சிவகார்த்திகேயன் இப்படிப்பட்டவர் தான்.. நானே பார்த்திருக்கிறேன்! வெளிப்படையாக பேசிய vj பாவனா
சென்னை: சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் டாப் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து விஜே பாவனா சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார். சின்னத்திரையில் இருவரும் ஒன்றாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் போது சிவகார்த்திகேயனுடைய கேரக்டரை தான் பார்த்து வியத்ததாகவும் பாவனா கூறி இருக்கிறார்.
சினிமா மற்றும் சீரியல்களில் ஒருவர் தன்னுடைய திறமையை காட்டி ஜெயிக்கிறார் என்றால் அது எளிமையான காரியம் கிடையாது. மீடியா துறையில் இருப்பவர்களுக்கு பல போட்டிகளும் பொறாமைகளும் இருக்கும். கூடவே இருக்கும் நண்பர்கள் திடீரென எதிரியாக மாறிவிடுவார்கள். சினிமாவில் இருப்பவர்களுக்கு நிரந்தர எதிரியும் கிடையாது, நிரந்தர நண்பர்களும் கிடையாது என்று சொல்வார்கள்.

அடுத்தடுத்து வளர்ச்சி
அதுபோல சினிமாவில் எந்த பின்பலமும் இல்லாமல் ஒரு சிலர் மட்டும் தான் சாதித்துக் கொண்டு வருகிறார்கள். அதில் சிவகார்த்திகேயனும் ஒருவர். சிவகார்த்திகேயன் குடும்பத்தில் யாரும் சினிமாவை சார்ந்தவர்கள் கிடையாது. ஆரம்பத்தில் போட்டியாளராக விஜய் டிவியில் கலந்து கொண்டு பிறகு தொகுப்பாளராக மாறி இருந்தார். அதை தொடர்ந்து அதிலிருந்து திரையில் துணை நடிகராக அறிமுகமானார்.
கடின உழைப்பு
பிறகு கதாநாயகனாக திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். இப்போது முன்னணி கதாநாயகனாக மாறி இருக்கிறார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் பட்டி தொட்டி எல்லாம் ஹிட் கொடுத்துவிட்டது. ஆரம்பத்தில் காமெடி நடிகராக நடித்து வந்த சிவகார்த்திகேயன் இப்போது அதிரடியான நடிகராகவும் நடிக்க முடியும் என்று நிரூபித்து இருக்கிறார்.
ரகசியம் உடைந்தது
அதே நேரத்தில் அடிக்கடி சர்ச்சைகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார். சில நேரங்களில் சிவகார்த்திகேயன் தன்னுடைய வருத்தங்களையும் வேதனைகளையும் கூட காமெடியாக பேச, அதுவும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அமரன் திரைப்பட வெற்றி விழாவின்போது நான் நடித்ததில் அமரன் திரைப்படத்தில் தான் எனக்கு முழு பேமெண்ட்டும் கிடைத்தது. இன்னும் பல திரைப்படங்களுக்கு பேமெண்ட் கிடைக்காமல் இருக்கிறது என்று ரகசியங்களை போட்டு உடைத்து இருந்தார்.
விஜே பாவனா பேட்டி
சமீபத்தில் கூட சீரியலில் இருந்து சினிமாவில் நடித்து பிரபலமான நடிகர் ஸ்ரீ ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறார். தனக்கு சில திரைப்படங்களில் பேமெண்ட் சரியாக வந்து சேரவில்லை என்று வருத்தமாக சோசியல் மீடியாவில் போஸ்ட் போட்டிருந்தார். அது உண்மை என்பது போன்று சிவகார்த்திகேயனும் பேசியிருந்தார் .இந்த நிலையில் சிவகார்த்திகேயன் குறித்து விஜே பாவனா பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
இதுதான் பதிலடி
அந்த பேட்டி இப்போது இணையத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. அதில் அவர் பேசும்போது சிவகார்த்திகேயனின் போராட்ட குணம் எனக்கு ரொம்ப பிடிக்கும். துரோகம், வளர்ச்சியை தடுப்பது என அவருக்கு யாராவது செய்தால் கூட அதையெல்லாம் உடைத்து பல மடங்கு வளர்ச்சி அடைந்து சாதித்து விட்டு வந்து மீண்டும் அவர்களுடன் அன்புடன், இயல்பாக பழகுவார். கெடுதல் நினைப்பவர்களுக்கு அவர் அப்படித்தான் பதில் கொடுப்பார்.
போராட்ட குணம்
அதுதான் சிவகார்த்திகேயனின் போராட்ட குணம். எனக்கு அவருடைய இந்த கேரக்டரை பார்க்கும்போது வியப்பாக இருக்கும் என்று பாராட்டி பேசி இருக்கிறார். சிவகார்த்திகேயனுடைய நடிப்பு உங்களுக்கு பிடிக்குமா? அல்லது அவர் கலக்கப்போவது யாரு, அது இது எது நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் போட்டியாளராகவும் கலந்து கொண்டது உங்களுக்கு பிடிக்குமா பாஸ்?












Click it and Unblock the Notifications