VJ Priyanka : 200 கோடி சொத்து, தனி தீவு! இரண்டாவது கணவர் பற்றி வெளிப்படையாக பேசிய பிரியங்கா
சென்னை: விஜய் டிவியின் தவிர்க்க முடியாத, பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவரான விஜே பிரியங்கா, தன் டைமிங் மற்றும் குறும்புத்தனமானச் செயல்களால் நிகழ்ச்சிகளைச் சுவாரஸ்யமாகக் கொண்டு செல்பவர். தற்போது, தனது இரண்டாவது திருமணம் குறித்து இணையத்தில் கிளம்பியப் பல வதந்திகளுக்கு, நீண்ட நாட்களுக்குப் பிறகுப் பதிலடி கொடுத்து, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

விஜே பிரியங்கா பயோகிராபி
பிரியங்கா விஜய் டிவியில் பல ஆண்டுகளாகத் தொகுப்பாளராகப் பணியாற்றி வருகிறார். அவரது தனித்துவமான நகைச்சுவை உணர்வு மற்றும் இயல்பானத் தொகுப்பு முறைக்கு, ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய வரவேற்பு உள்ளது. குறிப்பாக, 'சூப்பர் சிங்கர்' போன்ற நிகழ்ச்சிகளில் அவரது தொகுத்து வழங்கும் முறை அனைவரையுமே கவர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பாளர் பயணம் மட்டுமின்றி, விஜய் டிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டார். டைட்டில் வெல்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தாலும், அவர் பாதியிலேயே வெளியேறிவிட்டார். இருப்பினும், அந்த நிகழ்ச்சியில் அவர் தனது இயல்புத்தன்மையோடு விளையாடியது பலராலும் கொண்டாடப்பட்டது.
மணிமேகலையுடன் மோதல்
பெரும்பாலும் சர்ச்சைகள் எதிலும் சிக்காமல் இருக்கும் பிரியங்கா, சமீபத்தில் ஒரு பெரிய சர்ச்சையைச் சந்தித்தார். 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பிரியங்கா கலந்துகொண்டபோது, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய மணிமேகலைக்கும் பிரியங்காவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த விவகாரத்தால் சேனலிலிருந்தே மணிமேகலை வெளியேறினார். அதுமட்டுமின்றி, பிரியங்கா மீது மணிமேகலை கடுமையானக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது திருமணம்
பிரியங்கா தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரு முக்கிய முடிவை எடுத்தார். முதலில் விஜய் டிவி பிரபலம் ஒருவரை திருமணம் செய்து, விவாகரத்து ஆன பிரியங்கா, அடுத்ததாக வசி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். பிரியங்காவிற்கும், அவரது கணவர் வசிக்கும் இடையே வயது வித்தியாசம் அதிகம் என்பதால், அதனைக் காரணமாக வைத்து ஒரு தரப்பினர் பிரியங்கா பற்றி இஷ்டத்துக்குப் பேசினார்கள். குறிப்பாக, "பணத்துக்காகத்தான் பிரியங்கா திருமணம் செய்து கொண்டார்" என்று யூடியூப் தளங்களில் வதந்திகள் பரவின.
பிரியங்காவின் பதிலடி
இந்தப் பேச்சுக்கள் குறித்து இத்தனை நாட்கள் அமைதியாக இருந்த பிரியங்கா, தற்போது தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார். "எனது திருமணத்தின்போது சில யூடியூப்களில், 'பிரியங்கா கணவர் சாதாரண ஆள் கிடையாது. தீவு வாங்கி கொடுத்திருக்கிறார். 200 கோடி ரூபாய் சொத்து இருக்கு. அரசியல் குடும்பம்' என்றெல்லாம் பேசினார்கள். ஆனால், அதில் எதுவுமே உண்மை இல்லை."
உண்மை நிலை
"எனது கணவர் வசி இலங்கைத் தமிழர். அவர் குடும்பத்தினர் லண்டனில் வசிக்கிறார்கள். அங்கே ஒரு நிறுவனத்தில் பணியாற்றுகிறார் அவ்வளவுதான்." "பணத்துக்காக நான் திருமணம் செய்து கொண்டேன் என்று பரப்பியிருக்கிறார்கள். நான் இத்தனை வருடங்கள் உழைக்கிறேன். என்னிடம் பணம் இருக்காதா?" என்று ஆவேசத்துடன் கேள்வி எழுப்பிய பிரியங்கா, தன் மீதான விமர்சனங்களுக்குத் தகுந்த பதிலடியைக் கொடுத்துள்ளார்.
பிரியங்காவின் இந்தப் பேச்சு, விமர்சனங்களுக்கு அஞ்சாமல், தனது வாழ்க்கைத் துணையைத் தானே தேர்ந்தெடுத்தது சரிதான் என்ற நம்பிக்கையை அவருக்கு அளித்துள்ளது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications