குடிச்சிட்டு 'பப்ல' டான்ஸ் ஆடியிருக்கீங்களே.. கேட்ட ரசிகர்.. விஜே பார்வதி சொன்ன பதில்
சென்னை: பப்பில் குடித்துவிட்டு டான்ஸ் ஆடிய விஜே பார்வதியிடம் ரசிகர் கேட்ட கேள்விக்கு அவர் கூறிய பதில் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தில் மிக குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்தவர் விஜேவாகவும் தொகுப்பாளினியுமான விஜே பார்வதி ஆவார். இவர் கலாட்டா என்ற தனியார் யூடியூப் சேனலில் ஜாக்கி ஆக பணிபுரிந்தார்.
இவர் விஜே மட்டுமில்லாமல் மாடல் மற்றும் ஜர்னலிஸ்ட் ஆவார். இவர் எப்போதும் சமூகவலைதளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்துக்கும் மேலாக ஃபாலோவர்ஸ் உள்ளார்கள்.

பார்வதி
பார்வதி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது ஹிப்ஹாப் ஆதி மூலம்தான். கடந்த ஆண்டு ஹிப்ஹாப் நேர்காணல் கொடுத்து வந்தார். அந்த நிகழ்ச்சியை ஆர் ஜே பார்வதி தொகுத்து வழங்கினார். இதில் ஹிப்ஹாப் தமிழா ஆதி தன்னுடைய பழைய நினைவுகள் விஷயங்களையும், நடந்திருக்கும் விஷயம் உள்ளிட்டவை குறித்து அவர் பகிர்ந்து கொண்டார்.

சைட்
அப்போது பார்வதி, "உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஆன்டி பார்த்து சைட் அடித்து இருக்கிறீர்களா", என கேட்டார். "உங்களை பார்ப்பதற்கு முன்னாடி வரை யாரும் இல்லை" என சொன்னார். இதனால் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் அந்த வீடியோவை போட்டு பல மீம்ஸ்கள் போட்டு வந்தனர். அப்போது முதல் பார்வதியை பலர் ஆண்ட்டி என்றுதான் அழைத்து வருகிறார்கள்.

நடனம்
சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பார்வதி தனது புகைப்படங்களை பதிவிட்டார். அந்த வகையில் சமீபத்தில் இவர் பப் ஒன்றில் நடனமாடிய வீடியோ ஒன்றை தன் இன்ஸ்டாகிராமில் பார்வதி பகிர்ந்திருந்தார். அதற்கு பல கமென்டுகள் வந்து குவிந்தன. அதில் ஒருவர் "நான் என்னமோ நீங்கள் நல்லா பேசுறீங்க, நல்லா ஆங்கரிங் செய்றீங்க, நல்ல பொண்ணுனு நெனச்சேன்.

குடிச்சிட்டு டான்ஸ்
ஆனால் இப்படி பப்புக்கு போய் குடிச்சிட்டு டான்ஸ் ஆடியிருக்கீங்களே. அதனால நீங்களும் எல்லா மாடர்ன் பொண்ணுங்க மாதிரி ஆகிட்டீங்க என கமென்ட் போட்டிருந்தார். அதற்கு பார்வதி பதிலடி கொடுத்திருந்தார். அவர் இசையும் நடனமும் சுதந்திரத்தின் வெளிப்பாடு. நான் கடுமையாக வேலை பார்க்கிறேன். அதனால் இசை, நடனம் மூலம் எனக்குள் இருக்கு மன உளைச்சலை வெளியேற்றுகிறேன்.

உரிமை கிடையாது
இதை தடுக்க யாருக்கும் உரிமை கிடையாது. ஏனென்றால் நான் சட்டபடி அதற்கு தகுதியானவர். சமூக பார்வையை பற்றி எனக்கு கவலை கிடையாது. என்னுடைய சந்தோஷம் தான் எனக்கு முக்கியம் என கூறியிருந்தார். இந்த கமென்ட் தற்போது வைரலாகி வருகிறது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications