Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சர்வைவர் பைனலில் நடந்தது இதுதான்! அந்த விஷயத்தை மறைச்சிட்டாங்க! ஹார்ட் டிஸ்க் காணாமல் போச்சு! விஜி போஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜீ தமிழில் சர்வைவர் நிகழ்ச்சி நடந்தது. அதன் நிகழ்ச்சியை ஆக்ஷன் கிங் அர்ஜுன் தான் தொகுத்து வழங்கி இருந்தார். அந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக நடிகை விஜி என்ற விஜயலட்சுமி வெற்றி பெற்றார். அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான்கு வருடம் கழித்து அந்த நிகழ்ச்சி பற்றி இப்போது வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சர்வைவர் நிகழ்ச்சியின் பைனலில் என்ன நடந்தது? என்று அந்த பதிவில் அவர் கூறி இருக்கிறார். அதோடு சில குற்றச்சாட்டுகளையும் விஜி வைத்திருக்கும் நிலையில் இது விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

பொதுவாக சின்னத்திரையில் டிஆர்பி பெறுவதற்காக சில வித்தியாசமான ரியாலிட்டி ஷோக்கள் நடத்தி வருகிறார்கள். அதுபோல தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் அதிகமான விமர்சனங்களையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. அந்த வரிசையில் ஜீ தமிழில் சர்வைவர் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 100 நாட்கள் ஒரு வீட்டிற்குள் சொகுசாக வாழ்ந்து கொண்டு அவர்கள் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள்.

Vijayalakshmi Survivor Zee Tamil

சர்வைவர் போட்டியாளர்கள்

ஆனால் சர்வைவர் நிகழ்ச்சியில் அதற்கு நேர் மாறாக இருந்தது. 100 நாட்கள் கடல், காட்டுப்பகுதியில் வாழவேண்டும், எந்த அடிப்படை வசதியும் இருக்காது. அவர்களுடைய உணவு தண்ணீர் உட்பட அடிப்படை தேவைகளுக்கு கூட டாஸ்குகள் செய்து வெற்றி பெற்றால் தான் கிடைக்கும் என்ற இக்கட்டான சூழ்நிலை இருந்தது. இதில் தமிழ் சினிமா பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டனர். அதிலும் இந்த நிகழ்ச்சியில் இந்திரஜா சங்கர், விஜயலட்சுமி, ஸ்ருஷ்டி டாங்கே, நந்தா துரைராஜ், இனிகோ பிரபாகரன், அம்சந்த் கான், உமாபதி, விக்ராந்த், நாராயணன், சரண், வனேஷா, ராம், காயத்ரி, லட்சுமி பிரியா உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் விஜயலட்சுமி தான் டைட்டில் வெற்றி பெற்று இருந்தார்.

சர்வைவர் டைட்டில் வின்னர்

விஜயலட்சுமி டைட்டில் பெற்றது அப்போது அதிகமான விமர்சனங்களையும் பெற்றிருந்தார். அது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் நான்கு வருடம் கழித்து வெளியிட்ட பதிவு இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில் "நாங்கள் பைனலுக்கு சில நாட்களுக்கு முன்பு மெயின் தீவில் இருந்தோம். அப்போது அர்ஜுன் சார் எங்களிடம் கோவிட் டெஸ்ட் எடுத்தீங்களா? என்று கேட்டார். அப்போதுதான் மூன்றாவது அலை முடிந்த நேரம்.

போட்டியாளர்கள் உட்பட மற்ற ஊழியர்களும் ஸ்வாப் டெஸ்ட் செய்து கொண்டோம். இதில் உமாபதி, விக்ரம், வனேசாவுக்கு தொற்று உறுதியானது அதனால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் திடீரென எல்லோருக்கும் பதட்டம் ஏற்பட்டது. நந்தா, சரண் மற்றும் ஐஸ்வர்யா தனி தீவில் இருந்ததால் அவர்களுக்கு இந்த பிரச்சனை எதுவும் தெரியாது. அப்போது போட்டி இரண்டு நாட்களுக்கு நிறுத்தப்பட்டது.

நிகழ்ச்சி நிறுத்தம்

எங்களை தனியாக ஒரு அறையில் அழைத்து சென்று டெஸ்ட் எடுத்து கசாயம், சாப்பாடு உட்பட எல்லா சேவைகளையும் தந்தார்கள். ஆனால் அது எங்களுக்கு அமைதியை தரவில்லை. இரண்டு நாட்கள் நாங்கள் அந்த அறையில் தான் இருந்தோம். அது எங்களுக்கு சிறை போல இருந்தது. அப்போது நிகழ்ச்சி குழுவினர்களின் பிளான் என்னவென்றால் பாதிக்கப்பட்டவர்களை தவிர்த்து இந்த நிகழ்ச்சியை நடத்துவது தான். ஆனால் அங்கிருந்த போட்டியாளர்கள் எல்லோருக்குமே வீட்டிற்கு போக வேண்டும் என்பது போலத்தான் இருந்தது. நானும் என்னுடைய கணவரிடம் பேச வேண்டும் என்ற தவிப்பில் இருந்தேன்.

கடைசி முயற்சி

பிறகு குழுவினரிடம் என்னுடைய கணவரிடம் பேச எனக்கு அனுமதி கிடைத்தது. அப்போது நான் அவரிடம் பேசி சமாதானம் செய்தேன். ஆனால் அவர் நீ உடனே கிளம்பியாக வேண்டும் என்று கராராக சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் கடைசி கவுன்சிலிங்கிற்கு ஒருநாள் இருந்தது என் டீமில் நான்கு பேர் இல்லாததால் என்ன ஈசியாக டார்கெட் வைத்து தூக்கி விட்டனர். நான் ஜட்ஜ் ஆகி போனை வாங்கி விடுவேன் என்று சொன்னேன் ஆனால் என் கணவர் உன்னால் ஜெயிக்க முடியாது, யாரோ ஒருத்தர் வெற்றி பெற நீ கைதட்ட அங்கு இருக்க வேண்டியதில்லை என்றார்.

Vijayalakshmi Survivor Zee Tamil

வீடியோ கிளிப் காட்டவே இல்லை

ஆனாலும் நான் அவரை சமாதானம் செய்தேன். பிறகு குழுவினரிடம் நான் பைனலிஸ்ட் ஆக முடியுமா? என்று கேட்டேன் அதற்கு அவர்கள் நாங்கள் உறுதி தர முடியாது என்று சொன்னார்கள். நானும் லேடி கேஷும் ஒரு அறையில் இருந்தோம் பக்கத்து அறையில் விக்ராந்த் மற்றும் உமாபதி இருந்தனர். அவர்களிடம் நாங்கள் பேசும்போது நாங்க நிகழ்ச்சியை விட்டு விலக இருக்கிறோம் நீங்களும் அப்படியே செய்யுங்க, ஒற்றுமையாய் இருக்கணும் என்று சொன்னார்கள். இந்த எபிசோடுகள் ஒளிபரப்பான போது கதை எனக்கு எதிராக மாறிவிட்டது. என்னை ஏமாற்றுக்காரர் என்று சித்தரிக்க தொடங்கினார்கள். உண்மையை நிரூபிக்கும் மிக முக்கியமான அந்த வீடியோ கிளிப்பை அவர்கள் வெளியே காட்டவே இல்லை. அது பற்றி நான் குழுவினரிடம் கேள்வி கேட்டபோது அந்த டேப் காணாமல் போய்விட்டதாக சொன்னார்கள்.

Vijayalakshmi Survivor Zee Tamil

காணாமல் போன ஹார்ட் டிஸ்க்

அந்த எடிட் செய்யப்பட்ட வீடியோக்கள் எனக்கு சோசியல் மீடியாவில் கடுமையான நெகட்டிவை உருவாக்கியது. சத்தியமா சொல்றேன் ஒவ்வொரு ஸ்கிரிப்டுக்கும் ஒரு வில்லன் தேவை. சர்வைவர்ல என்னை விட வலிமையான வில்லன் வேறு யாரு இருக்கா? அதனால் தான் அவர்கள் என்னை தேர்ந்தெடுத்தார்கள். வில்லனாக நடிக்க அது ஒரு வகையில் கூட மரியாதை தான்" என்று அந்தப் பதிவில் விஜி தெரிவித்திருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+