விஐபி.. இடுப்பழகியின் கிசுகிசு.. தடுமாறிய ராஜு சுந்தரம்.. கோபப்பட்ட கமல்? ஆல்தோட்ட பூபதியின் சக்சஸ்
சென்னை: பிரபல நடிகை சிம்ரன் ஆல்தோட்ட பூபதி பாடலுக்கு நடனம் ஆடியது குறித்தும், சிம்ரனை சுற்றி வந்த கிசுகிசுக்களை பற்றியும் விலாவரியாக கூறியிருக்கிறார் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு.. இந்த பேட்டிதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள செய்யாறு பாலு, "அன்றைய காலகட்டத்தில் பெரிய கதாநாயகிகள், ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆட மாட்டார்கள். இதற்கென கவர்ச்சி நடிகைகள் இருந்தனர்..

ஆல்தோட்டா பூபதி: ஆனால், ஆல்தோட்டா பூபதி பாடலுக்கு ஆட வேண்டும் என்று சிம்ரனிடம் கேட்டபோது, ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடணுமா? என்று சொல்லி மறுத்துவிட்டாராம். ஆனால், விஜய் மீது தனக்குள்ள மரியாதை காரணமாக, ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆட ஒப்புக் கொண்டுள்ளார். அதற்கு பிறகு அந்த பாட்டை கேட்டதுமே அவருக்கும் பிடித்துவிட்டது. பட்டிதொட்டியெங்கும் ஆல்தோட்டா பூபதி ஹிட்டானது.
இதற்கு பிறகு ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடுவதற்கு நிறைய வாய்ப்புகள் வந்துள்ளபோதும், அதையெல்லாம் சிம்ரன் மறுத்துவிட்டாராம். ஆனால், அன்று சிம்ரன் துவங்கி வைத்தது, இன்று புஷ்பா பாடல்வரை ஹிட்டாகி வருகிறது. இந்த ஒரு பாடல் நடனத்துக்கு பல ஹீரோயின்கள் காத்திருந்து சான்ஸ் பெறுகிறார்கள்.
கிசுகிசுக்கள்: அன்று, காதல் கிசுகிசுக்களில் அதிகமாகவே சிக்கியவர் சிம்ரன்.. இன்று நயன்தாராவை நாம் எப்படி பார்க்கிறோமோ, அதுபோல, அன்று சிம்ரன் இருந்தார்.. எல்லாரையுமே எளிதாக நம்பிவிடுவார்.. அன்பாகவும், அரவணைப்பாகவும் இருந்தால் அப்படியே அவர்களை முழுசாக நம்பிடுவார். முதல் படத்தில் நடித்தபோது அப்பாஸுடன் கிசுகிசுக்கப்பட்டார்.. அவருடன் காதல், திருமணமே செய்து கொண்டார்கள் என்றெல்லாம் சொன்னார்கள்.
அடுத்ததாக டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரத்துடன் காதல் என்றார்கள்.. இருவரும் சேர்ந்து ஐலவ்யூ டா என்ற கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படத்தை எடுத்திருந்தார்கள். திருமணம் வரை செல்லவும் முடிவு செய்திருந்தனர். ஆனால், பிரபுதேவா திருமண விவகாரம் காரணமாக, வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது.. இதனால் ராஜூ சுந்தரத்துக்கு, சிம்ரனை திருமணம் செய்ய சம்மதிக்கவில்லை.
பஞ்சதந்திரம்: இதற்கு பிறகு, உலகநாயகன் கமல்ஹாசனுடன் சிம்ரன் கிசுகிசுக்கப்பட்டார்.. பஞ்ச தந்திரம், பம்மல் கே சம்மந்தம் 2 படங்களிலும் நடித்தார்.. இவர்கள் 2 பேரை பற்றியும் எல்லா பத்திரிகைகளிலும் தனிக்குடித்தனம் சென்றுவிட்டார்கள் என்றெல்லாம் கவர் ஸ்டோரி எழுதும் அளவுக்கு சென்றுவிட்டன. இதனால் கோபப்பட்ட கமல்ஹாசன், 'என் ஜன்னலை ஏன் எட்டிப்பார்க்கறீங்க" என்றார்..
இப்படி பல கிசுகிசுக்கள் அன்று சிம்ரன் மீது வந்தாலும், தனக்கென மரியாதையை இன்றுவரை தமிழக ரசிகர்களிடம் பெற்று வருகிறார் சிம்ரன்" என்றெல்லாம் கூறியிருக்கிறார் செய்யாறு பாலு.












Click it and Unblock the Notifications