ஸ்ரீதேவியை வீட்டில் எல்லோருக்கும் பிடிக்க காரணம் இதுதான்! ஆனால் அவங்க தான் பயம்.. அருண் விஜய் ஓப்பன் அப்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜயகுமாரின் மகளான ஸ்ரீதேவியை பற்றி விஜயகுமாரின் மகன் அருண் விஜய் பேட்டி ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் ஸ்ரீதேவியை எங்க வீட்டில் எல்லோருக்கும் பிடிக்க இதுதான் காரணம் என்று ரகசியத்தை உடைத்து இருக்கிறார். அதோடு ஸ்ரீ தேவியை எல்லோரும் வீட்டில் ஸ்ரீ பாப்பா என்று தான் இப்போதும் அழைத்துக் கொண்டிருக்கிறோம் என்றும் அதில் கூறியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் எங்கள் குடும்பத்திலேயே ரொம்ப டெரரான ஆள் என்றால் யார் என்பது பற்றியும் அந்த பேட்டியில் அருண் விஜய் பேசி இருக்கும் நிலையில் இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Vijayakumars son Arun Vijay shared about Sridevi goog character

அந்த வகையில் நடிகர் விஜயகுமாரின் குடும்ப செய்திகள் தான் இணையத்தில் அதிகமாக காண முடிகிறது. சமீபத்தில் அவருடைய வீட்டில் பிரமாண்டமாக நடைபெற்ற விஜயகுமாரின் பேத்தியின் திருமணம் பலரையும் வியக்க வைத்திருந்தது. விஜயகுமாரின் வீட்டில் எல்லோருமே நடிகர்களாக இருக்கும் பட்சத்தில், அந்த திருமணத்தில் விதவிதமான மேக்கப் மற்றும் வண்ண வண்ண ஆடையில் அனைவரும் ஜொலித்ததை பார்த்து நமக்கு பிடித்த நடிகர்களா இவங்க என்று பலரும் வியந்து பார்த்து இருந்தனர்.

அதோடு விஜயகுமார் வீட்டு திருமண புகைப்படங்கள் தான் இணையத்தில் அதிகமாக பரவி வருகிறது. விஜயகுமார் வீட்டு திருமண பங்க்ஷனில் பல பிரபலங்களும் கலந்து கொண்டிருந்தனர். இப்படியான நிலையில் நடிகர் விஜயகுமாரின் மகனான அருண் விஜய் குடும்பத்தோடு பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vijayakumars son Arun Vijay shared about Sridevi goog character

அதில் அந்த வீடியோவில் எங்க வீட்டில் ரொம்ப செல்லமான பொண்ணு என்றால் ஸ்ரீ பாப்பா (ஸ்ரீதேவி) தான் என்று அருண் விஜய் கூறி இருக்கிறார். அதற்கு காரணம் அவர் எந்த விஷயமாக இருந்தாலும் அடம்பிடித்து வாங்கி விடுவார். அதுபோல தனக்கு என்ன தேவையோ அதை எமோஷனலாக பிளாக்மெயில் பண்ணியும் வாங்கி விடுவார் என்று அருண் விஜய் பேசியிருக்கும் நிலையில் பக்கத்தில் இருந்த விஜயகுமார் ஆமாம் எங்க வீட்டில எனக்கு மட்டுமல்ல ஸ்ரீதேவி வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் செல்லம்.

வீட்டில் கடைசி பிள்ளையாக இருப்பதால் பொதுவாக எல்லோருக்கும் செல்லமாகத்தான் இருப்பார்கள். ஆனால் ஸ்ரீதேவி ரொம்ப நல்ல பொண்ணு அது போல நியாயமா நடந்துக்குவ அதனால எல்லாருக்கும் பிடிக்கும் என்று சொல்லி இருக்கிறார். அதோடு எங்க வீட்டில் ரொம்பவே டெரரான ஆளு என்றால் கவிதா அக்கா தான் வீட்டில் மூத்த பெண்ணான கவிதா அக்கா தான் எல்லோருக்கும் டெரர் பீஸ்.

Vijayakumars son Arun Vijay shared about Sridevi goog character

எனக்கு அக்காவை ரொம்ப பிடிக்கும் ஆனால் அக்காகிட்ட அதிகமாக பயமும் இருக்கும் அம்மாவை கூட நான் சில நேரங்களில் சமாளித்து விடுவேன் ஆனால் அக்காவை சமாளிக்க முடியாது. அக்கா, அருண்... என்று கூப்பிடும் போது அதில் இருக்கும் கோபத்தை பார்த்தால் நான் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திணறி விடுவேன்.

இது பல நேரங்களில் நடக்கிறது தான் ஆனால் இப்போது கொஞ்சம் குறைந்து இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்த மாதிரி அக்கா இப்போ இல்ல. இப்போ கொஞ்சம் கோபத்தை குறைத்து இருக்கிறார் என்று அந்த பேட்டியில் அருண் விஜய் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அப்போது பக்கத்தில் இருந்த ஸ்ரீதேவி என்னை வீட்டில் எல்லோரும் ஸ்ரீ பாப்பா என்று கூப்பிடுவாங்க.

அதுதான் எனக்கு பிடிக்கும் ஆனால் இப்போ எனக்குன்னு ஒரு பாப்பா வந்ததும் அந்த பாப்பாவையும் பாப்பா என்று கூப்பிடுவது எனக்கு பொறாமையா இருக்கு என்று கலகலப்பாக அவர் பேச இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதற்கு அதிகமானோர் இவர்களுக்கு மட்டும் வயசே ஆகாதா அப்போ பார்த்த மாதிரியே இப்போதும் இருக்காங்களே என்று வழக்கமான சந்தேகத்தை இப்போதும் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+