உதவி செய்வதெல்லாம் சரிதான்! எதுக்கு 4k வீடியோ எடுத்து வெளியிடனும்! KPY பாலா பற்றி ஆதவன் கேள்வி
சென்னை: கேபிஒய் நிகழ்ச்சி மூலமாக பிரபலமடைந்த பாலா தன்னால் முடிந்த அளவிற்கு பலருக்கும் உதவி செய்து கொண்டு இருக்கிறார். ஆனால் அவர் உதவி செய்வது விளம்பரத்திற்காக தான் என்று ஆதவன் விமர்சித்து பேசி இருக்கிறார். இது இணையத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
கேபிஒய் பாலா தன்னால் முடிந்த அளவிற்கு பலருக்கு உதவிகளை செய்து வருகிறார். ஆரம்பத்தில் சின்ன சின்னதாக உதவிகள் செய்து வந்தவர். இப்போது பலருக்கும் உதவிகள் செய்கிறார். அதிலும் சில கிராமங்களுக்கு விவசாய பொருட்கள், ஆம்புலன்ஸ் வசதி, வாகனங்கள் வாங்கி கொடுப்பது போன்ற செயல்களை செய்து வருவதை வீடியோவாக வெளியாகி வருகிறது. இதைப் பார்த்து பலரும் உதவி செய்ய முன்வந்திருக்கிறார்கள்.

இது குறித்து பல இடங்களில் கேபிஒய் பாலா விளக்கம் கொடுத்து இருக்கிறார். நான் உதவி செய்யும்போது ஏன் வீடியோ வெளியிடுகிறேன் என்று எல்லோரும் கேட்கிறார்கள். அதற்கு நாம செய்ற உதவியை பார்த்து இன்னும் சிலர் உதவ வேண்டும், என்னால் எல்லாருக்கும் உதவ முடியாது. என்னால் முடிந்த அளவிற்கு நான் உதவி செய்கிறேன் முடியாத பட்சத்தில் இதைப் பார்க்கும் இன்னொருவருக்கும் நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும் என்று ஒரு சிந்தனை வரவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்று சொல்லி இருக்கிறார்.
பாலா என்னதான் விளக்கம் கொடுத்தாலும் சில நேரங்களில் விமர்சனங்களும் எழுவது இயல்புதான். யார் எந்த செயலை எப்படி பார்க்கிறார்கள் என்பது அவர்களுடைய பார்வையை பொறுத்தது. சமீபத்தில் ஒரு சாலை மிகவும் சேதம் அடைந்து இருந்ததை பார்த்த பாலா அந்த சாலையை சரி செய்திருந்தார். அதில் அவரே இறங்கி வேலையும் பார்த்திருந்தார். அதை ஒரு வீடியோவாக சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருந்தார்.
அந்த வீடியோ சிலரிடம் பாராட்டு பெற்றது. ஒரு சிலர் எதற்காக இவர் இப்படி வீடியோ எல்லாம் போடுகிறார் என்று வழக்கம்போல கேள்வி எழுப்பி இருந்தார்கள். அதில் ஒருவர் தான் விஜே ஆதவன். அவர் ஏற்கனவே பாலா பற்றி இதற்கு முன்பும் பேசி இருக்கிறார். அதேபோல இப்போது பேசும்போது, உதவி செய்தது தப்பு இல்ல.. ஆனா கேமரா வெச்சிக்கிட்டு விளம்பரம் பண்ணுவது தான் தப்பு. உதவி செய்றதை வீடியோ வெளியிட்டு, கொடுத்ததை விட அதிகமா சம்பாதிச்சுடுவாங்க.
நானே என்கிட்ட அவர் நம்பர் வேணும்னு கேக்குறவங்களுக்கு நம்பர் கொடுத்து இருக்கிறேன். ஆனால் அவர் போனை எடுக்க மாட்டார். பிளாக் பாண்டி எவ்வளவோ உதவி செஞ்சுட்டு இருக்கிறார் அதை எல்லாம் யாரும் பார்க்க மாட்டாங்க. ஆனால் உதவி செய்யுறது 4கே வீடியோ எடுத்து போட்டால் பார்க்கிறார்கள் என்று பேசி இருக்கிறார்.
ஏற்கனவே இவர் பாலா ஆம்புலன்ஸ் கொடுத்தது பற்றி கேள்வி எழுப்பியதற்கு அப்போது பாலா வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் கூட நான் youtube சேனல் எல்லாம் வைக்கவில்லை நான் செய்கிற வேலையை இன்ஸ்டாகிராமில் தான் போடுகிறேன். அதனால் எனக்கு எந்த பணமும் வருவது கிடையாது என்று விளக்கம் கொடுத்திருந்தார். அதைத்தொடர்ந்து இப்போது மீண்டும் ஆதவன் பேசியிருப்பதற்கு பாலா பதில் கொடுக்கப் போறாரா? அல்லது அமைதியாக இருக்கப் போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications