ப்ளூ கலர் சட்டை போட்டு வந்தாரா.. டக்குன்னு எழுந்துட்டேன்.. சிலிர்த்துப் போன ரம்யா
சென்னை: வாழ்க்கையில் எவ்வளவு நாட்கள் நம்மகூட இருந்திருந்தாலும் அவர்கள் இல்லாதபோது அவர்கள் கூட இருந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வதிலும் பெரும் சந்தோஷம் தான் என்று வடிவேல் பாலாஜியின் நினைவுகளை மற்றும் அவரது குணங்களைப் பற்றியும் முதல் முறையாக விஜே ரம்யா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.
வடிவேலு பாலாஜி குறித்து ஒவ்வொருவரும் தத்தமது நினைவுகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், ரம்யாவும் வெளிப்படுத்தியுள்ளார். அவரது கருத்து தற்போது வைரலாக பரவி வருகிறது.
விஜய் டிவியின் மூலம் கலக்கப்போவது நிகழ்ச்சியில் பிரபலமான வடிவேலு பாலாஜி தற்போது இல்லை. இருந்தாலும் அவரது புகழும் அவரது கேரக்டரும் மக்களின் மனதில் என்றுமே அழியாது பலரும் அவருக்கு இரங்கலை தெரிவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

வடிவேல் பாலாஜியின் மரணம்
சமீப காலத்தில் அனைவரது மனதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது வடிவேல் பாலாஜியின் மரணம்தான். அவருக்காக பல ரசிகர்கள் கண்கலங்கினார்கள். அவருடைய சந்தோஷமான முகம்தான் அனைவரின் மனதிலும் பதிந்து உள்ளது. அவரது வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் எப்பவுமே ரசிகர்களை சிரிக்க வைத்தவர்.

நினைவு கூர்ந்த ரம்யா
இவருடைய மறைவுக்கு பலர் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தாலும் அவருடைய இழப்பு அவரது குடும்பத்தையும் ரசிகர்களையும் பெரிதும் பாதித்திருக்கிறது. தினமும் ஏதாவது ஒரு விதத்தில் அனைவரையும் அவரை நினைக்க வைத்துக் கொண்டு தான் இருக்கிறார். இந்த நிலையில் விஜே ரம்யா அவருடைய நினைவாக அவரைப் பற்றி அவர் கூட இருந்த சந்தோஷமான தருணங்களை பற்றியும் கூறியிருக்கிறார்.

நம்பி ஏமாந்த காமெடி
முதன்முறையாக அவர் விஜய் டிவியில் கலக்கப்போவது ஷோவில் அறிமுகம் ஆகும்போது முதல் எபிசோடில் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றியது ரம்யாதானாம். சூட்டிங் ஆரம்பிக்கும் முன்பு இவர் தனியாக உட்கார்ந்து கொண்டிருக்கும் போது அதில் பங்குபெறும் கன்டஸ்டன்ட்டுகள் எல்லோரும் வந்து அமர்ந்த பிறகு தனியாக ஒருவர் மட்டும் நீல கலர் ஜிப்பாவோடு நடந்து வந்திருக்கிறார்.

குட்மார்னிங் சார்
அப்போது ரம்யா எதார்த்தமாக திரும்பிப் பார்த்து அவர் பக்கத்தில் வரும்போது ரம்யாவும் எழுந்து நின்று குட் மார்னிங் சார் என்று சொல்லி இருக்கிறார். அதாவது நடிகர் வடிவேலுதான் சிறப்பு விருந்தினராக வந்துள்ளார் போலும் என நினைத்து நம்பி குட்மார்னிங் போட்டுள்ளாராம் ரம்யா. பக்கத்தில் வந்த பிறகுதான் இது வடிவேல் அல்ல அவரைப்போலவே வேறொருவர் என்று இவருக்கு புரிந்து இருக்கிறது. அப்ப கூட வடிவேல் பாலாஜியும், அசால்டாக குட் மார்னிங் உட்காருங்க என்று ஜாலியாக சொல்லிவிட்டு போய்விட்டாராம்.

ரொம்ப ஜாலி
முதல் முறையாக அவரது நடிப்பில் பார்த்த பிறகு ரொம்பவே சந்தோஷமாக இருந்தாராம். இந்த மாதிரி யாருக்கும் இருக்காது .அந்தளவிற்கு இவரிடம் திறமை இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பலரும் ஸ்கிரிப்ட் வைத்து பார்த்து மனப்பாடம் பண்ணி தான் பேசுவார்கள் .ஆனால் இவர் எதையும் ரெடி பண்ணவே மாட்டார் .செட்டில் வந்து அப்ப காட்சி என்னவோ அதை வைத்து அப்படியே எல்லாரையும் சந்தோஷப்படுத்தி விடுவார்.
அந்த அளவுக்கு இவருக்கு தனித்திறமை உண்டு என்று ரம்யா கூறியிருக்கிறார். அது மட்டுமில்லாமல் பலரும் அவரை டிவிகளில் தான் பார்த்திருப்பீர்கள். ஆனால் நாங்கள் அவரோடு ஒன்றாகவே நன்றாக பழகி இருக்கிறோம்.

விமானத்தில் கலாய்ப்பார்
பல நிகழ்ச்சிகளுக்கும் பல வெளிநாடுகளுக்கும் கூட சில நேரங்களில் ஒன்றாக சென்று இருக்கிறோம். வெளிநாடுகளுக்குப் போகும் போது பிளைட்டில் இவரால் சந்தோஷமாக இருக்கும் . ஏர்ஹோஸ்டஸ் எல்லோரிடமும் இங்கிலீஷில் பேசி அவர்களை சிரிக்க வைத்துவிடுவார். நான் எப்பவுமே அவர் பக்கத்தில் ஒரு இடம் கிடைக்க அதற்கு தேவையான எல்லா வழிகளையும் செய்வேன். அந்த அளவிற்கு அவர் ஜாலியாக எப்போதும் இருப்பார் என்றும் கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஒருவருடைய இழப்பு அவர் கூட இருப்பவர்களுக்கும் அவரை நன்றாகத் தெரிந்தவர்களுக்கு எவ்வளவு ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் அவருக்கு நன்றாக தெரியும்.

சகஜமாக பழகுவார்
எப்பவும் அடுத்தவர்களுக்கு ஆறுதல் செல்வதிலும் தானாக முன்வந்து செய்வார் .யாரும் தன்னிடம் வந்து பேசி அறிமுகமான பிறகு தான் அவர்களிடம் சிரிச்சு பேச வேண்டும் என்ற ஒரு பழக்கமே அவரிடம் கிடையாது. யாரைப் பார்த்தாலும் முதலில் அவராகவே சென்று சகஜமாக வெளிப்படையாக பேசி விடுவார் என்றும் கூறியிருக்கிறார். என்னதான் எல்லாரும் அவருடைய குடும்பத்திற்கு ஆறுதல் கூறினாலும் அவர் இல்லாத இழப்பு பலவழிகளில் அவருக்கு பாதிப்பையும் ஏற்படுத்தும்.

கடுமையான உழைப்பாளி
வடிவேல் பாலாஜி, இந்த விஜய் டிவியில் வந்து இவ்வளவு பிரபலம் ஆனதற்கு அவருடைய சொந்த உழைப்பு மட்டும் தான் காரணம் என்று கூறியிருக்கிறார் ரம்யா. வடிவேலு பாலாஜியை பற்றி அவருடைய சந்தோஷமான தருணங்களை பற்றியும் ரம்யாபேசியிருப்பது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது. பல ரசிகர்களும் இதற்கு கமெண்ட் போட்டு வருகிறார்கள் வடிவேலு பாலாஜியின் ரசிகர்கள் பலர் இப்படி எல்லாம் பேசும் நீங்கள் அவர் முடியாமல் இருக்கும் போது ஒரு உதவி கூட செய்யவில்லை என்றும் குறை கூறியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் விஜய் டிவிக்கு பேரும் புகழும் வாங்கித்தந்த அவரது அந்த டிவியிலிருந்து ஒன்றுமே செய்யவில்லையே என்று மன ஆதங்கத்தை தெரிவித்திருக்கிறார்கள்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications