திருமணம் முடிந்ததும் கண் கலங்கி அழுத பிரியங்கா.. கிண்டல் செய்து போஸ்ட் போட்ட பிக்பாஸ் பிரபலம்!
சென்னை: விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமாக இருக்கும் பிரியங்காவிற்கு இன்று எளிமையாக இரண்டாவது திருமணம் நடைபெற்று இருக்கிறது. இவருடைய திருமண புகைப்படங்களை பிரியங்கா தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்ததை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். பிரியங்காவின் கணவர் தாலி கட்டியதும் பிரியங்கா கண்கலங்கி அழுதிருக்கிறார். அதேபோல பிரியங்காவின் வீடியோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்த பிக்பாஸ் பிரபலம் அவரை கிண்டல் செய்து இருக்கிறார்.
இன்று (பிப்ரவரி 16) மாலை சோசியல் மீடியா பக்கத்தில் எந்த பக்கம் திரும்பினாலும் பிரியங்கா தேஷ் பாண்டேவின் இரண்டாவது திருமணம் குறித்த புகைப்படங்கள் தான் பரவி வருகிறது. சீரியல் தயாரிப்பாளர் மற்றும் டிஜேவான வசி என்பவரை தான் பிரியங்கா திருமணம் செய்து இருக்கிறார். அவர்களுடைய திருமணம் இன்று நடைபெற்றதாக கூறப்படுகிறது.

விவாகரத்து
பிரியங்காவின் நெருங்கிய நண்பர்கள் அவருடைய சொந்த குடும்பத்தினர் மட்டும்தான் கலந்து கொண்டதாக புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. பிரியங்கா விஜய் டிவி பிரபலமான பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண வாழ்க்கை கடந்த 2023 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்துவிட்டது. இருவரும் விவாகரத்து வாங்கி பிரிந்து விட்டனர்.
பிரியங்கா பேசிய பேட்டி
பிரியங்கா தன்னுடைய முதல் கணவரோடு எடுத்த புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் இருந்து டெலிட் செய்து விட்டார் ஆனாலும் இவர்கள் விவாகரத்து செய்த செய்தியை மட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியே சொல்லவில்லை. இதனால் இவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ போகிறார்களா என்ற பல்வேறு கேள்விகளும் எழுந்து வந்தது ஆனால் அதற்கு பதில் அளிக்கும் வகையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது பிரியங்கா என்னுடைய அம்மா நீ எப்போது திருமணம் செய்து கொள்வா நீ மகிழ்ச்சியாக வாழ்வதை நான் பார்க்க வேண்டும் என்று சொல்கிறார். அதுபோல திருமணத்திற்கு வரம் பார்க்க வேண்டும் என்பதற்காக மேட்ரிமோனியில் ப்ரொபைல் ஓபன் பண்ணுவதற்கு என்னுடைய புகைப்படங்களை கேட்டிருக்கிறார் என்று கிண்டலாக பேசியிருந்தார்.
கணவர் செய்த செயல்
அப்போதே பிரியங்கா இரண்டாவது திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இன்று பிரியங்காவிற்கு தன்னுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்பு எளிமையாக திருமணம் நடைபெற்று இருக்கிறது. பிரியங்காவின் கழுத்தில் அவருடைய கணவர் வசி தாலி கட்டும்போது பிரியங்கா கண்கலங்கி அழுது இருக்கிறார்.

கண் கலங்கிய பிரியங்கா
அப்போது வசி பிரியங்காவை ஆறுதல் படுத்துவதற்காக அவருடைய நெற்றியில் முத்தம் கொடுத்து இருக்கிறார். அதுபோல பிரியங்கா பல இடங்களில் தன்னுடைய அப்பாவை குறித்து எமோஷனலாக பேசியிருக்கிறார். தான் சிறு வயதில் இருக்கும்போதே தன்னுடைய அப்பா இறந்து போய்விட்டார் என்றும் தன்னுடைய அப்பாவை தான் எவ்வளவு மிஸ் பண்ணுகிறேன் என்று பேசி இருக்கிறார். இந்த நிலையில் இன்று பிரியங்காவின் திருமண மேடையில் அப்போ பிரியங்காவின் அப்பாவின் புகைப்படமும் இடம்பெற்றிருக்கிறது.

அப்பாவின் புகைப்படம்
அப்பாவின் புகைப்படத்தின் முன்பு வைத்து பிரியங்காவிற்கு திருமணம் நடைபெற்று இருக்கிறது. இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பிரியங்கா தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதேபோல பிரியங்காவும் அவருடைய கணவரும் பூக்களை அள்ளி வீசி விளையாடும் க்யூட்டான வீடியோக்களை பிக் பாஸ் பிரபலமான நிரூப் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
நிரூப் போஸ்ட்
அதில், "நீங்கள் கடந்து வந்த எல்லாத்துக்கும் பிறகு உங்களை போற்றும் ஒரு காதலில் அடி எடுத்து வைப்பதை பார்க்கும்போது, ஒரு நீண்ட இரவுக்கு பிறகு சூரியன் உதிப்பதை பார்ப்பது போல இருக்கிறது. நீங்கள் காதலை மட்டும் கண்டுபிடிக்கவில்லை உங்களை பிடிக்கும், மதிக்கும், உங்கள் மோசமான நகைச்சுவைகளை பார்த்து சிரிக்கிற ஒருத்தரையும் கண்டுபிடித்து இருக்கீங்க. இதை சொல்வதால் என் மேல உங்களுக்கு கோபமா இருந்தாலும் நான் இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கிறேன்.
பிரியங்கா பதில்
இந்த புதிய அத்தியாயம் உங்கள் இதயம் காத்துகிட்டு இருந்த எல்லாத்துக்கும்னு எனக்கு தெரியும். வாழ்க்கை உங்களை எங்கு கொண்டு போனாலும் மகிழ்ச்சியாக மாற்றும். நீங்கள் எப்போதும் நேசிக்கப்படுவீங்க உங்களுக்கு திருமணநாள் வாழ்த்துக்கள் என்று பகிர்ந்து இருக்கிறார். இதற்கு பிரியங்கா நான் உன்னை இன்னும் நேசிக்கிறேன் என்று பதில் கொடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications