எனக்கு காய்ச்சல்.. ஆனால் நயன்தாரா அப்போ அப்படி பண்ணுவாங்கன்னு நினைக்கல! சரண்யா மோகன் ஓப்பன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சரண்யா மோகன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தான் நயன்தாராவோடு யாரடி நீ மோகினி திரைப்படத்தில் நடிக்கும் போது நயன்தாரா தன்னிடம் நடந்து கொண்ட விதம் குறித்து பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

நடிகை நயன்தாரா பற்றிய செய்திகள் தான் சமீபத்தில் அதிகமாக இணையத்தில் பேசப்பட்டு கொண்டிருக்கிறது. சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நயன்தாரா தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைளுடன் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் வெளிநாட்டுக்கு குடும்பத்தோடு பறந்து விடும் நயன்தாரா தன்னுடைய குழந்தைகளை கொஞ்சி விளையாடும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் இணையத்தில் வெளியிட்டுக் கொண்டிருக்க, இது அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது.

Television Nayanthara Saranya Mohan Entertainment

அதே நேரத்தில் சில தினங்களுக்கு முன்புதான் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன், நயன்தாராவை தான் காதலிக்க தொடங்கி 10 வருடம் ஆகிவிட்டது என்று ஒரு போஸ்ட் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் நயன்தாராவின் நிஜ கேரக்டர் குறித்து நடிகை சரண்யா மோகன் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். தமிழில் ஐயா திரைப்படத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாகிய போது நயன்தாரா புசுபுசு என்று பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல இருந்ததாலேயே தமிழ் மக்கள் ரசிகர்கள் மனதில் டக் எனறு ஒட்டிவிட்டார்.

ஆனாலும் பில்லா திரைப்படத்தில் நயன்தாராவின் இன்னொரு முகத்தைப் பார்த்து அசந்து போன ரசிகர்கள் இப்போ வரைக்கும் அதிலிருந்து மீளவில்லை. அதனாலேயே தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக நயன்தாரா கலக்கிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சரண்யா அந்த பேட்டியில் பேசுகையில், யாரடி நீ மோகினி திரைப்படத்தில் நயன்தாரா அக்கா உடன் நான் நடித்திருந்தேன்.

அவங்க நிஜத்தில் ரொம்பவே கேரிங்கா இருப்பாங்க. எனக்கும் அவங்களுக்கும் சில காட்சிகள் இருந்தது. அதற்கான சூட்டிங்கின் போது தான் நான் முதல்முறையாக அவர்களுடன் அறிமுகமானேன். அதற்குப் பிறகு "வெண்மேகம்" பாடலுக்கு சூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போது எனக்கு ரொம்பவே காய்ச்சலாக இருந்தது. ஆனாலும் ஷூட்டிங் தடைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக நான் அங்கே போய் இருந்தேன்.

அப்போது என்னுடைய காட்சிகளை முடித்துவிட்டு நான் ஓரத்தில் அமைதியாக அமர்ந்து இருந்தேன். அங்கு வந்த நயன்தாரா என்ன ஆச்சு என்று கேட்க, நான் எனக்கு காய்ச்சல் என்று சொன்னேன். அந்த சூட்டிங் எல்லாமே ஒரு கிராமத்தில் எடுத்ததால் பக்கத்தில் ஹாஸ்பிடல் கிடையாது. அதனால் சூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு என்னால் ஹாஸ்பிடலுக்கு போக முடியாது என்பதால் அங்கிருந்த ஒரு சேரில் அமைதியாக உட்கார்ந்து இருந்தேன்.

உடனே நயன்தாரா அவருடைய அசிஸ்டன்ட்டை கூப்பிட்டு, நயன்தாராவின் கேரவனில் என்னை ரெஸ்ட் எடுக்க சொல்லிவிட்டார். அதோடு சரண்யாவின் காட்சிகள் எப்போ வருகிறதோ அப்போ மட்டும் அவங்க வெளியே வந்தா போதும். அதுவரைக்கும் அவங்களை யாரும் டிஸ்டர்ப் பண்ண கூடாது என்று அங்கிருந்த எல்லாரிடமும் சொல்லிவிட்டார்.

நயன்தாரா இப்படியெல்லாம் செய்ய வேண்டிய அவசியமே கிடையாது. ஏனென்றால் எனக்கும் அவங்களுக்கும் பெரிய அளவில் அறிமுகம் கிடையாது. ஒரு சில ஷாட் தான் நாங்கள் அந்த நேரத்தில் நடித்து இருந்தோம். ஆனாலும் அவர் நடந்து கொண்ட விதம் இப்போதும் என்னால் மறக்க முடியவில்லை என்று அந்த பேட்டியில் சரண்யா மோகன் பேசி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+