மூணு வருஷம் இப்படி முடியும்னு எதிர்பார்க்கல..பல பேர் இப்போ கூட இல்லை..கண் கலங்கிய நடிகர் சித்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் முடிவு குறித்து அந்த சீரியலின் கதாநாயகனாக நடித்துவரும் சித்து உருக்கமாக பேசியிருக்கிறார்.
இந்த சீரியலில் தனக்கு வாய்ப்பு தந்து ஆரம்பத்தில் இருந்தவர்கள் பலர் தன்னோடு இல்லை என்று வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்.
இந்த மூன்று வருடத்தில் நடந்த பல நிகழ்வுகள் பற்றியும் சித்து பகிர்ந்து இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல் கதாநாயகனாக நடிகர் சித்து நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே இந்த சீரியலுக்கு முன்பு திருமணம் எனும் சீரியலில் அவருடைய காதல் மனைவியாக இருக்கும் ஸ்ரேயா அச்சனுடன் ஒன்றாக நடித்திருந்தார். முதல் சீரியலில் அதிகமான ரசிகர்களையும் கவர்ந்து இந்த ஜோடி பிரபலமாகி விட்டனர்.
திருமணம் சீரியல் முடிவுக்கு வந்ததும் ராஜா ராணி 2 சீரியலில் கதாநாயகனாக சித்து மாறிவிட்டார். அதே நேரத்தில் ஸ்ரேயா ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ரஜினி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் நடித்துவரும் சீரியல்களும் ஒரே நேரத்தில் முடிவுக்கு வருகிறது. இது இவர்களுக்கு மட்டுமல்லாமல் இவர்களுடைய ரசிகர்களுக்கும் வருத்தமாக இருப்பதாக சமூக வலைத்தளத்தில் பலர் ஃபீல் பண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் மூன்று வருடங்களாக தான் நடித்து வந்த ராஜா ராணி சீரியல் முடிவது குறித்து உருக்கமாக பல வார்த்தைகளை சித்து பேசி இருக்கிறார். அதில் நான் இந்த சீரியலுக்கு அறிமுகமானது பிரவீன் பென்னட்டால் தான் அவர்தான் எனக்கே என்னுடைய திறமையை பார்த்து இந்த சீரியலை கூப்பிட்டு தந்தார். ஆனால் இந்த சீரியலில் ஆரம்பத்தில் இருந்தவர்கள் பலர் இப்போது இல்லை.
கதாநாயகி மட்டுமல்லாமல் இயக்குனர், டான்ஸ் மாஸ்டர், ஒலிப்பதிவாளர்கள் என பலர் மாறிவிட்டனர். ஆனாலும் இந்த சீரியல் புது நபர்களோடு வெற்றிகரமாகவே இத்தனை நாட்களாக தொடர்ந்து வந்தது. இந்த நிலையில் திடீரென்று முடிவது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது வெளியே எங்கு சென்றாலும் பலரும் சரவணன் என்று என்னை அழைப்பார்கள். எனக்கு அதிகமான ஆதரவு கொடுத்து வந்தார்கள். அது என்னை எப்போதுமே சந்தோஷமாக வைத்துக் கொண்டிருந்தது.

சீரியலில் கூட நடித்தவர்களும் அதிகமான சப்போர்ட் கொடுத்திருந்தார்கள். பல பேர் அடிக்கடி மாறிக் கொண்டிருந்தாலும் எங்களுடன் எப்போதும் போல பழகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதுபோல ஒரு வீடியோ ஒன்றையும் வெளியிட்டு அதில் இந்த சீரியலில் தன்னோடு நடித்தவர்கள் மற்றும் பணி புரிந்தவர்கள் அனைவரையும் பற்றியும் அறிமுகம் செய்திருக்கிறார்.
மேலும் இன்று இந்த ராஜா ராணி கடைசி நாள் சூட்டிங் முடிந்து இருக்கிறது. இதில் நிறைய மெமரி இருக்கிறது. நிறைய சந்தோஷங்களும் சண்டையும் இருக்கிறது. எங்களுக்கு இந்த மாதிரி ஒரு சக்சஸ்ஃபுல்லா இந்த சீரியல் முடிந்திருக்கிறது ரொம்ப சந்தோஷம் தான். மேலும் நான் தொடங்கும் புதிய ப்ராஜெக்டுக்கும் ரசிகர்கள் எனக்கு ஆதரவு தர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
-
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
பெரிய தப்பு செய்த திரிஷா.. ஒரே ஒரு போட்டோவால் கொந்தளிப்பு.. இந்த நேரத்தில் இது தேவையா? வருத்தத்தில் ரசிகர்கள் -
காதலர் தினம் பட ஹீரோயினி சோனாலிக்கு வந்த சிக்கல்.. போலீஸ் ஸ்டேஷனுக்கு போன புகார்.. நடிகை கொடுத்த விளக்கம் -
TN 2026 படத்தில் விஜய் ரோலா? தன்னுடைய கெட்டப் பற்றி நட்டி ஓபனா பேசிட்டாரே? பின்னணி சம்பவம் பெருசா இருக்கு -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
அரசியல் பிரபலங்களுக்கும் TN 2026 பட கேரக்டர்களுக்கும் இருக்கும் ஒற்றுமை! நீச்சல் குளத்தை கவனிச்சீங்களா? -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
விஜய் பற்றி என்னால் தப்பா பேச முடியாது.. ஏனென்றால்? ஓபனாக பேசிய சுந்தர் சி.. பாராட்டும் தவெக ரசிகர்கள் -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன் -
வாழ்க்கையில் சில நேரம் தோற்று போய் விடுகிறோம்.. எதிர்பாராத விஷயங்கள்! எமோஷனலாக பேசிய நடிகர் பிரசாந்த் -
Bhavani: சோசியல் மீடியாவை கலக்கும் இந்த நடிகை யார் தெரியுதா? அல்லு அர்ஜுனின் “சொந்தம்”












Click it and Unblock the Notifications