பிரியங்கா பற்றி அர்ச்சனா இப்படி சொல்லிட்டாங்க! அப்போ மணிமேகலை நிலைமை? இது பலருக்கும் பாடம்
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது குறித்து பலரும் விமர்சித்து வரும் நிலையில் விஜே அர்ச்சனா தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார். அதில் எல்லா நேரங்களிலும் நமக்கு சாதகமான சூழ்நிலை அமையாது நாம்தான் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
பொதுவாக ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு சந்தோஷம் என்று ஒரு பழமொழி சொல்வார்கள் ஆனால் இப்பொழுது இரண்டு பிரபலங்கள் மோதிக்கொள்வது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதுவரைக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்க்காத பலரும் கூட இது பற்றி கருத்து தெரிவித்து வருகிறார்கள். you tube சேனல்களில் மணிமேகலை மற்றும் பிரியங்கா பிரச்சனை குறித்து பலரும் வீடியோக்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மணிமேகலை கடந்த சனிக்கிழமை ஒரே ஒரு பதிவு மற்றும் வீடியோ வெளியிட்டு இருந்தார். அதற்கு பிறகு சின்னத்திரையில் அது பற்றி தான் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. மணிமேகலை பிரியங்கா பெயரை குறிப்பிடாமலேயே தன்னால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்ற முடியவில்லை. அதற்கு காரணம் இந்த சீசனில் போட்டியாளராக வந்த தொகுப்பாளர் தான் என்று ஒரு குண்டை தூக்கி போட அது பெரும் புகைச்சலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
பிரியங்கா மீது இருந்த வண்மத்தை பலரும் கொட்டி வருகிறார்கள். இன்னும் ஒரு சிலர் இந்த பிரச்சனையை பெரிய பூதாகரமாக்கி விஜய் டிவி சேனல் தரப்பினர் மீதும் பல்வேறு வசைப்பாடுகள் பொழிகிறார்கள். இந்த நிலையில் மணிமேகலை தன்னுடைய சுய கௌரவம் தான் முக்கியம். எனக்கு தன்மானம் அதிகம் அதனால் வேலை, பணம் எதுவும் தேவையில்லை என்று வந்துவிட்டேன் என்று சொன்னதற்கு விஜே அர்ச்சனா ஒரு பேட்டியில் பதில் கொடுத்திருக்கிறார்.
பாவம் பிரியங்கா.. அவங்களுக்கு 10 மடங்கு கஷ்டம்! இவ்வளவு விஷயம் இருக்கு! வெளிப்படையாக பேசிய சுஜிதா
அதில் பொதுவா எல்லா இடத்திலும் எல்லோருக்கும் பாதுகாப்பு கிடைக்காது. மெண்டலாகவும் சரி, பிசிகல் ஆகவும் சரி அடுத்தவர்கள் நமக்கு உதவுவார்கள் என்று நம்பிக் கொண்டிருக்க முடியாது. எப்போதும் ஒருவர் நமக்கு செக்யூரிட்டியாக வந்து நிற்க முடியாது. நம்முடைய சுயமரியாதையை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது நம்முடைய கடமைதான்.

ஒரு இடத்தில் நமக்கு சரி இல்லை என்றால் அந்த இடத்தில் துணிந்து கேள்விகள் கேட்பது தப்பு இல்லை. ஏனென்றால் இந்த உலகத்தில் நம்மை விட நமக்கு யாரும் துணையாக இருக்க முடியாது. நம்மை நாம் எந்த இடத்திலும் கீழேயோ அல்லது விட்டுக் கொடுக்கவோ கூடாது. ஒவ்வொருத்தவங்க ஒவ்வொரு மாதிரியான கேரக்டரில் இருக்கிறாங்க. ஆனால் இன்னைக்கு இருக்கிற சொசைட்டியில் பெண்கள் போல்டா இருந்தா மட்டும் தன் அவர்களால் நிறைய விஷயங்களை தற்காத்துக் கொள்ள முடியும் என்று அந்த பேட்டியில் மணிமேகலைக்கு சப்போர்ட் செய்வது போல பேசி இருக்கிறார்.
விஜே அர்ச்சனா பிக் பாஸ் வீட்டிற்குள் போன அடுத்த நாளே அழுது கொண்டிருந்தார். ஆனால் ஒரு சில நாட்களில் தன்னை எதிர்த்து ஒரு பெரும் படையே இருந்தாலும் அனைவரையும் அலற விட்டிருந்தார். யார் என்ன சொன்னாலும் நான் இப்படித்தான் என்று கெத்தாக அர்ச்சனா வலம் வந்ததுதான் அவருக்கு ரசிகர்களின் மத்தியில் மதிப்பு ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மணிமேகலை இப்போது துணிச்சலாக எடுத்த முடிவுக்கு அர்ச்சனாவும் ஆதரவு தெரிவித்திருக்கிறார். அர்ச்சனா விஜய் டிவியில் ஏற்கனவே பல நிகழ்ச்சிகளில் இருந்து இருக்கிறார். அதுபோல விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலிலும் இரண்டாவது பாகத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை தொடர்ந்து இப்போது திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் அர்ச்சனா பேட்டியில் பேசுகையில் நான் விஜய் டிவியில் பணியாற்றி இருந்தாலும் மணிமேகலை மற்றும் பிரியங்காவோடு எனக்கு அதிகமான பழக்கம் இருந்தது கிடையாது. ஆனால் இந்தப் பிரச்சனையில் இருந்து மட்டுமல்ல.. பொதுவாக சொல்ல வேண்டும் என்றால் சீனியாரிட்டி வச்சி டாமினேஷன் பண்ண கூடாது. நான் சீனியர் என்பதற்கு நான் பெரியவர் நீ சின்னவர் என்று யாரையும் பேசக்கூடாது.
அதே நேரத்தில் இப்போது நடந்து கொண்டிருக்கும் இந்த பிரச்சனையில் எந்த விஷயம் யார் பேசினாலும் சரி என்று நம்மால் தெளிவாக சொல்ல முடியாது. காரணம் ஒரு தரப்பு நியாயம் மட்டும்தான் வெளியே வந்திருக்கிறது. இன்னொரு தரப்பில் இருந்து இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை. அவர்களும் பேசினால்தான் என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியவரும். அதனால் நான் இவங்க சரி அவங்க தவறு என்று சொல்ல முடியாது என்று அர்ச்சனா பேசியிருக்கிறார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications