கணவர் மீது கோபத்தில் மகாலட்சுமி வெளியிட்ட பதிவு..நீங்க பண்ணுன வேலையால் வந்த வினை..இதுதான் முடிவாம்
சென்னை: சீரியல் நடிகை மகாலட்சுமி தன்னுடைய கணவரோடு விவாகரத்து என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
நான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் நீங்கள் செய்த செயலால் இப்போது இப்படி ஆகிவிட்டது என்று கணவனை மகாலட்சுமி திட்டியும் இருக்கிறார்.
இதற்கு மேல் இதை பண்ணுனா உங்களுக்கு மூணு நேரமும் தண்டனை கொடுப்பேன் என்று மகாலட்சுமி ரவீந்தரை மிரட்டி இருக்கிறார்.

ஒரு சிலர் ஓவர் நைட்டில் ஒபாமா ஆக்கி விட்டார்கள் என்று சொல்வார்கள். அந்த மாதிரி தான் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி மற்றும் அவருடைய கணவர் ரவீந்தர் இருவரும் இணையதளத்தில் அவ்வப்போது ட்ரெண்டிங்காக மாறி விடுகிறார்கள்.
ஏற்கனவே முதல் கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்திருந்த மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து எளிமையான முறையில் திருமணம் செய்திருந்தார். இவர்களுடைய திருமணம்தான் எளிமையாக இருந்ததே தவிர அதற்குப் பிறகு இவர்களுடைய வாழ்க்கை பிரம்மாண்டமாக மாறிவிட்டது.
திருமணத்தன்று இவர்கள் ஜோடியாக வெளியிட்ட புகைப்படம் பல 90ஸ் கிட்ஸ்களின் மனதை சுக்கு நூறாக உடைக்க வைத்து விட்டது. இன்னும் பல ரசிகர்கள் இவர்களுடைய புகைப்படங்களை பார்த்து தங்களுடைய மனதை தேற்றிக்கொண்டு இருப்பதாகவும் கூறி இருக்கிறார்கள். ஏன் நமக்கும் அப்போ இப்படி ஒரு மணப்பெண் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று இப்போதும் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.
திருமணத்திற்கு பிறகு அடிக்கடி ஜோடியாக புகைப்படங்களை வெளியிட்டு வரும் மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் ஜோடி தங்களுடைய காதலை சமூக வலைத்தளத்தில் கொட்டுவதிலும் தவறவே இல்லை. புகைப்படத்தை வெளியிட்டு கமாண்டுகளில் மாறி மாறி காதல் மழை பொழிந்து கொண்டிருந்தனர்.

ஆனால் சமீபத்தில் ஒரு சில போஸ்ட்களை வெளியிட்ட ரவீந்தர் சோகமான கேப்ஷன்களை கொடுத்து சிங்கிளாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டிருந்தார். இது குறித்து ரசிகர்கள் அப்போ இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விட்டார்களா? என்று கேள்வி எழுப்பி இவர்களுக்குள் விவாகரத்து என்ற வதந்திகளும் ரெக்கை கட்டி பறந்து வந்தது.
இந்த நிலையில் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மகாலட்சுமி சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய கணவரோடு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் அதை தொடர்ந்து இப்போது மீண்டும் கணவனும், மனைவியும் சந்தோஷமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதற்கு கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.
அதில் டேய் புருஷா உன்கிட்ட எத்தனை தடவை நான் சொன்னேன். இந்த மாதிரி இன்ஸ்டாகிராமில் தனிப்பட்ட போட்டோவை போஸ்ட் போட வேண்டாம்னு சொன்னேன். அதனால்தான் சமூக வலைத்தளங்களும் செய்திகளும் நம்மைப் பிரிந்து விட்டதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மவனே இனி இந்த தப்ப மீண்டும் செய்தால் எனக்கு பிடித்த சேமியா உப்புமா மூன்று வேளை உணவாக உனக்கு கிடைக்கும் என்று மிரட்டியபடியே, இன்னுமாடா நம்ம ட்ரெண்டிங்கில் இருக்கோம் என்று நக்கல் அடித்திருக்கிறார்.
-
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
சிறகடிக்க ஆசை: ஆந்திரா வரை சென்று ரேகாவை மீட்ட முத்து! உயிரை பணயம் வைத்த மீனா... அதிரடி திருப்பம் -
Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: மனோஜ் சொன்னதை கேட்டு கோபப்பட்ட விஜயா.. உயிரை பணயம் வைக்கும் முத்து! கதையே மாறிப்போச்சு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்












Click it and Unblock the Notifications