்க வேண்டும் என்றால் அந்த காட்சி எடுப்பதற்காக 2000 பேரையும் நேரில் அழைத்து வரவேண்டும். அப்படி இந்த படத்தில் எடுக்கப்பட்ட ஒவ்வொரு காட்சிக்கும் நாங்கள் அதிகமாக சிரமப்பட்டு இருந்தோம்.

விஜயகாந்த் சார், மன்சூர் அலிகான், ரம்யா கிருஷ்ணன் மற்றும் எங்களுடன் பணியாற்றிய டெக்னீசியன்கள் என எல்லோருமே கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். உயிரைக் கொடுத்து படம் எடுத்து முடித்தோம். இந்த படம் எடுக்கும்போது இரண்டு, மூன்று பேர் உயிரை கூட இழந்து இருக்கிறார்கள். ஏன் விஜயகாந்த் சார் கூட இரண்டு மூன்று முறை மரணத்தின் விளிம்பு வரை சென்று வந்தார்.

எனக்கும் அதுபோல நடந்தது ஆனாலும் எங்கள் அனைவரின் குறிக்கோளும் இந்த படம் பிரமாண்டமாக படமாக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். 100 நாட்கள் காட்டுக்குள் தான் பயணம் செய்தோம். அங்கு ரூம் கிடையாது, கேரவன் கிடையாது, பாத்ரூம் இருக்காது இதையெல்லாம் உங்களுக்கு ஓகே என்றால் படம் பண்ணுவோம் என்று விஜயகாந்த் சாரிடம் முதலில் நான் சொன்னேன். அதற்கு அவர் எனக்கு ஓகே என்று சொல்லிவிட்டார். அவரே ஓகே சொன்ன பிறகு மற்றவர்களும் ஓகே சொல்லி விட்டார்கள். அதனால் தான் அந்த படத்தை எங்களால் வெற்றி படமாக எடுக்க முடிந்தது என்று
ஆர் கே செல்வமணி பேசி இருந்தார்.

ரம்யா கிருஷ்ணன்

"நான் சினிமாவில் அறிமுகமான போது தமிழில் வாய்ப்புகள் வராததால் தெலுங்கு பக்கம் சென்றேன். அங்கு ஒரு சில படங்கள் நடித்துவிட்டு 'கேப்டன் பிரபாகரன்' படத்தில் இரண்டாவது கதாநாயகி என்று தான் சொன்னார்கள். ஆனால் 'ஆட்டமா தேரோட்டமா' பாடல் இப்போது வரைக்கும் எவர் கிரீன் பாடலாக உள்ளது. விஜயகாந்த் தான் எனக்கு தமிழில் ஒரு நல்ல பெயரை பெற்றுத் தந்தார்" என்று ரம்யா கிருஷ்ணன் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

மன்சூர் அலி கான்

இந்தப் படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமான நடிகர் மன்சூர் அலி கான், "என்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய விஜயகாந்தின் படம் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது" என்று கூறினார்.அதைத்தொடர்ந்து பேசிய விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், "இந்தப் படம் வெளியான போது அப்பா இருந்திருந்தால் ரொம்பவும் சந்தோஷப்பட்டு இருப்பார்" என்று கண்கலங்கிப் பேசினார்.

பொதுமக்களின் வரவேற்பு

'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுவதற்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு கொடுத்துள்ளனர். விஜயகாந்த் மறைந்த நிலையில் அவரது திரைப்படம் மீண்டும் திரைக்கு வருவது அவரது உழைப்புக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+