மகாநதி திரைப்படம் நினைவிருக்கா? கமல் நடித்த படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
சென்னை: நடிகர் கமல்ஹாசன், சுகன்யா நடிப்பில் வெளியான மகாநதி திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த படத்தில் கமலின் மகளாக மகாநதி ஷோபனா நடித்திருந்தார்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: 80களில் சினிமா டைட்டில் ஓடும்போது ஒரு பெயர் மட்டும் மனதில் தைத்துவிடும். வெளியே வந்தாலும் மறக்காது. அது ஆர்ட் டைரக்டரின் டைட்டில் கார்டு.
'கலை வி.கலை'

இந்தப் பெயருக்கு சொந்தக்காரர் கலை சாய் வித் சித்ராவுக்கு கொடுத்த பேட்டியில் மணிவண்ணன் 'இனி ஒரு சுதந்திரம்' கதையையே திருப்பி 'அமைதிப்படை' எடுத்ததாக சொல்லி இருந்தார். ஒரு கதையை வேறொரு படத்தில் உபயோகிப்பதை பலர் செய்திருக்கிறார்கள்.
1983ல் 'சாரம்' என்று ஒரு மலையாளப் படம் வந்தது. பி.ஏ.பக்கர் என்கிற மலையாள அவார்டு பட இயக்குனர் இந்தப்படத்தை இயக்கி இருந்தார். இதில் நாயகன் பிரேம் நஸீர் பாசக்கார தந்தை. அவரின் மகள் ப்ரீதியாக மீனா மேனன் என்கிற நடிகை நடித்தார். அம்மா இல்லாததால் ப்ரிதி தனிமையாகவே இருப்பாள். ஒரு நாள் மகள் காணாமல் போய் விடுவாள்.
தந்தை நஸீர் போலீஸ் கம்ப்ளெய்ண்ட் கொடுத்து தேடுவார்கள். ஆனால் கண்டுபிடிக்கவே முடியாது. கடைசியில் தான் அவளின் தோழி மூலம் தெரியவரும். அவளுக்கு ஒரு ரௌடியோடு தொடர்பு இருந்ததும், அவர்கள் மும்பை போய் விட்டதும்.
மகளை தேடி மும்பையில் அலைவார் நஸீர். ஒரு ஹோட்டலில் அவர்கள் தங்கி இருந்ததும், வாடகை கொடுக்க முடியாமல் தப்பிப் போனதும் செய்தி தெரிய வரும்.
தேடி அலுத்துப்போன ஒரு சமயத்தில் ஒரு புத்தகக்கடையில் செக்ஸ் புத்தகம் ஒன்றில் ஒரு பெண்ணின் நிர்வாணப் புகைப்படம் இருக்கும். அது அவர் மகள் ப்ரீதி. அதிர்ந்து போய் நஸீர் அந்த புத்தக அலுவலகம் சென்று புகைப்படக்காரரைப் பிடித்து சென்றால் கடைசியில் மும்பை சிவப்பு விளக்குப் பகுதியில் அவள் விற்கப்பட்டது தெரியவரும்.
சிவப்பு விளக்கு பகுதியின் தெருக்களில் மகளை தேடி அலையும் போது மகளின் குரலில் பாடல் ஒலிக்க கடைசியாக தன் மகள் இருப்பிடத்தை அறிந்து நண்பன் ஒருவனின் உதவியுடன் மகளை கண்டு பிடித்து காரில் ஏற படம் முடியும். இந்தக் காட்சிகள் அப்படியே பிற்காலத்தில் ஒரு படத்தில் வந்தது. மும்பை கல்கத்தாவாக மாற்றப்பட்டது. ஆனால் இதை எடுத்தவர் இந்தப்படம் தான் இன்ஸ்பிரேஷன் எனச் சொல்லவேயில்லை.
தன் மகள் பள்ளியிலிருந்து திரும்பும் போது காணாமல் போன சில நிமிடங்களில் தோன்றிய எண்ணங்களே இப்படத்தின் கதை என ஒரு விளக்கம் சொன்னதாக ஞாபகம். ஆச்சர்யப்பட வைக்கும் ஒரு ஒற்றுமை என்ன தெரியுமா?. சாரம் படத்தில் மகளை மீட்க உதவும் பிம்ப் , நண்பர் கேரக்டரில் நடித்தவர் தான் பிற்காலத்தில் புதிய படத்தில் பெண்ணை கொல்கத்தாவில் விற்கும் கேரக்டரில் நடித்தவர்.

ஆம்...கொச்சின் ஹனீபா தான் அவர். இப்படி ஒரு படத்தின் கதை வேறொரு படத்தில் குறைத்தோ, கூட்டியோ எடுத்துக் கொள்வது பல காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு விஷயத்தை பாராட்டலாம். சாரம் படத்தில் சிவப்பு விளக்கு பகுதியிலிருந்து மீட்கப்படும் பெண்ணை இந்த சமுதாயம் வாழ விடுவதில்லை என வசனங்களும், க்ளைமேக்ஸில் மற்ற பெண்கள் தந்தையையும், மகளையும் பார்த்து சிரிப்பதாக இருக்கும்.
இந்த தமிழ்ப் படத்தில் மீட்கப்பட்ட பெண்ணை ஜெயில் வார்டன் மனமுவந்து தன் மகனுக்கு மணம் முடித்ததாக வரும். அந்த வகையில் இந்த உலகில் எல்லோரும் வாழ முடியும் என முடித்திருப்பார்கள். சாரம்...பின்னாளில் மகாநதி இவ்வாறு செல்வன் அன்பு என்பவர் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications