விஷ்ணு- சம்யுக்தா பிரச்சனைக்கு காரணம் "நிறைமாத நிலவே” ரவியா..? வெளியான ஆடியோ
சென்னை: சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் சம்யுக்தா தன்னை காதலித்துக் கொண்டிருக்கும் போது இன்னொரு நபரோடு பேசிக் கொண்டிருந்த எவிடென்ஸ் ஆடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
நான் பிரச்சனையை இவ்வளவு பெரியதாக கொண்டு செல்ல வேண்டாம் என்று நினைத்தேன் ஆனால் என்னை பற்றி தவறாக தொடர்ந்து சம்யுக்தா பேசிக் கொண்டிருப்பதால் இந்த ஆடியோவை வெளியிட்டு இருக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார்.

தற்போது சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சின்னத்திரை நடிகர்களான விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா குடும்ப பிரச்சனை சின்னத்திரை ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. எட்டு மாதங்களாக காதலித்து பின்பு கடந்த மார்ச் மாதம் தான் சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் திருமணம் செய்திருந்தனர்.
இந்த ஜோடி காதலிக்க தொடங்கி சில மாதங்களுக்கு பிறகு தான் தங்களுடைய காதலையும் சமூக வலைத்தளத்தில் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் தற்போது இவர்களுடைய குடும்ப பிரச்சனையை இருவரும் மாறி மாறி சமூக வலைத்தளத்தில் லைவில் போட்டு உடைக்கின்றனர். இதை தொடர்ந்து சம்யுக்தா தன்னை காதலிக்கும் போது இன்னொரு நபரோடு பேசிக் கொண்டிருந்தார். அதற்கு ஆதாரம் இந்த ஆடியோ தான் என்று விஷ்ணுகாந்த் ஆடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த ஆடியோவில் சம்யுக்தா சின்னத்திரையில் உள்ள ஒரு நபரிடம் அண்ணா என்று அந்த ஆடியோவில் பேசியிருக்கிறார். அதில், அவர் நடித்த நிறைமாத நிலவே என்ற youtube தொடரில் அவரோடு கதாநாயகனாக நடித்த ரவியை தான் ஆரம்பத்தில் காதலித்திருக்கிறார். இருவர்கள் இருவருக்கும் காதலிக்கும் போது ரவி சம்யுக்தாவிடம் தவறாக நடக்க முயற்சி செய்திருக்கிறார். அதை தன்னுடைய அம்மா மற்றும் தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் சிலரிடமும் கூறி இருக்கிறார். அப்பொழுது சம்யுக்தா பக்கத்தில் தப்பு இல்லை என்பதை புரிந்து கொண்ட அவர்கள் சம்யுக்தா இந்த சூழ்நிலையில் இருந்து வெளிவர வேண்டும் என்றும் மனதை மாற்ற வேண்டும் என்றும் பல முயற்சிகளை எடுத்து இருக்கின்றனர்.
ஆனால் சம்யுக்தா அந்த அண்ணாவிடமும் நான் ரவியை வெறுத்து விட்டேன் என்று கூறிவிட்டு ரவியிடம் சாட் செய்து தாங்கள் வெளியே செல்லும் இடங்களைப் பற்றி சொல்லியும் மற்றும் பல நெருக்கமான சாட்டிங் செய்து இருக்கிறார். அது பற்றி சம்யுக்தாவின் அந்த அண்ணன் ஒருவருக்கு தெரிய வந்திருக்கிறது.
அந்த நபர் சம்யுக்தாவிடம் நீ எங்களிடம் ரவி உன்னிடம் தவறாக நடந்து கொண்டான் என்று கூறிவிட்டு அவனிடம் எதற்காக உன்னை மறக்க முடியவில்லை என்று சாட் பண்ணி இருக்க என்று கேட்கிறார். அதற்கு சம்யுக்தா நான் எனக்கான எவிடென்ஸை அவனுடைய வாயிலிருந்து பெற வேண்டும் என்பதற்காகத்தான் அவனுக்கு சாட் செய்தேன். ரவி என்னிடம் தவறாக நடந்து கொண்டான் என்பதை சொல்ல வைக்க வேண்டும் என்று தான் நான் அப்படி சேட் செய்தேன் என்று கூறி இருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் தான் ரவியை காதலித்த விஷயத்தை விஷ்ணுகாந்திடம் கூறவில்லை என்றும் விஷ்ணுகாந்த் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்த விஷயத்தை என்னிடம் சொன்னார் ஆனால் அவர்களுக்குள் என்ன நடந்தது என்பதை பற்றி என்னிடம் சொல்லவில்லை என்றும் கூறியிருந்தார். அதற்கு சம்யுக்தாவின் அண்ணன் அப்போது நீ விஷ்ணுகாந்துக்கு துரோகம் செய்கிறாயா? அவரை ஏமாற்றுகிறாயா? என்று அடுக்கடுக்காக கேள்விகளை கேட்க அதற்கு சம்யுக்தா ஒரு ஆண் காதலித்தால் அது வேற கதை ஆனால் ஒரு பெண் காதலித்தால் அவளுடைய வாழ்க்கை வேற மாதிரி இருக்கும் அதனால் தான் நான் விஷ்ணுகாந்த்திடம் என்னுடைய காதலை பற்றி சொல்லவில்லை.

ரவியும் நானும் நண்பர்களாக பழகினோம் ஆனால் காதலிக்கவில்லை என்றுதான் கூறி இருப்பதாக கூறியிருந்தார். அதனால் கடுப்பான சம்யுக்தாவின் நண்பர் கடைசியில் இனி எனக்கு போன் செய்ய வேண்டாம். உன்னை பிளாக் செய்ய போகிறேன். இனி எந்த ஆணையும் ஏமாற்றாதே என்று கூறிவிட்டு அந்த ஆடியோவில் முடித்திருக்கிறார். இந்த ஆடியோ சம்யுக்தா திருமணத்திற்கு முன்பு பேசியது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications