சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது, ஆனால் நான் போகல! காரணம் இதுதான்! ஓபனாக பேசிய மணிமேகலை
சென்னை: விஜே மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிய பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் ஜோடி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக கலந்து கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் அவர் பேட்டி ஒன்றில் பேசும் போது தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது என்றும் ஆனால் தான் எதற்காக போகவில்லை என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.
விஜே மணிமேகலை ஆரம்பத்தில் சன் மியூசிக் நிகழ்ச்சியில் தொகுப்பாளனியாக அறிமுகமானார். காலேஜில் முதல் வருஷம் படிக்கும்போது தொகுப்பாளனியாக அறிமுகமான மணிமேகலை ஆறு வருடங்களுக்கு மேலாக சன் மியூசிக் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் அவர் அவருடைய கணவரான ஹுசேனை சந்தித்தார்.

எதிர்ப்பு திருமணம்
பிறகு ஹுசேனை காதலித்து இரு பெற்றோர் எதிர்ப்பையும் மீறி மணிமேகலை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு அதிகமாக கஷ்டப்பட்டாலும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து தொகுத்து வழங்கி வந்த மணிமேகலைக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
விஜய் டிவி பிரபலம்
அந்த நிகழ்ச்சியில் தன்னுடைய கணவரோடு போட்டியாளராக கலந்து கொண்டு ரன்னராக தேர்வானார். அதற்குப் பிறகு விஜய் டிவியில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சி உட்பட சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அந்த நேரத்தில் தான் அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

குக் வித் கோமாளியில் அறிமுகம்
கோமாளியாக அந்த நிகழ்ச்சியில் அவர் ஆரம்பத்தில் கலந்து கொண்டாலும் நான்கு சீசன்களாக ரசிகர்களை அதிகமாக என்டர்டைன்மென்ட் செய்து வந்தார். ஆனால் திடீரென்று நான்காவது சீசனில் இருந்து விலகி இருந்தார். அதற்கு பிறகு ஐந்தாவது சீசனில் தொகுப்பாளினியாக கலந்து கொண்டார்.
பிரியங்காவோடு சண்டை
ஆனால் அந்த நிகழ்ச்சி முடிவடைவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு பிரியங்காவோடு பிரச்சனை என்று மறைமுகமாக ஒரு போஸ்ட் போட்டு இருந்தார். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு பிறகு சமீபத்தில் ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளனியாக அறிமுகமாகி இருக்கிறார். அந்த நிகழ்ச்சி கடந்த வாரத்தில் தான் தொடங்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட மணிமேகலை தன்னுடைய திருமண வாழ்க்கை மற்றும் தன்னுடைய வேலை உட்பட பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் மணிமேகலை தொகுப்பாளினியாக மட்டும் இல்லாமல் சோஷியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் எந்த பக்கத்தை பார்த்தாலும் அங்கு மணிமேகலையின் வீடியோக்கள் வைரலாகி கொண்டு இருக்கிறது.
முதல் பயணம்
அதே நேரத்தில் மணிமேகலைக்கு சினிமா வாய்ப்பு எதுவும் வந்ததா என்ற கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு மணிமேகலை எனக்கு அந்த வாய்ப்புகள் வந்தது. நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நான் முதல் முதலாக சன் மியூசிக்கில் மட்டும்தான் தொகுப்பாளனியாக வேண்டும் என்று ஆடிஷனில் கலந்து கொண்டு, அதற்காக முயற்சி எடுத்தேன்.

சினிமாவுக்கு நோ நோ
அதற்கு பிறகு இரண்டு சேனல்களில் எந்த முயற்சியும் எடுக்காமல் தான் எனக்கு வாய்ப்புகள் கிடைத்தது. அது ஒரு பக்கம் இருந்தாலும் எனக்கு சினிமாவிலும் வாய்ப்புகள் வந்தது ஆனால் எனக்கு அங்கு போவதற்கு விருப்பமில்லை. காரணம் நான் நானாக இப்படியே ஜாலியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். சினிமாவில் நடிப்பது எனக்கு சுத்தமாக வராது, தெரியவும் செய்யாது. அதனால் அந்த வாய்ப்புகள் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.
நடிக்க விருப்பமில்லை
நாம எப்படி இருக்கிறோமோ அப்படியே வீடியோ போட்டால் அதை மக்கள் பார்க்கிறார்கள். ஒரு சில நெகட்டிவ் வரதான் செய்யும். ஆனால் அதை நான் கண்டு கொள்வதே கிடையாது. என்னுடைய அடுத்த வேலையில் பிஸியாக இருக்கிறேன். அதுபோல என்னுடைய கணவருக்கு சில வாய்ப்புகள் வந்து இருக்கிறது அவர் ஷார்ட் பிலிமில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு அந்த ஃபீல்டில் ஆசை இருக்கிறது ஆனால் எனக்கு அதில் விருப்பமில்லை. அதனால் தான் நான் நடிக்கவில்லை என்று அந்த பேட்டியில் மணிமேகலை கூறி இருக்கிறார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications