இதுவரைக்கும் நடக்காத செயல்.. ஓட்டு விஷயத்தில் பிக் பாஸின் ட்விஸ்ட்.. அந்த நபரை வெளியேற்ற நடவடிக்கையா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இதுவரைக்கும் இல்லாத வகையில் புதுவித கட்டுப்பாடு நடைமுறைப்படுத்த திட்டமிட்டு இருக்கின்றனர்.

பொதுவாக ரசிகர்கள் ஓட்டு போடுவது திங்கள் முதல் வெள்ளி வரை நடைபெற்று வரும்.

ஆனால் இந்த முறை யாரும் எதிர்பார்க்காத வகையில் அதில் நாட்களை குறைத்து இருக்கின்றனர்.

ஆறாவது சீசன்

ஆறாவது சீசன்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருக்கிறது. ஏற்கனவே பல சீசன்கள் நடைபெற்று இருந்தாலும் தற்போது இந்த சீசனில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பல சண்டை சச்சரவுகள் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் இந்த நிகழ்ச்சிக்கு ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தாலும் வழக்கமாக ஒவ்வொரு சீசனில் வருவது போலவே இந்த சீசன் மொக்கையாக இருக்கிறது என்று சிலர் கருத்து தெரிவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

வைல்டு கார்டு என்ட்ரி இல்லை

வைல்டு கார்டு என்ட்ரி இல்லை

இந்த சீசனில் 21 அறிமுகமாகி தற்போது பத்து போட்டியளர்கள் மட்டுமே இருந்து வருகின்றனர். இந்த சீசனில் இதுவரைக்கும் யாரும் வையில்ட் கார்டாக உள்ளே நுழையவில்லை காரணம் இந்த சீசனில் அதிகமான போட்டியாளர்கள் ஆரம்பத்திலேயே வந்து விட்டதாலோ என்னவோ என்பது பலருடைய கருத்துகள் ஆனாலும் கடந்த இரண்டு வாரங்களாகவே ரசிகர்கள் வைல்ட் கார்டு என்ட்ரி எப்போது வருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் அதற்கான அறிகுறி எதுவுமே தென்படவில்லை. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல மாற்றங்கள் நடைபெற்று இருக்கிறது.

அதிகமான டாஸ்க்

அதிகமான டாஸ்க்

எப்போதும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் சடங்கு சம்பிரதாயமான சில டாஸ்க்கள் மட்டும் இந்த சீசனிலும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த சீசனில் அதிகமாக வீக் அண்ட் டாஸ்க் நடைபெற்று இருக்கிறது. இதில் சிறப்பாக பங்கு பெறுபவர்கள் அடுத்த வாரம் தலைவர் போட்டிக்கு தேர்ந்தெடுக்க தகுதியானவராக மாறிவிடுகிறார்கள். அதுவே சரியாக விளையாடவில்லை என்று போட்டியாளர்களால் முதுகில் குத்தப்படுபவர்கள் சிறைக்கு செல்பவர்கள் ஆகவும் அல்லது போரிங்க் பெர்பார்மன்ஸ் என்ற ஒரு பட்டத்தை சுமந்து அழைப்பவராகவும் இருக்கின்றனர்.

வழக்கமாக நடக்கும் சம்பிரதாயம்

வழக்கமாக நடக்கும் சம்பிரதாயம்

அதுபோல தற்போது ஓட்டு விஷயத்தில் பிக் பாஸ் திடீர் ட்விஸ்ட் வைத்திருக்கிறது. இதுவரைக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விதிப்படி மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் குறைவான ஓட்டு யாருக்கு கிடைக்கிறதோ அந்த போட்டியாளர் எலிமினேட் செய்யப்படுவார். ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார். இந்த நடைமுறைதான் கடந்த ஆறு சீசன்களாக தொடரப்பட்டு வந்தது. அதுபோல திங்கட்கிழமை வோட்டிங் நடைபெற தொடங்கி வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை நடைபெறும் இந்த ஐந்து நாட்களில் பதிவான வாக்குகளின் அடிப்படையில் தான் வெளியேற்றம் நடக்கும்.

மாற்றப்பட்ட விதிமுறை

மாற்றப்பட்ட விதிமுறை

ஆனால் தற்போது இந்த வாரம் ஓட்டு போடும் நாள் ஐந்திலிருந்து நான்கு நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது திங்கட்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமைக்கு பதிலாக வியாழக்கிழமை நள்ளிரவு முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த வாரத்தில் ஏழு போட்டியாளர்கள் நாமினேஷனில் இருக்கின்றனர். அவர்களில் தனலட்சுமி, ஷிவின், விக்ரமன், அசீம், மைனா, ரச்சிதா,கதிரவர் அனைவரும் இருக்கின்றனர்.ஆனால் தற்போதைய நிலவரப்படி அசீம் மற்றும் விக்ரமன் மட்டுமே அதிகமான வாக்குகள் பெற்றிருக்கின்றனர். கடைசி இடத்தில் தனலட்சுமி, ரச்சிதா, மைனா மற்றும் ஷிவின் இவர்கள் நான்கு பேரும் மாறி மாறி வந்து கொண்டிருப்பதால் இவர்களில் ஒருவர் வெளியேற வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக அதிகமாக ஷிவின் அல்லது தனலட்சுமி வெளியேறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவே தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+