நடிகை சுகன்யா வாழ்க்கையில் இத்தனை சோகங்களா? அந்தப் பிரச்சனைக்கு காரணம் இதுவா?
சென்னை: நடிகை சுகன்யா சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சோகங்கள், பிரச்சனைகள் குறித்து பேசி இருக்கிறார்.
அதில் முன்னணி நடிகையாக தான் இருக்கும்போது தன்னைப் பற்றி வந்த வதந்திகள் குறித்தும் குறிப்பிட்டு இருக்கிறார்.
தன்னுடைய திருமண வாழ்க்கையில் எதனால் பிரிவு ஏற்பட்டது என்பது பற்றியும் பேசி இருக்கிறார்.
90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நாயகிகளில் ஒருவராக இப்ப வரைக்கும் இருந்து வரும் நடிகை சுகன்யா பரதநாட்டிய கலைஞர் தான். இவர் நடிப்பை விடவும் தனக்கு பரதநாட்டியம் டான்ஸ் தான் ரொம்ப பிடித்தது என்று ஆரம்பத்தில் கூறியிருக்கிறார். நடிக்கவே மாட்டேன் என்று கூறியிருந்த சுகன்யா முதல் முதலாக புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் கதாநாயகியாக அறிமுகம் ஆகி இருக்கிறார். அந்த திரைப்படத்திற்காக பல விருதுகளையும் வாங்கி இருக்கிறார்.

இதைத் தொடர்ந்து விஜயகாந்துடன் சின்ன கவுண்டர் திரைப்படத்தில் நடித்து முன்னணி நடிகையாக பிரபலமானார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து கமலுடன் மகாநதி, இந்தியன். விஜயகாந்த் உடன் சின்ன கவுண்டர், சத்யராஜ் உடன் திருமதி பழனிச்சாமி, சரத்குமார் உடன் மகா பிரபு என பல முன்னணி கதாநாயகர்களோடு அந்த நேரத்தில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்த கதாநாயகியாக வலம் வந்தார்.
நடிகையாக மட்டுமல்லாமல் ஒரு டப்பிங் கலைஞராகவும் மணிரத்தினம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் நந்திதா தாஸ்க்கு டப்பிங் குரல் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியலில் கதாநாயகியாக நடித்து சின்னத்திரை ரசிகர்களையும் இவரை புகழ வைத்து விட்டார்.
இவருடைய திறமை முடியவில்லை ஒரு இசை அமைப்பாளராகவும் ஒரு சில ஆல்பம் தொகுப்புகளையும் வெளியிட்டு இருக்கிறார். அந்த அளவிற்கு பிஸியாக இருக்கும் இருந்த நடிகை சுகன்யா சூட்டிங் ஸ்பாட்டில் கிடைக்கும் கொஞ்ச நேரத்திலும் கூட சும்மாவே இருக்க மாட்டாராம். அந்த நேரத்திலும் ஓவியம் வரைவது மியூசிக் கேட்பது டான்ஸ் கிளாஸ்சுக்கு செல்வது புதியதாக தன்னுடைய திறமையை எப்படி மெருகேற்றிக் கொள்ளலாம் என்றெல்லாம் யோசித்து தான் ஓடிக்கொண்டே இருப்பாராம்.
அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர் நடிகை சுகன்யாவை பற்றி வதந்தியாக ஒரு தகவலை பரப்பி விட்டு விட்டாராம். அதனால் மனதளவில் சுகன்யா ரொம்பவே காயப்பட்டு விட்டாராம். அப்போது தன்னுடைய தந்தை மற்றும் தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் உதவியோடு அந்த பத்திரிகையாளரின் பெயரில் தான் வழக்கு தொடர்ந்ததாகவும் கூறி இருக்கிறார். வழக்கு தொடர்ந்து அவரை பழிவாங்க வேண்டும் என்று எனக்கு ஆசை இல்லை ஆனால் எந்த ஒரு தவறும் செய்யாதவர்கள் மீது இப்படி ஒரு வதந்தி பரப்புவது தவறு என்று பலரும் புரிந்து கொள்ள வேண்டும் அதற்காகத்தான் நான் அப்படி போராடினேன் என்றும் கூறி இருக்கிறார்.
அது இல்லாமல் நான் சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் போது கூட அதிகமாக யாரிடமும் பேச மாட்டேன். எனக்கென்று அதிகமான வேலைகளை வைத்துக் கொண்டே இருப்பேன். அடுத்தடுத்து சூட்டிங் இருப்பது போன்று தான் நான் ஷெட்யூல் வைத்திருப்பேன். அப்படியும் சில நேரங்களில் கொஞ்சம் டைம் கிடைத்தாலும் நான் புதியதாக எதையாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஓடிக்கொண்டே இருப்பேன். அந்த அளவிற்கு நான் என்னுடைய வாழ்க்கையில் இருந்த நிலையிலும் என்னைப் பற்றியும் சில வதந்திகள் கிளம்பி கொண்டு தான் இருக்கிறது என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் இவர் 2002 ஆம் ஆண்டு அமெரிக்காவை சார்ந்த ஸ்ரீதர் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்திருந்தார். ஆனால் திருமணத்திற்கு பிறகு அடுத்த ஆண்டு இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை விவாகரத்து செய்து கொண்டார் இது பற்றியும் அதில் பேசி இருக்கிறார்.

அதில் பெண்கள் பயந்து ஓட தேவை இல்லை. கணவன் மனைவி இருவரும் கலந்து பேசி விவாகரத்து செய்யலாம். அல்லது நீதிமன்றம் சென்று விவாகரத்து பெறலாம். விவாகரத்து கொடுக்காமல் இருந்தால் கடுமையான காலங்களை குடும்ப வாழ்வில் எதிர்கொள்ள வேண்டிய தேவை ஏற்படும். பிடிக்காத திருமணத்திற்கு விவாகரத்து செய்ய பயப்பட வேண்டாம். அதெல்லாம் கடந்து தான் பெண்கள் வரவேண்டும் என்று தன்னம்பிக்கை கொடுக்கும் விதமாக பேசியிருக்கிறார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. அப்போ இதனால்தான் சுகன்யா விவாகரத்து செய்து கொண்டாரா என்று ஒரு கேள்வியும் எழும்பி இருக்கும் நிலையில் முதல் கணவரை சுகன்யா விவாகரத்து செய்த பிறகு அரசியல் பிரமுகர் ஒருவரோடு தொடர்பு இருப்பதாகவும் அவரைப் பற்றிய செய்திகள் வெளியானது. அது குறித்து எந்த தகவலையும் சுகன்யா கூறவில்லையே என்றும் அவர் அதற்கு விளக்கம் கொடுத்து வதந்திகளை தீர்த்து வைக்க வேண்டும் என்றும் சில ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications