CWC 7 சூட்டிங்கில் இரும்பு கம்பியால் என்னை அடிச்சுட்டாங்க! மாகாபா, கானா வினோத், புகழ் மீது போலீசில் திவாகர் புகார்
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 7 தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் சூட்டிங் போன இடத்தில் தன்னை அடித்து விட்டதாக வாட்டர் மெலன் திவாகர் போலீசில் புகார் கொடுத்து இருக்கிறார் . அதில் கானா வினோத், புகழ் மற்றும் மாகாபா மீது பல குற்றச்சாட்டுகளை சொல்லி இருக்கிறார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி
குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சி சில வாரங்களுக்கு முன்புதான் தொடங்கப்பட்டது. இதில் கணவன் மனைவிகள் ஜோடியாக போட்டியாளர்களாக கலந்து கொண்டு இருக்கின்றனர். நிகழ்ச்சியும் சுவாரசியமாக போய்க் கொண்டிருக்கும் நிலையில், இந்த வாரத்திற்கான சூட்டிங் இன்று இவிபி செட்டில் நடைபெற்றிருக்கிறது. அப்போது கோமாளியாக வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரும் கலந்து கொண்டிருக்கிறார். அப்போதுதான் யாரும் எதிர்பாராத சம்பவம் நடந்ததாக திவாகர் இப்போது போலீஸ் புகார் கொடுத்திருக்கிறார்.
ஈவிபி செட்டில் மாகாபா, கானா வினோத், புகழ் மூன்று பேரும் என்னை அடித்து விட்டார்கள் என புகார் கொடுத்துவிட்டு வெளியே வந்த திவாகர் செய்தியாளர்களை சந்தித்து பேசி இருக்கிறார். அப்போது நான் குக் வித் கோமாளி சூட்டிங் போனது புகழுக்கு பிடிக்கவே இல்லை. என்னை பார்த்ததும் புகழ் முகம் சுருங்கி போய்விட்டது. நீயா இங்கே வந்திருக்க என்று கேட்டார்.
ஏற்கனவே புகழால்தான் இந்த நிகழ்ச்சியில் குரோஷி கூட வராமல் போய்விட்டார். புகழ் இருக்குற வரைக்கும் இந்த நிகழ்ச்சி நல்லா இருக்காது. அவரால் பலர் நிகழ்ச்சியை விட்டு வெளியே போயிட்டு இருக்காங்க. அவர் பலருடைய வளர்ச்சியை தடுக்குறாரு. நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தால் அவரைவிட நல்ல பெர்ஃபார்மன்ஸ் பண்ணி விடுவேன் என்று என் மீது அவருக்கு கோபம்.
அதேபோல கானா வினோத் பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். அவர் பிக் பாஸிலேயே மோசமா நடந்து கொண்டார். அதேபோல இந்த நிகழ்ச்சியிலும் என்னை ரொம்ப தரகுறைவா பேசினாரு. என்னை மட்டுமல்ல என்னுடைய குடும்பத்தை பற்றியும் பேசினார். மேலும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் மாகாபா குடித்துவிட்டு இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். என்னை இரும்பு கம்பியால் காலில் அடித்துவிட்டார்.
அதனால் தான் நான் போலீஸில் புகார் கொடுக்க வந்திருக்கிறேன். புகாரை விசாரிப்பதற்காக போலீஸ் கூப்பிட்ட பிறகும் அவர்கள் மூன்று பேரும் வரவே இல்லை. இன்று இரவு வருகிறேன் என்று சொல்லி இருக்கிறார்கள். அதுவரைக்கும் நான் இங்கேதான் இருப்பேன். அவர்கள் என்னை அடித்து விரட்டினார்கள், ஆபாசமாக பேசினார்கள் அதற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று ஆதங்கத்துடன் திவாகர் பேசி இருக்கிறார். இது குறித்து புகழ் கானா வினோத் மற்றும் மாகாபா என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.












Click it and Unblock the Notifications