சரிகமபவில் மகள் சொன்ன வார்த்தை.. கதறி அழுத விஜே அர்ச்சனா! இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் அர்ச்சனாவின் மகள் செய்த செயலை பார்த்து விஜே அர்ச்சனா கதறி அழுகிறார். அவர் அழும் போது அங்கு நடுவராக இருந்த ஸ்வேதா உட்பட பார்வையாளர்கள் பலரும் கண்கலங்கி இருக்கிறார்கள். இந்த நெகிழ வைத்த காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தொகுப்பாளினி என்று சொன்னதுமே ஒரு சிலருடைய முகம் டக்கென்று நினைவிற்கு வரும். அதில் விஜே அர்ச்சனாவும் ஒருவர். பல வருடங்களாக தொகுப்பாளினியாக இருந்து வரும் அர்ச்சனாவிற்கு சாரா என்ற ஒரு மகள் இருக்கிறார். அர்ச்சனா ஆரம்பத்தில் இருந்து சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என்று பல சேனல்களில் தொகுப்பாளினியாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இப்போது ஜீ தமிழ் சரிகமப நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.

90ஸ் ரசிகர்கள் பலர் விஜே அர்ச்சனாவிற்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா கலந்து கொண்ட பிறகு அவருக்கு அதிகமான நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்தது. ஆனாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தன்னுடைய பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் அர்ச்சனாவிற்கு சில மாதங்களுக்கு முன்பு இடியென செய்தி ஒன்று வந்தது.
அதாவது அர்ச்சனா குடும்பத்திற்கு இத்தனை நாட்களாக துணையாக இருந்த அவருடைய அம்மாவின் திடீர் இறப்பு தான். அர்ச்சனாவின் சிறுவயதிலேயே அவருடைய அப்பா இறந்துவிட்டார். அதற்கு பிறகு அர்ச்சனா மற்றும் அவருடைய சகோதரியை அவருடைய அம்மா தனியாகத்தான் வளர்த்து வந்திருக்கிறார். அர்ச்சனா தொகுப்பாளினி ஆன பிறகுதான் எங்களுடைய வாழ்க்கையின் தரம் மாறியது என்று பல பேட்டிகளிலும் இவர்கள் பேசி இருக்கிறார்கள்.

அதுபோல அர்ச்சனாவின் கணவர் ராணுவத்தில் வேலை பார்ப்பதால் அர்ச்சனா மற்றும் அவருடைய மகளோடுதான் அவருடைய அம்மாவும் வாழ்ந்து வந்தார். ஆனால் கடந்த மாதத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போயிருந்தது. ஆபரேஷன் செய்தால் என்ன வேணாலும் நடக்கலாம் என்று கூறப்பட்டிருந்த நிலையில் மிகுந்த தைரியத்துடன் ஆப்ரேஷனை எதிர்கொண்டு ஆபரேஷனுக்கு செல்வதற்கு முன்பு கூட வீட்டிலிருந்து போகும்போது நான் கண்டிப்பாக மீண்டும் வருவேன் என்று தன்னம்பிக்கையோடு பேசிக்கொண்டு போயிருந்தார்.

ஆனால் மருத்துவமனையில் இருக்கும் போது அர்ச்சனாவின் அம்மா இறந்துவிட்டார். இது குறித்து உருக்கமான வீடியோக்களை அர்ச்சனாவும் அவருடைய சகோதரியும் வெளியிட்டு இருந்தனர். அதுபோல அம்மா இறந்த பிறகு அம்மா குறித்து எமோஷனலான பல போஸ்டுகளை அர்ச்சனா வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்.
இந்த நிலையில் இந்த வாரம் சரிகமப நிகழ்ச்சியில் அர்ச்சனாவிற்க்கு அவருடைய மகள் சாரா ஒரு பரிசு கொடுத்திருக்கிறார். அதாவது அர்ச்சனாவும் அவருடைய அம்மாவும் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் வரையப்பட்டிருக்கிறது. அந்த புகைப்படத்தை பார்த்ததும் அர்ச்சனா கதறி அழுதிருக்கிறார்.

அப்போது அவருடைய மகள் தைரியம் கொடுத்திருக்கிறார். ஆனாலும் அர்ச்சனா அழுது கொண்டே இருந்தார். அப்போது இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் சரண் மற்றும் ஸ்வேதா மோகன் அர்ச்சனாவிற்கு ஆறுதல் கூறியிருந்தனர். அதுபோல இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக வந்திருப்பவர்களும் அர்ச்சனா அழுவதை பார்த்து அழுது இருக்கிறார்கள். இந்த எமோஷனல் ஆன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications