Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஷோபா அம்மா நெஞ்சில் இறங்கிய இடி.. தொட்டபெட்டா ரோட்டு மேல! நண்டு ரசம் நினைவில்லயா? அட்வான்ஸ்?: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமாக்காரர்கள் என்றாலே அவர்கள் உயர்ந்த மனிதர்கள் என்ற நம்பிக்கையில் பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.. ஆனால், சினிமாவில் பலரும் பல முகங்களை காட்டக் கூடியவர்கள் என்பதை தெரியப்படுத்த நினைக்கிறேன்.. அந்தவகையில், 20 வருடமாக எனக்குள் காயமாக இருந்து வரும் விஷயத்தை பேச நினைக்கிறேன்" என்று மனம் திறந்து பேசியிருக்கிறார் பிரபல ஆஸ்கார் மூவிஸ் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு.. அத்துடன், விஜய்யை வைத்து எடுக்கப்பட்டு, தங்களது சொந்த தயாரிப்பான, விஷ்ணு படத்தின்போது நடந்த கசப்பான சம்பவத்தையும் ஆதங்கத்துடன் பேட்டி ஒன்றில் பாலாஜி பிரபு நினைவு கூர்ந்துள்ளார்.

AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, சினிமாக்காரர்கள் என்றாலே அவர்கள் உயர்ந்த மனிதர்கள் என்ற நம்பிக்கையில் பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.. ஆனால், சினிமாவில் பலரும் பல முகங்களை காட்டக்கூடியவர்கள் என்பதை தெரியப்படுத்த நினைக்கிறேன்.. அந்தவகையில், 20 வருடமாக எனக்குள் காயமாக இருந்து வரும் விஷயத்தை பேச நினைக்கிறேன்..

Shoba Thotta Petta Rottu Mela Mutta Parotta balaji prabhu says about vijay amma Shoba

எஸ்ஏசி ஷோபா

தளபதி விஜய்யின் 5வது படத்தை நான்தான் தயாரித்தேன்.. அதுவரை அவரது அப்பாதான், விஜய்யை வைத்து படம் எடுத்து கொண்டிருந்தார்.. வெளித்தயாரிப்பில் யாராவது வந்து தங்களது மகனை வைத்து படம் எடுக்க முன்வரமாட்டார்களா? என்று எஸ்ஏசி, ஷோபா அம்மா அதிகமாகவே எதிர்பார்த்தனர்.. அந்தவகையில் விஜய்யை வைத்து படம் எடுத்தது நான்தான்..

விஷ்ணு என்ற படத்துக்காக விஜய்யை கமிட் செய்து 3 லட்சம் சம்பளம் பேசினோம்..1 லட்சம் அட்வான்ஸ் தந்தாகிவிட்டது.. மூணாறில் ஷூட்டிங் நடந்தது.. எஸ்ஏசி இயக்கினார்... விஜய்யும், ஷோபா அம்மாவும் சேர்ந்து தொட்டபெட்டா ரோட்டு மேல பாட்டை இணைந்து பாடினார்கள்.. பாடல்கள் எல்லாமே ஹிட்.. எங்களுக்கும் நல்ல லாபம், பெயரும் கிடைத்தது.

நண்டு ரசம்

ஷோபா அம்மா அபரிமிதமான பாசத்தை காட்டக்கூடியவர்.. அன்றிருந்த விஜயவாகினி ஸ்டுடியோவில்,ஷூட்டிங் நடந்தபோது, ஷோபா அம்மாவே சமைத்து, எங்களுக்கெல்லாம் சாப்பாடு கொண்டு வருவார்.. நீயும் விஜய் மாதிரி எனக்கு பையன்தான் என்பார்.. எனக்கு சைனஸ் பிரச்சனை இருந்ததால் நண்டு ரசம் வைத்து கொண்டுவந்ததை மறக்கவே முடியாது.

விஷ்ணு படம் முடியும் தருவாயிலே, மீண்டும் விஜய்யை வைத்துபடம் எடுக்க முடிவு செய்தோம்.. அட்வான்ஸ் தர வீட்டுக்கு வருகிறோம் என்று சொல்லிவிட்டு, நானும் என்னுடைய அப்பாவும் விஜய் வீட்டுக்கு சென்றோம். 1 லட்சம் தந்தோம்.. வீட்டு ஹாலில் இருந்த வேளாங்கண்ணி மாதா சிலை முன்பு, எஸ்ஏசி, ஷோபா அம்மா, விஜய் 3 பேரும் சேர்ந்து அட்வான்ஸ் வாங்கினார்கள்.

வாழ்க்கையில் நன்றி

"விஷ்ணு படத்தின் மூலமாக என் மகனுக்கு வாழ்க்கையை தந்திருக்கீங்க, அந்த நன்றியை மறக்க மாட்டோம், சீக்கிரமாகவே இந்த படத்தை முடித்து தருகிறோம்" என்று ஷோபா அம்மா சொன்னார்..

இதற்கு பிறகு, விஜய்க்கு ஒன்ஸ்மோர், கோயம்புத்தூர் மாப்ளை உள்ளிட்ட படங்கள் வெளியாயின.. அப்போது படத்தை துவங்கலாம் என்று கேட்டதற்கு, ஒன்ஸ் மோர் படத்தில் விஜய் புக் ஆகியிருக்கிறார்.. பிரியமானவளே படத்தில் புக் ஆகியிருக்கிறார், அந்த படம் முடியட்டும், என்று தள்ளி போட்டுகொண்டே வந்தார்கள்.. பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை என்று படங்கள் மட்டும் ரிலீஸ் ஆகிகொண்டேயிருந்தது.

கடிதம் எழுதிய அப்பா

காவேரி தெருவிலிருந்த ஆபீசில், ஒவ்வொருமுறையும் நாங்கள், படவிஷயமாக பேச போவோம்.. நீண்ட நேரம் காத்திருப்போம்.. ஆனால், சந்திக்க முடிவதில்லை.. எஸ்ஏசி எங்களை அவாய்ட் செய்வது போல தெரியவும், விஜய்க்கு ஒரு கடிதம் எழுதினார் என்னுடைய அப்பா.. அதில் அட்வான்ஸ் வாங்கி, இன்னும் ஷூட்டிங் ஆரம்பிக்கவில்லை என்பதை நினைவூட்டினார்.

கடிதம் ஒருவேளை கிடைக்காமல் போய்விடுமோ என்று நினைத்து ஞானம் என்ற அசிஸ்டெண்ட் டைரக்டரிடம் கடிதத்தை தந்து அனுப்பினார். விஜய்யிடம் கடிதம் தந்தும், அதற்கு பிறகு 6 மாதமாகியும் பதில் இல்லை.. எனவே, ஷோபா அம்மாவிடம் என்னை பேச சொன்னார் என் அப்பா..

யாருன்னு தெரியலயே

உடனே நான் ஷோபா அம்மாவின் பர்சனல் நம்பருக்கு போன் செய்து பேசினேன்.. ஆஸ்கார் மூவிஸ் விஷ்ணு பட தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேசறேன் என்றேன்? அதற்கு ஷோபா அம்மா, விஷ்ணு பட தயாரிப்பாளரா? பாலாஜியா? என்று சில வினாடி யோசித்தார்.. இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.. நண்டு ரசம் அடிக்கடி எனக்கு வெச்சு தருவீங்களே? என்றேன். நண்டு ரசம் நிறைய பேருக்கு வச்சு தருவேன், ஆனா நீங்க யாருன்னு தெரியலயே என்றார்.

தொட்டபெட்டா பாட்டு தம்பியுடன் பாடினீங்களே? என்றேன்.. அதற்கு அவர், "நான் தம்பி கூட நிறைய பாடியிருக்கேனே? இப்ப கூட ஒன்ஸ்மோர் படத்தில் ஊர்மிளா பாட்டு பாடியிருக்கேன்" என்றார்.

கார் டிரைவர்

அத்துடன்போனை வைத்துவிட்டேன்.. ஒரு மணி நேரத்தில் என் அப்பாவின் ஆபீசுக்குள் நுழைந்தால், விஜய் வீட்டு கார் டிரைவர் மூலமாக 1 லட்சம் ரூபாய் பணம் திருப்பி தந்திருந்தார்கள்.. என்னை யாரென்று தெரியவில்லை சொல்லிவிட்டு, பணத்தை திருப்பி தந்தார்கள்.. ஆனால், முறைப்படி பணத்தை அவர்கள் வந்து தந்திருக்க வேண்டும். ஆனால், டிரைவர் மூலம் தந்திருந்தது, என் அப்பாவுக்கு கோபம் வந்தது.

உடனே எஸ்ஏசிக்கு போன் செய்து, "அட்வான்ஸ் வாங்கிட்டு இப்படியெல்லாம் எங்களை கேவலப்படுத்தாதீங்க.. உங்க டிரைவரிடமே அட்வான்ஸ் பணத்தை திருப்பி தந்துவிடுகிறேன், நீங்களே வைத்து கொள்ளுங்கள் என்று 1 லட்சத்தை திருப்பி தந்துவிட்டார்.

இன்றைக்கு காசு, பணம் புகழ் என்ன வேணுமானாலும் அவர்கள் அடைந்திருக்கலாம், ஆனால், ஒரு அன்பை கொட்டிவிட்டு, அது உண்மை கிடையாது பொய்ன்னு சொன்னாங்களே? அந்த வேதனை, அந்த ரணம் எனக்கு எந்த காலத்திலும் ஆறவே ஆறாது.. அத்தனையும் நடிப்பா லதா? என்று புதிய பறவையில் சிவாஜி கேட்பாரே? அதுதான் நினைவுக்கு வருகிறது" என்றெல்லாம் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+