எதிர்நீச்சலில் செம ட்விஸ்ட்.. அப்பத்தாவை கடத்தியது குணசேகரன் இல்லையா? அப்போ இவர்தானா..?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தாவை காணவில்லை என்று ஜனனி குணசேகரிடம் பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் குணசேகரன் வீட்டில் இத்தனை பெண்கள் இருந்தும் அப்பத்தாவை கவனிக்க முடியவில்லையா என்று கதையை மாற்றி கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் எதிர்பாராத டுவிஸ்ட் நடந்திருப்பதாக தகவல்கள் வலம் வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று யூகிக்க முடியாத வகையில்தான் பல எபிசோடுகள் இருக்கிறது. அந்த மாதிரி தான் தற்போது கூட அப்பத்தா எங்கே இருக்கிறார். யாரால் கடத்தப்பட்டு இருக்கிறார் என்று யூகிக்க முடியாத வகையில் இருக்கிறது. ஜீவானந்தத்திற்கு எதிராக போலீஸ் கம்ப்ளைன்ட் பேப்பரில் கையெழுத்து வாங்கிய குணசேகரன் அப்பத்தாவை தனி அறையில் வைத்து பூட்டி இருந்தார்.
அதே நேரத்தில் வீட்டிற்கு மீண்டும் வந்த ஜனனி அப்பத்தா கண் முழித்து விட்டார் என்பதை தெரிந்து நேற்று வீட்டிற்குள் சென்று அப்பத்தாவை பார்க்க வந்த நிலையில் அங்கு அப்பத்தாவை பூட்டிய அறையின் வாசலில் வாட்ச்மேன் போல குணசேகரன் அமர்ந்திருந்தார். இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் வீட்டில் இத்தனை பொம்பளைங்க இருந்தும் அப்பத்தா எங்க போனாங்கன்னு தெரியலயா என்று கேள்வி கேட்கிறார்.
அதே நேரத்தில் அப்பத்தாவை குணசேகரன் தான் கடத்தி வைத்திருக்கிறார் என்று நினைத்த ஜனனி அப்பத்தாவை என்ன பண்ணுனீங்க சொல்லுங்க என்று மிரட்டி கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ப்ரோமோவில் அப்பத்தா பெட்டில் கண்களை மூடி படுத்து இருக்கிறார்.
இப்படியாக இருக்கும் நிலையில் அப்பத்தாவை ஜீவானந்தம் தான் குணசேகரனிடம் இருந்து காப்பாற்றுவதற்காக ஆள் வைத்து கடத்தி இருப்பார் என்று ரசிகர்கள் மத்தியில் கருத்துக்கள் குவிந்து வருகிறது. அதே நேரத்தில் இன்றைய ப்ரோமோவில் கதிர் திருதிருவென்று முழித்துக் கொண்டு இருப்பதை பார்க்கையில் ஒருவேளை கதிரும் குணசேகரனும் பேசுவதை அப்பத்தா கேட்டுவிட்டதால் அப்பத்தாவை கதிர் ஏதும் மறைத்து வைத்திருக்கிறாரா? என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது. இந்த நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அதே நேரத்தில் ஜனனி மற்றும் வீட்டில் இருக்கும் மருமகள்களுக்கு குணசேகரன் தான் ஜீவானந்தத்தின் மனைவியை கொலை செய்து இருப்பாரோ என்று சந்தேகம் எழுகிறது. காரணம் குணசேகரன் அப்பத்தாவை ரூமில் வைத்து பூட்டும் போது கூட இன்னும் கொஞ்ச நேரத்தில் எனக்கு நல்ல செய்தி வந்துவிடும். அதற்கான வேலையை நான் செய்து விட்டேன் என்று கூறியிருப்பார்.
அதுபோல ஆடிட்டர் முன்பு ஜீவானந்தத்தை நான் பார்க்க வேண்டும் என்று அப்பத்தா சொல்லும்போதும் அவனை முடிக்கறதுக்கு ஆள் அனுப்பியாச்சு என்றும் உளறி இருந்தார். அதே நேரத்தில் ஜீவானந்தம் மனைவி சுட்டுக்கொலை செய்யப்பட்டபோது கதிரும் ஊரில் இல்லை. இதனால் ஜனனிக்கு வந்த இதே சந்தேகம் ஜீவானந்ததிற்கும் வரும்போது குணசேகரனின் நிலைமை என்னாகும் என்றும் ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications