முத்து படத்தில் ஹீரோயினாக நடிக்கவிருந்தது இவரா? அந்த நடிகைக்கு டப்பிங் பேசியதும் இவரா? நம்பவே முடியல
சென்னை: நடிகை சுகன்யா, கடந்த 1990 முதல் 2000ம் ஆண்டு வரை கொடிகட்டி திரையுலகில் பறந்தார்.. முத்து படத்தில் மட்டும் சுகன்யா நடித்திருந்தால், 2010ம் ஆண்டு வரை என இன்னொரு 10 வருடம் சினிமாவில் முன்னணியிலேயே இருந்திருப்பார்.. 45 வயது வரை திரிஷா இன்று சினிமாவில் நிலைத்திருப்பதற்கு காரணம், கால்ஷீட் சொதப்பாமல் இருப்பதுதான்" என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Kingwoods News யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், "ஏராளமான வாய்ப்புகள் சுகன்யாவுக்கு ஆரம்பத்திலிருந்தே வந்ததற்கு ஒரே காரணம், முக பாவனைதான். நாட்டிய மங்கைகளுக்கு, முக பாவனைகளுக்கு தகுந்தாற்போல் உடல் நளினமாக மாறும்.. இந்த சூட்சுமம் தெரிந்த நடிகை பத்மினிக்கு பிறகு யாருமே இல்லை. அதனால்தான், சுகன்யாவுக்கு வாய்ப்புகள் அதிகரித்தன.

ஒருகட்டத்தில், பிரபல தயாரிப்பாளர்களும், நடிகைகளும் சுகன்யாவின் கால்ஷீட்டுக்காக காத்து கிடக்கும் நிலைமையும் ஏற்பட்டது... முத்து படம் கதை டிஸ்கஷன் நடந்து கொண்டிருந்தபோது, "சுகன்யாவை இதில் ஹீரோயினாக நடிக்க வைத்தால், படம் ஹிட்டாகும். அதனால், சுகன்யாவிடம் யாராவது பேசுங்கள்" என்று ரஜினி சொன்னார்.. அதன்படியே சுகன்யா தரப்பில் பேசப்பட்டபோது, கால்ஷீட்டுக்கு ஒன்றரை மாதம் ஆகும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
ரஜினி சொன்ன வார்த்தை
அதற்கு ரஜினியும், ஒன்றரை மாதம் காத்திருக்கலாம் என்றார்.. பொதுவாக, ரஜினியின் படத்துக்கு பூஜை போட்டாலே, அந்த படம் உடனே வியாபாரமாகிவிடும். ஆனால், ரஜினியே சுகன்யாவை முத்து படத்திற்காக பரிசீலித்திருந்தார்.. ஆனால், ஒன்றரை மாதம் கழித்தும் சுகன்யாவின் கால்ஷீட் கிடைக்கவில்லை, அதற்கேற்றவாறு, சுகன்யாவின் மேனேஜரும் கால்ஷீட்டில் இதனால் மீண்டும் ஒரு மாதம் காத்திருக்க வேண்டிய சூழல் வந்தது. ஆனால், அதற்கு மேல் காத்திருக்க முடியாமல் மீனாவை வைத்து, முத்து படத்தை துவங்கியிருக்கிறார்கள்.
சுகன்யாவின் வருத்தம்
அந்தவகையில் முத்து படத்தில் சுகன்யாவால் நடிக்க முடியவில்லை. "எல்லாருடனும் நடித்துவிட்டேன், ஆனால், ரஜினியுடன் மட்டும் என்னால் நடிக்க முடியவில்லை.. அதற்கு பிறகும் ரஜினி தரப்பில் என்னை யாரும் அணுகவில்லை" என்று வருத்தமாக சுகன்யாவும் சொல்லியிருந்தார்.
எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும், சரியாக நடிக்காவிட்டால், கன்னத்தில் அறைந்துவிடுவார் பாரதிராஜா.. ஆனால், பாரதிராஜாவிடம் அடி வாங்காமல் தப்பித்தவர் சுகன்யாதான். காரணம், சொல்வதை கிரகித்து கொள்ளக்கூடியவர் சுகன்யா.. டைரக்டர் சொல்வது போலவே நடித்துவிடுவார் ..
கன்னத்தில் முத்தமிட்டால்
மணிரத்னமும், கன்னத்தில் முத்தமிட்டால் படத்துக்கு சுகன்யா நடித்தால் நன்றாக இருக்கும் என்று விரும்பினார். ஆனால், மணிரத்னத்துக்கும் சுகன்யாவால் கால்ஷீட் தரமுடியவில்லை.. டப்பிங்காவது பேசி தரும்படி சுகன்யாவிடம் கேட்கவும், அந்த படத்தில், நந்திதா தாஸுக்கு டப்பிங தந்திருந்தார் சுகன்யா.
மொத்தத்தில் 1990 முதல் 2000ம் ஆண்டு வரை கொடிகட்டி திரையுலகில் பறந்தார் சுகன்யா. முத்து படத்தில் மட்டும் சுகன்யா நடித்திருந்தால், 2010ம் ஆண்டு வரை, மேலும் 10 வருடம் முன்னணியிலயே இருந்திருப்பார்.. 45 வயது வரை திரிஷா இன்றும் சினிமாவில் நிலைத்திருப்பதற்கு காரணம், அவரது கால்ஷீட் சொதப்பல் இல்லாமல் இருப்பதுதான்" என்று தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications