கனவில் வந்த வராஹி அம்மனுக்காக வி.ஜே அர்ச்சனா வீட்டில் செய்த செயல்.. நெகிழ்ச்சியான சம்பவங்கள்
விஜே அர்ச்சனா தன்னுடைய வீட்டில் வராஹி அம்மன் சிலையை கொண்டு வந்ததன் பின்னணி பற்றி பகிர்ந்து இருக்கிறார்.
சென்னை: ஜீ தமிழில் தொகுப்பாளராக இருந்து வரும் விஜே அர்ச்சனா தன்னுடைய கனவில் வராஹி அம்மன் தோன்றி கூறியது பற்றி நெகிழ்ச்சி ஆக பகிர்ந்து இருக்கிறார்.
முதல்முறையாக தன்னுடைய வீட்டிற்கு வராஹி அம்மனை முறைப்படி தான் கொண்டு வந்த விதத்தைக் வீடியோவாக அர்ச்சனா வெளியிட்டு இருக்கிறார்.
பூஜை புனஸ்காரங்களோடு விஜே அர்ச்சனாவின் வீட்டில் வராஹி அம்மனின் சிலை கொண்டுவரப்பட்ட போது நடந்த நிகழ்வுகளை பற்றி அர்ச்சனா உருக்கமாக பேசியிருக்கிறார்.

மனம் கவர்ந்த தொகுப்பாளர்
சாட்டிலைட் சேனல்கள் அறிமுகமான காலத்தில் ஆங்கர் என்று பிரபலமானவர்களில் விஜே அர்ச்சனாவும் ஒருவர். சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான காமெடி டைம் என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து அர்ச்சனா அந்த நிகழ்ச்சியின் காமெடி நடிகர் சிட்டிபாபு உடன் இணைந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதற்கு பிறகு ஸ்வர்ணமால்யா விட்டு சென்ற இளமை புதுமை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தார். அது மட்டுமல்லாமல் அர்ச்சனாவின் ஆங்கரிங் ஸ்டைலுக்கு ரசிகர்கள் அதிகரிக்க தொடங்கினர்.

மகளும் தொகுப்பாளர்
தொடர்ந்து தொகுப்பாளராக இருந்து வந்த அர்ச்சனா கடந்த 2004 ஆம் ஆண்டு வினித் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் தொலைக்காட்சியில் இருந்து விலகி சில காலங்கள் இருந்து பின்பு மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரிகமப ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளராக களம் இறங்கினார். அர்ச்சனா மட்டுமல்லாமல் அவருடைய மகள் சாராவும் ஜீ தமிழ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார். அம்மாவும் மகளும் ஜீ தமிழில் "சூப்பர் மாம்" என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

நெகட்டிவ் கண்டு கொள்வதில்லை
அது மட்டும் அல்லாமல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்திலும் அவருடைய மகள் சாராவும், இருவரும் நடித்திருந்தனர். அர்ச்சனாவிற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்தாலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் நான்கில் போட்டியாளராக கலந்து கொண்ட பிறகு இவருக்கு அதிகமான நெகட்டிவ்வர்ஸுகளும் அதிகரிக்க தொடங்கிவிட்டனர். ஆனாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாத அர்ச்சனா தொடர்ந்து எப்போதும் போல புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

எல்லாவற்றிற்கும் காரணம்
இந்த நிலையில் சமீபத்தில் தன்னுடைய வீட்டில் வராஹி அம்மனை கொண்டு வந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் அர்ச்சனா நான் எப்போதுமே எனக்கு எவ்வளவு நெகடிவ்வர்ஸ் இருந்தாலும் அதை பற்றி கவலைப்படுவது கிடையாது.
நம்ம வாழ்க்கையில சக்சஸ் ஏற்படும் போது நிறைய பேர் நிறைய விதமாக சொல்லுவாங்க. சிலர் சொல்லுவாங்க உங்க வீட்டில் நடக்கிற பூஜைகளால் உங்களுக்கு இருக்கிற தெய்வீக சக்தியால் என்று சொல்வார்கள். சிலர் சொல்வார்கள் உனக்கு இருக்கிற திறமையினால் என்று நிறைய காரணம் சொன்னாலும், கடைசியில் இதை எல்லாம் சுற்றி வந்து இருப்பது யூனிவர்சல் எனர்ஜி அது எல்லாருக்கும் இருக்கும். எங்க வீட்டில் இருக்கிற யுனிவர்சல் எனர்ஜி என்றால் என்னுடைய தந்தையின் ஆசிர்வாதமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என கூறி இருக்கிறார்.

கனவில் வந்து சொன்னது
மேலும் கண்டிப்பாக நாங்கள் செய்கிற பூஜை என்று நான் நினைக்கிறேன். நாங்க அடிக்கடி பூஜை செய்து கொண்டுதான் இருப்போம். ஆனால் இப்போ சில காலங்களாக செய்ய முடியவில்லை. குறிப்பாக கோவிட் வந்தது, அதற்குப் பிறகு என்னுடைய மாமனார் இறந்து விட்டார். அதனால் செய்ய முடியவில்லை இப்படி தொடர்ந்து தடங்கல்கள் வந்து கொண்டு இருந்த நிலையில் ஒரு மூன்று வருடம் கழித்து ஏதாவது பெரிய பூஜை செய்ய வேண்டும் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் தான் அம்மா வராஹி அம்மன் சிலையை பார்த்து வாங்கி கேட்டார். நானும் சரி என்று அந்த அம்மனை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டோம். ஆனால் ஒரு அம்மனை வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது என்றால் லேசு பட்ட காரியம் இல்ல. ஆனால் நான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்த ரெண்டு மூன்று நாள் பிறகு அந்த அம்மன் என்னுடைய கனவில் என்னை நீ எளிமையாக வீட்டுக்குள்ள கூட்டிட்டு வந்துட்ட, எனக்கு பல்லக்குல வச்சு கூட்டிட்டு வரணும் என்று சொன்னாங்க. அதனால நான் சரிகமப சூட்டிங் முடிஞ்சு பிறகு ஒரு பிரம்மாண்டமாக பங்க்ஷன் வச்சி வராஹி அம்மனை பல்லக்கில் தூக்கிக் கொண்டு வந்து பிறகு ஊஞ்சலாட்டி வீட்டில் வைத்து விட்டோம் என்று அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.
-
ராதிகாவுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் செய்த நயன்தாரா.. ஷூட்டிங்கில் நடந்த சம்பவம், உருக்கமான போஸ்ட் -
நடிகர் தியாகராஜனுக்கு கார் ஷோரூமில் நடந்த அவமானம்! இப்படி ஒரு பதிலடியை எதிர்பார்க்கலையே! நெகிழ வைத்த தருணம் -
கென் கருணாஸ் சொன்ன ஒரு வார்த்தை.. வம்புக்கு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்.. வந்து குவியும் கண்டனங்கள் -
“இது சிம்பதிக்காக சொல்லல… இதுதான் ரியாலிட்டி!”.. காளிதாஸ் 2 விழாவில் நடிகர் பரத் எமோஷனல் -
விஜயால் மது குடிக்காமல் இருக்க முடியாதா? யாரு சொன்னது? கண்முன்னே நடந்த சம்பவம்! சர்ச்சைக்கு அனு மோகன் பதிலடி -
துரந்தர் 2 வசூலில் அதிரடி… 2 நாளில் இத்தனை கோடி வசூல்! உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸ் புயல் சுற்றுதே -
Durandar 2 : துரந்தர் 2 தமிழில் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்.. மாஸான வசூல்.. அடுத்தடுத்த சம்பவம்! -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு












Click it and Unblock the Notifications