பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கேரக்டரிலிருந்து விலகிய விஜே விஷால்.. புதுசா வந்தது யாருன்னு பாருங்க
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கேரக்டரில் விஜே விஷால் நடித்து வந்த நிலையில் இன்றைய எபிசோடில் விஜே விஷாலுக்கு பதிலாக புது நடிகர் ஒருவர் அறிமுகம் ஆகி இருக்கிறார். அவர் ஏற்கனவே விஜய் டிவியில் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். அவர் யார் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் விஜய் டிவியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலில் எதிர்பாராத திருப்பங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே இந்த சீரியலில் பல வருடங்களாக பாக்கியா மற்றும் கோபியின் பிரச்சனை தான் அடிக்கடி வந்து அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருந்தாலும் சில நேரங்களில் அது ரசிகர்கள் விரும்பும் வகையில் சப்ளை செய்து விடுகிறார்கள்.

இதுவரைக்கும் பாக்கியா பலமுறை கோபியை வீட்டை விட்டு அனுப்பி விட்டார். ஆனால் மீண்டும் மீண்டும் ஏதாவது சாக்குபோக்கு சொல்லி வீட்டிற்கு வருவதும் பிறகு வீட்டில் அவமானப்பட்டு வெளியே போவதும் வாடிக்கையாக இருக்கிறது. அதுபோல இந்த சீரியலில் ஒரு சில கேரக்டர்கள் ஏற்கனவே இவருக்கு பதில் இவர் என்று மாறிவிட்டனர்.
செழியன் கேரக்டரில் நடித்து வந்த ஆரியன் திடீரென்று தான் விலகுவதாக அறிவித்துவிட்டு ஜீ தமிழ் சீரியலில் கதாநாயகனாக நடிக்கிறார். அதுபோல சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியலில் அமிர்தாவாக நடித்து வந்த ரித்திகாவும் திடீரென்று விலகி இருந்தார். அதற்கு பிறகு அவர் எந்த சீரியலில் நடிக்கவில்லை என்றாலும் இப்போது கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் அமிர்தாவின் கணவராக எழில் கேரக்டரில் இத்தனை நாட்களாக நடித்து வந்த விஜே விஷால் இன்றைய எபிசோட்டில் இருந்து மாற்றப்பட்டிருக்கிறார். அவருக்கு பதிலாக நடிகர் நவீன் அதாவது ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்த நடிகர் தான் இன்றைய எபிசொட்டில் எழிலாக அறிமுகமாகி இருக்கிறார். அதுவும் அறிமுகமான முதல் நாளே தான் புதிய படத்திற்கு கதை சொல்லப் போவதாக பாக்யா மற்றும் தாத்தாவிடம் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு வீட்டை விட்டு கிளம்பி போகிறார்.

இதனால் இவர் தொடர்ந்து வருவாரா? அல்லது ஒரு சில வாரங்கள் கழித்து இவருடைய காட்சிகள் மீண்டும் வருமா? என்ற கேள்விகளும் எழுகிறது. என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்து இருந்து பார்ப்போம். அதுபோல எழில் மற்றும் அமிர்தாவிற்கு குழந்தை பிறக்க வேண்டும் என்று ஒரு பக்கத்தில் ஈஸ்வரி வீட்டில் பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார்.
அதுபோல இன்றைய எபிசோடில் ஜெனி அமிர்தாவுக்கு இந்த வீட்டில் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக பிரச்சனையை தொடங்கி இருக்கிறார். அதனால் கதையில் இனி மாற்றம் வருமா? அதனால் தான் எழில் கேரக்டரில் இருந்து விஜே விஷால் விலகி விட்டாரா? என்ற கேள்விகளும் எழுகிறது. அல்லது விஜே விஷாலுக்கு புதிய வாய்ப்புகள் ஏதேனும் வந்திருப்பதால் அவர் சீரியலில் இருந்து விலகி விட்டாரா? என்றும் கேள்விகள் எழுகிறது. இது குறித்து விஜே விஷால் இன்னும் எந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications