விரக்தியில் போஸ்ட் போட்ட ரவீந்தர்..பதிலுக்கு மகாலட்சுமி வெளியிட்ட பதிவு..வெளிச்சத்துக்கு வந்த உண்மை
சென்னை: நடிகை மகாலட்சுமி தன்னுடைய கணவர் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்த விரக்தி பதிவுகளுக்கு பதிலடியாக புதிய பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
பல நாட்களுக்கு பிறகு தன்னுடைய கணவரோடு எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்ட மகாலஷ்மி அதற்கு உருக்கமான கவிதைகளையும் கொட்டி இருக்கிறார்.
பழையபடி இயல்பு நிலைக்கு திரும்பிய மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிகிறது.

ஒரே இரவில் சிலர் ஒபாமாவாகி விட்டார்கள் என்று கூறுவார்கள் அந்த மாதிரி தான் ஒரே ஒரு திருமண புகைப்படத்தால் இணையதளத்திலே ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த வைரல் ஜோடி என்றால் அதில் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் ஜோடி தான்.
சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி ஆரம்பத்தில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது பல சீரியல்களில் முன்னணி கதாபாத்திரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலில் மிரட்டல் வில்லி வாசுகி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய தம்பி தம்பி குடும்பத்தையே பலி வாங்கும் இவரை பல ரசிகர்கள் திட்டி தீர்த்தாலும் இவருடைய தீவிரமான ரசிகர்கள் இவருடைய நடிப்பை பாராட்டவும் தவறவில்லை.

இந்த நிலையில் தான் சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்பு மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் இருவரும் எளிமையான முறையில் கோவிலில் வைத்து திருமணத்தை முடித்து இருந்தனர். இருவருக்கும் இரண்டாவது திருமணம் என்பதால் எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இவர்களுடைய திருமணம் முடிந்தாலும் இணையதளமே வியந்து பார்க்கும் அளவிற்கு இவர்களுக்கு பிரபலம் கிடைத்து விட்டது.
உடலழகு மற்றும் முக அழகை குறிப்பிட்டு ரசிகர்கள் இவர்களுடைய ஜோடி பொருத்தத்தை பார்த்து வியந்து போயும் கலாய்த்தும் சமூக வலைத்தளத்தில் பரபரப்பு ஏற்படுத்தி வந்தனர். ஆனாலும் தங்களுடைய வேலையில் கவனமாக இருந்து வந்த இந்த ஜோடி அடிக்கடி வெளியிடங்களுக்கு சென்ற புகைப்படங்களையும் வெளியிட்டு வருவதற்கு மட்டும் தவறவில்லை.
இணையதளத்திலும் இந்த ஜோடி இவர்களுடைய ரொமான்ஸ்களை அடிக்கடி அவ்வப்போது கமெண்ட்களை தெளித்து வந்து ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் பாசத்தை இருவரும் மாறி மாறி தங்களுடைய போஸ்ட்களில் வெளிக்காட்டிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ரவீந்தர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிங்கிளாக இருந்தபடி விரக்தியில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதனால் ரசிகர்கள் இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்களா? என்று கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் அதற்கெல்லாம் விளக்கம் கொடுக்கும் பொருட்டு மகாலட்சுமி தன்னுடைய கணவரோடு ஜோடியாக எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, நீ என்னை சுற்றி கைகளை வைக்கும் போது இந்த உலகில் என்னால் முடியாதது எதுவுமே இல்லை என்று எனக்கு தெரியப்படுத்துகிறார். நான் உன்னை முழு மனதுடன் நேசிக்கிறேன் அம்மு, என்று தெரிவிக்க அதற்கு ரவீந்தர், லவ் யூ பொண்டாட்டி என்று பதில் கொடுத்து இவர்கள் இருவரும் விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications
