சின்ன வயசுல.. என்னா லுக்கு.. கலாய்த்த ரசிகர்கள்.. கலகலவென்று சிரித்த ரம்யா!
சென்னை: சினிமா நடிகைகளைப் போலவே சின்னத்திரை மற்றும் தொகுப்பாளர்களுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.
எல்லோருமே இன்ஸ்டாகிராமில் தனக்கென்று பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதில் இப்ப இருக்கிற பல நடிகைகளும் தங்களுடைய சின்ன வயது போட்டோக்களை அப்லோட் பண்ணி வருகிறார்கள்.
அந்த வரிசையில் விஜே ரம்யா சுப்பிரமணியனும் தன்னுடைய சின்ன வயது போட்டோவை அப்லோட் பண்ணி இருந்தார். அதற்கு ஒரு தலைப்பு கொடுங்கள் என்றும் கேட்டிருந்தார். வந்து குவிஞ்சிருச்சு பாருங்க கமெண்ட்ஸ்.. செமங்க.

போட்டோஸ்
நடிகைகளாக இருந்தாலும் சரி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தாலும் சரி தங்களுக்கு எப்பவுமே ரசிகர்கள் முக்கியம் என்பதில் கவனமாக எல்லா நடிகைகளும் கையாண்டு வருகிறார்கள். சிலர் கவர்ச்சி காட்டியும் சிலர் தங்களது திறமையை காட்டியும் முதலிடத்தில் இருந்து இருக்கிறார்கள். புகழ்ச்சியை விரும்பாத மனிதர்கள் எப்படி கிடையாதோ அது போல கலைஞர்களுக்கு எப்போவுமே புகழ்ச்சி ரொம்பவே அவசியம் என்று பல நடிகைகளும் போட்டோ ஷூட்டில் கவனத்தை செலுத்தி வருகிறார்கள்.

சூப்பர் ரம்யா
அந்த வரிசையில் எப்பவுமே இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரம்யாவும் பல போட்டோக்களைப் போட்டு கலக்கியிருக்கிறார். நிகழ்ச்சி தொகுப்பாளராக அவர் பணியாற்றி இருந்தாலும் அவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகத்தான் இருக்கிறது. விஜய் டிவியின் முகமாக ஒரு காலத்தில் சிறந்து விளங்கியவர் ரம்யா. அவர் தொகுப்பாளர் மட்டுமல்லாமல் படங்களிலும் நடித்து வருகிறார்.

உடல் ஆரோக்கியம்
அதுவுமில்லாமல் உடற்பயிற்சி செய்வதில் தீவிரமான ஆர்வத்தை காட்டும் இவருக்கு எப்பவுமே தனது அழகை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது பிடிக்கும். உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர் ரம்யா. பல நேரங்களில் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். அதனை பார்த்து பல பெண்களும் அவரைப்போல உடற்பயிற்சி செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

வெறித்தனமா உடற்பயிற்சி
அதுமட்டுமல்லாமல் இவருக்கும் நடிகர் ஆர்யாவுக்கும் உடற்பயிற்சி செய்வதில் போட்டிதான் நிலவிக் கொண்டிருக்கிறது. அந்த அளவிற்கு இருவரும் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்கிறார்கள். இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஒரு குழந்தை படத்தை பதிவிட்டு இது யார் என்று கண்டுபிடியுங்கள் அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படத்திருக்கும் ஒரு தலைப்பு தாருங்கள் என்று கேட்டிருக்கிறார்.

கமெண்ட்ஸ் மழை
அதைக் கேட்டதும் ரசிகர்கள் கமெண்ட் மழை பொழிந்து கொண்டிருக்கிறார்கள். அது அவருடைய புகைப்படம் என்பதை ரசிகர்கள் எளிதாக கண்டுபிடித்து விட்டார்கள். ஆனால் தலைப்பு தான் பலரும் பலவிதமாக கலாய்த்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த புகைப்படத்தில் அவர் இடுப்பில் கையை வைத்துக் கொண்டு முறைத்து கொண்டு இருக்கிறார். அழகான சுடிதார் போட்டு மேக்கப்பில் குறை ஏதுமில்லாமல் அனைவரையும் சுண்டி இருக்கிறார்.

யாருடா சுட்டது இந்த அப்பத்தை
போட்டோவை பார்த்து ஒரு ரசிகர் கூறியிருக்கிறார் என்னடா நடக்குது அங்க என்று கேட்கும் தொனியில் அல்லவா இருக்கிறது என்று கமெண்ட் போட்டிருக்கிறார். இன்னொருவர் எவ்வளவு நேரமா கேட்கிறேன், இந்த அப்பத்தை சுட்டது யாரு என்று கவுண்டமணி ஜென்டில்மேன் படத்தில் கேட்பதுபோல இருக்கிறது என்றும். இன்னொருவர் ஒழுங்கா போட்டோ எடுக்குறியா இல்லையா என்று போட்டக்காரரிடம் சண்டை போடுவது போல இருக்கிறது என்றும் கலாய்த்துள்ளார்.

டபாய்த்து விட்டாரா அப்பா
இன்னொருவர் அப்பா வெளியே கூட்டிட்டு போறது க்கு செருப்பு போட்டுகிட்டு வா என்று சொல்லிவிட்டு பைக்கை எடுத்திட்டு கிளம்பி விட்டார். அதனால் தான் இப்படியெல்லாம் இருக்கார் என்றும் பலரும் பலவிதமான தலைப்புகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சூட்டிங் இல்லாத நேரத்தில் பழைய புகைப்படங்களை தூசிதட்டி எப்படி எல்லாம் லைக்குகளையும் கமெண்டுகளை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று பல ரசிகர்களும் கலாய்த்து வருகிறார்கள்,
-
சிறகடிக்க ஆசை அப்டேட்: நிஜ கேரக்டரை காட்டிய சைக்கோ அருண்.. முத்துவால் உடைந்த உண்மை.. விஜயாவுக்கு ஆப்பு -
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
விஜய் டிவியில் மீண்டும் சேரும் பாக்கியலட்சுமி கோபி பாக்கியா.. ஹீரோ யாரு தெரியுமா? பிக் பாஸ் பிரபலம் ஹேப்பி -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்!












Click it and Unblock the Notifications