இனி அந்த வார்த்தையே எடுத்துடணும் என்று நினைக்கிறேன்.. வி.ஜே மகேஸ்வரி உருக்கம்.. பாராட்டும் ரசிகர்கள்
பெற்றோர்கள் என்றாலே அவர்கள் பாராட்டப்பட கூடியவர்கள் தான் என்று விஜே மகேஸ்வரி கூறியதை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் விஜே மகேஸ்வரி ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார்.
எந்த இடத்திலும் தனக்கு சரி என்று பட்டதை தைரியமாக பேசி வந்த விஜே மகேஸ்வரி பெற்றோர்களுக்கு சில அறிவுரைகளை கூறியிருக்கிறார்.
தனி ஆளாக தன்னுடைய மகனை வளர்த்து வரும் நிலையில் தன்னை போல இருக்கும் அம்மா மற்றும் அப்பாக்களுக்கு விஜே மகேஸ்வரி கொடுத்த அறிவுரையை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

ஆறாவது சீசன்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி இதுவரைக்கும் எந்த சீசனிலும் இல்லாத பல அதிரடியான நிகழ்வுகள் நடந்து வந்தது. இந்த நிகழ்ச்சி முடிவடைந்து ஒரு சில மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் இந்த நிகழ்ச்சியை பற்றி சமூக வலைத்தளத்தில் அதிகமான பேச்சு பரவிக் கொண்டுதான் இருக்கிறது. இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த சீசனில் ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் அறிமுகமான நிலையில் அவர்களைப் பற்றிய பல்வேறு சண்டை சச்சரவுகளும் கருத்து மோதல்களும் சமூக வலைத்தளத்தில் இன்னும் குறைந்தபாடு இல்லாமல் இருக்கிறது. அதில் முக்கியமான நபராக வீஜே மகேஸ்வரி இருந்து வருகிறார்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்
ஜீ தமிழில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த விஜே மகேஸ்வரி சீரியலிலும் அறிமுகமாகி நாயகியாக நடித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக அடிக்கடி புகைப்படங்களை எடுத்து பதிவிட்டு வந்தார். அதனால் இளைஞர்களின் மத்தியிலும் இவர் பிரபலம் அடைந்து இருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் அறிமுகமாக போகிறார் என்றதும் ரசிகர்கள் இவருக்கு ஆதரவு கொடுத்து வந்தனர். பிக் பாஸ் வீட்டிற்குள் எந்த இடத்திலும் தன்னுடைய கேரக்டரை மாற்றிக் கொள்ளாமல் சரி என்று பட்டதை தைரியமாக பேசி வந்தார். அதனாலேயே இவர் அடிக்கடி சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இது ஒரு பக்கம் நெட்டிசன்களால் அதிகமாக கலாய்க்கப்பட்டு வந்தது.

நினைத்தது நடந்து விட்டது
பிக் பாஸ் வீட்டிற்குள் அசீம் போன்ற ஆண் போட்டியாளர்கள் கெத்தாக பேசினால் அது அனைவராலும் ரசிக்கப்பட்ட நிலையில் மகேஸ்வரி போன்ற ஒரு சில போட்டியாளர்கள் பேசியது அதிகமான ரசிகர்களால் வெறுப்பாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் மகேஸ்வரி ஒரு சில வாரங்களிலே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டார். தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிக நாட்கள் இருந்து தன்னுடைய மகனுக்கு மேலும் தைரியத்தை கொடுக்க வேண்டும் என்று அடிக்கடி கூறியிருந்தார். ஆனால் அது நடக்கவில்லை இந்த நிலையில் அதற்குப் பிறகு பிக் பாஸ் கொண்டாட்டம் நடைபெற்றதில் தன்னுடைய மகனோடு மேடையில் ஒன்றாக பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார்.

சிங்கிள் இனி வேண்டாம்
அதில் பிரியங்கா, மகேஸ்வரி இடம் ஒரு சிங்கிள் மதர் ஆக இருந்து நீங்கள் உங்கள் குழந்தையை வளர்த்து வந்திருக்கிறீர்கள். உங்களைப் போன்று தனியாக குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கு என்ன அறிவுரை சொல்ல இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அந்த சிங்கிள் என்கிற வார்த்தையை எடுத்து விடுவோம். சிங்கிள் பேரண்ட் என்று சொல்வதை விட பேரண்ட் என்றாலே அவர்கள் பாராட்டப்பட கூடியவர்கள் தான். அதில் தனியாக குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களாக இருந்தாலும், சேர்ந்து குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களாக இருந்தாலும் சரி அவர்களுடைய கஷ்டங்கள் எல்லாமே பாராட்டப்பட கூடியதுதான் என்று பேசியிருக்கிறார். அந்த வீடியோவை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து மகேஸ்வரியை பாராட்டி வருகிறார்கள்.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்!












Click it and Unblock the Notifications