"அந்த கஷ்டம் மட்டும் விரோதிக்கும் வரக்கூடாது” கொடுமையான வலி.. உருக்கமாக பேசிய வெங்கடேஷ் பட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பலருக்கும் பரிட்சயமான வெங்கடேஷ் பட் அவருடைய திருமணத்திற்கு பிறகு ஆரம்பகால வாழ்க்கையில் பட்ட வேதனைகளைப் பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார். அந்த வீடியோவை ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

தற்போதைய சூழ்நிலையில் பலரும் குழந்தை இல்லாமல் தவித்து வருகின்றனர். அந்த கஷ்டத்தை ஏழு வருடமாக வெங்கடேஷ் பட் அவருடைய மனைவியோடு அனுபவித்து இருக்கிறாராம்.

எந்த சூழ்நிலையிலும் தான் பட்ட கஷ்டம் என்னுடைய எதிரி கூட படக்கூடாது என்று ,உருக்கமாக குழந்தையின்மை பற்றி வெங்கடேஷ் பட் பேசி இருக்கிறார்.

ரசிகர்களை கவர்ந்த நடுவர்

ரசிகர்களை கவர்ந்த நடுவர்

ஒரு சமையல் கலைஞர் ஆக தனது வாழ்க்கையை துவங்கிய வெங்கடேஷ் பட் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்து விட்டார். இவருடைய பல சமையல் யூடியூப் சேனல்கள் இல்லத்தரசிகளின் ஃபேவரைட் ஆக இருந்து வருகிறது. இவர் டக்கு டக்குவென சமையல் செய்யும் விதத்தை பார்த்து பலர் இவருடைய சேனல்களை பார்த்து சமையல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களுடன் ஜாலியாக விளையாடிக் கொண்டே நடுவராக நிகழ்ச்சியை என்டர்டைன்மென்ட் கொடுத்து வருகிறார். பலர் மன அழுத்தத்தில் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியை பார்த்து ரிலீப் ஆகி வருவதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஏழு வருட தவிப்பு

ஏழு வருட தவிப்பு

எப்போதும் சிரித்த முகமாகவே துறுதுறுவென பார்த்த வெங்கடேஷ் பட்டின் வாழ்க்கையில் பல சோகமான மறுபக்கம் ஒளிந்து இருக்கிறதாம். அதுவும் திருமணத்திற்கு பிறகு இவருக்கு ஏழு வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்திருக்கிறது. குழந்தை இல்லாத கஷ்டத்தை இவர் ஒவ்வொரு நாளும் அனுபவிக்கும் போது ஏழு வருடமும் ஏழு யுகமாக கழிந்ததாக கூறியிருக்கிறார். இவருக்கும் இவருடைய மனைவிக்கும் சண்டை சச்சரவுகள் கூட இந்த பிரச்சனையால் அடிக்கடி ஏற்பட்டிருக்கிறதாம். எந்த பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தாலும் நமக்கு ஒரு குழந்தை இருந்திருந்தால் இப்படி ஒரு நிலைமை வந்திருக்காது என்று இவரையும் அறியாமல் இவரே எண்ணி தவித்து இருக்கிறாராம்.

சொந்த பந்தங்களின் தொல்லை

சொந்த பந்தங்களின் தொல்லை

சொந்த பந்தங்கள் நிகழ்ச்சிகளுக்கு சென்றால் கூட இவருடைய வயதை குறித்தும் குழந்தை இல்லையா என்று தான் அதிகமானோர் கேட்டு வருவார்களாம் .அதனாலே இவர் வெளியிடங்களுக்கு செல்வதற்கு கூட தவிர்த்து வந்துள்ளாராம். என்னதான் வெளியே சிரித்து கொண்டிருந்தாலும் வீட்டிற்குள் சென்றதும் வீட்டிற்குள் ஒரு வெறுமை நிலவுவதாக இவரும் இவருடைய மனைவியும் பலமுறை பீல் பண்ணி அழுது இருக்கிறார்களாம். தங்களுடைய வாழ்க்கையில் குழந்தை இல்லாததால் எவ்வளவோ வேதனைகளை அனுபவித்திருக்கிறோம் என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.

பட்ட கஷ்டத்திற்கு கிடைத்த பொக்கிஷம்

பட்ட கஷ்டத்திற்கு கிடைத்த பொக்கிஷம்

ஏழு வருடங்களுக்கு பிறகு வெங்கடேஷ் பட்டுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இருக்கிறார். அந்த குழந்தையும் கர்ப்பமாக ஆன நேரத்தில் இருந்து பிறக்கும் வரை பல கஷ்டங்களையும் ,பிரச்சனைகளையும் அனுபவித்து தான் பிறந்ததாம். தற்போது அந்தக் குழந்தைதான் வெங்கடேஷ் பட்டின் முழு உலகமாக இருந்து வருகிறாராம். அதனாலே, தான் பட்ட அந்த வேதனையை என்னுடைய எதிரி கூட படக்கூடாது என்று இவர் கூறியிருக்கிறார். அதுபோல குழந்தை இல்லை என்று பலரும் ஏங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், இல்லையே என கஷ்டப்படாமல் எனக்கு எப்படியும் கிடைக்கும் என்று உறுதியாக இருந்தால் கண்டிப்பாக கிடைக்கும் என்று அந்த வீடியோவில் அவர் பேசியிருக்கிறார். இதை பல ரசிகர்கள் பகிர்ந்து தங்களுடைய கருத்துக்களை கூறி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+