ரோஜா சீரியலை குறித்து நொந்து போய் சிபு கூறிய வார்த்தை..5 வருஷமாக பட்ட கஷ்டம்!மொத்தத்தையும் உளறிட்டாரே
தொடர்ந்து ஐந்து வருடங்களாக ரோஜா சீரியலில் தான் விருப்பம் இல்லாமல் தான் நடித்து வந்தேன் என சிபு கூறியிருக்கிறார்.
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் சமீபத்தில் முடிவடைந்தது.
தொடர்ந்து ஐந்து வருடங்களாக இந்த சீரியலில் கதாநாயகனாக சிபு நடித்திருந்தார்.
தொடர்ந்து ஐந்து வருடமாக ஒரே கேரக்டரில் தான் நடித்து வந்தது தனக்கு பிடிக்கவே இல்லை என்று சிபு கூறி இருக்கிறார்.
இரண்டு முறை ரோஜா சீரியலை விட்டு விலகிவிட வேண்டும் என்று நான் பதிவு வெளியிட்டேன். பிறகு சில காரணங்களால் தொடர்ந்தேன் என சிபு கூறி இருக்கிறார்.

ஐந்து வருடமாக ஒரே கேரக்டர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீசன் 2 கதாநாயகன் பாரதியாக நடித்துவரும் சிபு முதல் முறையாக தான் நடித்த ரோஜா சீரியல் பற்றி தற்போது மனம் திறந்து பேசி இருக்கிறார். ஏற்கனவே ரோஜா சீரியல் 5 வருடங்களாக தொடர்ந்து ஒளிபரப்பாகி வந்தது. இந்த நிலையில் இந்த சீரியலின் கதாநாயகன் சிபு, அர்ஜுன் சாராக ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர். அவருக்கு அதிகமான ரசிகர்கள் ஆதரவு இருந்த நிலையில் இந்த சீரியலில் இருந்து இவர் விலகாப் போவதாக இரண்டு முறை அறிவித்து இருந்தார். தற்போது அதற்கான விளக்கத்தையும் அவர் கொடுத்திருக்கிறார். தொடர்ந்து ஐந்து வருடங்களாக சன் டிவியில் ஒரே கேரக்டரில் நான் நடித்து வந்தது எனக்கு பிடிக்கவில்லை என்று சிபு கூறி இருக்கிறார்.

மாறாத அதே கதை
பொதுவாக ஒரு சீரியல் என்றால் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் அதில் நடிக்கலாம் ஆனால் அதற்கு மேலாக 5 வருடங்கள் ஒரே கேரக்டரில் அதே கடத்தல், அதே கண்டுபிடிப்பு, அதே கொலை மிரட்டல் போன்ற சீன்களில் நடித்துக் கொண்டிருப்பது எனக்கு கொஞ்சம் கூட விருப்பமே இல்லை. அதனால்தான் எனக்கு வெறுத்துப் போய் இரண்டு முறை நான் சீரியலை விட்டு வெளியே போக போகிறேன் என பதிவிட்டேன். பிறகு பலர் என்னை சமாதானப்படுத்தியதால் நான் தொடர்ந்து அந்த சீரியலில் நடித்து வந்தேன். ஆனால் இப்போது நினைத்தாலும் அது அரச்ச மாவையே அரச்சது போல தான் எனக்கு இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

மீண்டும் சீரியலுக்கு வந்த காரணம்
அதுமட்டுமல்லாமல் புதிய புதிய கேரக்டரில் நடிக்கும்போது தான் நம்மளுடைய நடிப்பையும் வெளிக்காட்ட முடியும். அது தான் ரசிகர்களும் விரும்புவார்கள், ஒரே போல எப்போதும் இருந்து வந்தால் பலருக்கும் சலிப்பு தட்டி விடும். அதனால் நான் சீரியலை விட்டு விலகி விட வேண்டும் என்று தான் நினைத்தேன். ரோஜா சீரியல் முடிவடைந்ததும் சீரியலுக்கு முழுக்க போட்டுவிட்டு திரைப்படங்களில் கவனத்தை செலுத்த வேண்டும் என்று தான் நான் நினைத்தேன். அதைத்தான் பதிவாக வெளி விட்டேன் ஆனால் பிரவீன் என்னிடம் வந்து பேசும்போது எனக்கு மறுப்பு தெரிவிக்க தோன்றவில்லை. அதனால் தான் நான் இந்த சீரியலுக்கு வந்து விட்டேன் என்று கூறியிருக்கிறார்.

இயக்குனர் பற்றி புகழ்ச்சி
அதுமட்டுமல்லாமல் இயக்குனர் பிரவீன் என்னிடம் பேசும்போது அவருடைய ஸ்டைல் எனக்கு ரொம்பவே பிடித்து விட்டது. முதல் நாள் பாரதி கண்ணம்மா சீரியலுக்காக பிரமோ சூட் எடுக்கும்போதே எனக்கு தெரிந்து விட்டது. இவர் புதுமையாக முயற்சி செய்கிறார் என்று அதனால் தான் நான் சீரியலுக்கு மீண்டும் ஓகே சொல்லிவிட்டு வந்துவிட்டேன். இது இதுவரைக்கும் என்னை பார்த்து வந்த கேரக்டருக்கும் இப்போது நடிக்கும் கேரக்டருக்கும் முற்றிலும் மாறுபட்டது. என்னுடைய நடிப்பை இந்த கேரக்டரில் வெளி காட்ட சந்தர்ப்பம் கிடைத்து இருக்கிறது. அதனால் இதை நான் மகிழ்ச்சியோடு செய்கிறேன் என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து ரோஜா சீரியலில் தான் நடித்தது பற்றி வெளிப்படையாக பேசி இருப்பது அந்த சீரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications