திருமண வாழ்க்கையில் அடுத்தடுத்து கிடைத்த ஏமாற்றங்கள்... வனிதாவின் மகள்கள் கொடுத்த அட்வைஸ்
நடிகை வனிதாவின் மகள்கள் திருமண விஷயத்தில் அவருக்கு கொடுத்த அறிவுரைகளை தற்போது பகிர்ந்து இருக்கிறார்.
சென்னை: நடிகை வனிதாவின் திருமண பிரச்சனைகள் பலருக்கும் தெரிந்ததுதான் அடுத்தடுத்து திருமண வாழ்க்கையில் ஏமாற்றங்களை சந்தித்து வந்த வனிதாவிற்கு அவருடைய மகள்கள் அறிவுரை கொடுத்து இருக்கின்றனர்.
தொடர்ந்து திருமண வாழ்க்கை முறிந்து வந்த நிலையில் மகள்கள் கொடுத்த அறிவுரை எனக்கு இப்போது நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது என்று வனிதா பகிர்ந்து இருக்கிறார்.
ஆண்களால் அடுத்தடுத்து தங்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சோகங்களால் வனிதாவின் மகள்கள் வித்தியாசமாக யோசித்து இருக்கின்றனர்.

திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சனை
நடிகை வனிதா சமூக வலைத்தளத்தில் சர்ச்சைகளுக்கு பரீட்சையமானவர். தன்னுடைய குடும்ப வாழ்க்கையிலும் நடிப்பு வாழ்க்கையிலும் பல்வேறு போராட்டங்களை தாண்டி வந்த நடிகை வனிதா அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு அவருடைய பெயர் சமூக வலைத்தளத்தில் அடிபட்டு கொண்டே இருக்கிறது. அதுவும் குறிப்பாக பீட்டர் பால் திருமண விஷயத்தில் எண்ணற்ற பிரச்சனைகள் வந்து கொண்டே இருந்தது. ஆனால் அதையெல்லாம் மீறி வனிதா பீட்டர் பாலை திருமணம் செய்து இருந்தார். இந்த பிரச்சனை சில மாதங்கள் ஓடியது பலருடைய எதிர்ப்பையும் மீறி வனிதா பீட்டர் பாலை திருமணம் செய்திருந்தார்.

வெளியான வதந்திகள்
திருமணத்திற்கு பிறகு சில நாட்கள் மகிழ்ச்சியாக போய்க் கொண்டிருந்த வனிதாவின் வாழ்க்கையில் பின்பு மீண்டும் சூறாவளி வீசத் தொடங்கியது. பீட்டர் பாலோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பீட்டர் பாலை தன்னுடைய வீட்டை விட்டு வனிதா விரட்டி விட்டிருந்தார். அதற்கு பிறகு தாங்கள் இருவரும் பிரிந்து விட்டதாக வீடியோவும் வெளியிட்டு இருந்தார். அந்த நேரத்தில் வனிதா பீட்டர் பாலுடன் மீண்டும் சேர்ந்து வாழ ஆசைப்பட்டதாகவும் ஆனால் அதற்கு பீட்டர் பால் ஒப்புக்கொள்ளாமல் வனிதாவை துரத்தி விட்டதாக சமூக வலைத்தளத்தில் சில வதந்திகள் வைரலானது. இந்த நிலையில் அதற்கு வனிதா விளக்கம் கொடுத்திருந்தார்.

வனிதாவின் விளக்கம்
நான் மீண்டும் சமரசம் செய்து கொள்ள முயல்வதாகவும், ஆனால் நிராகரிக்கப்பட்டதாகவும் சில ஆதாரமற்ற வதந்திகள் உழவுகின்றன. தயவுசெய்து இதுபோன்ற மாயைகளில் இருந்து வெளியே வாருங்கள். ஏனெனில் என் வாழ்க்கையில் யாருமே என்னை நிராகரித்ததில்லை. நான் தான் யாரையாவது நிராகரித்திருப்பேன். இதற்கு முன் நான் என் உறவுகளை சரிசெய்ய என்னால் முடிந்த சிறந்த முயற்சிகளை செய்திருந்தேன். பல அபத்தங்களையும் பொறுத்திருந்தேன். ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு பொறுத்துக் கொள்ள முடியாமல் போனதால்தான் நான் அந்த உறவிலிருந்து வெளியேறினேன். என்னால் ஒரு பொய்யான வாழ்க்கை வாழ முடியாது நான் அப்படிப்பட்டவள் கிடையாது என்று விளக்கம் கொடுத்திருந்தார்.

மகள்களின் அறிவுரை
இந்த நிலையில் தற்போது வனிதா தன்னுடைய மகளுடன் தனியாகத்தான் வசித்து வருகிறார். தற்போது தன்னுடைய மகளுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது வனிதாவின் மகளிடம் நீங்கள் எப்பதாவது அம்மாவிற்கு அட்வைஸ் கொடுத்து அதைக் கேட்டு இருக்கிறார்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு தன் மகள்களுக்கு முன் பதிலளித்த வனிதா தினமும் இதுதான் நடக்கிறது. என் இரண்டு மகள்களும் சேர்ந்து ஒரு காலத்தில் காமெடியான அட்வைஸ் ஒன்றை செய்தார்கள். பேசாமல் நீங்கள் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளுங்கள்.அது தான் பெஸ்ட். இந்த ஆம்பளைங்க எல்லாம் வேஸ்ட் என்று சொன்னதாக கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications