லவ் மேட்டர் தெரிஞ்சதும் அஜித் சொன்ன விஷயம் இதுதான்.. மனம் திறந்த அமீர்-பாவனி... வாழ்த்தும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாவனி மற்றும் அமீர் நடிகர் அஜித்குமார் பற்றி பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து இருக்கின்றனர்.

பாவனி மற்றும் அமீர் காதல் விஷயம் தெரிந்ததும் அஜித் என்ன செய்தார் என்று இருவரும் மகிழ்ச்சியோடு ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கின்றனர்.

தற்சமயம் துணிவு திரைப்படம் வெளியாகி இருக்கும் நேரத்தில் அஜித் பற்றி தெரியாத பல ரகசியங்களையும் பாவனியும் அமீரும் கூறி இருக்கின்றனர்.

பிக் பாஸ் பிரபலங்களுக்கு கிடைத்த லக்

பிக் பாஸ் பிரபலங்களுக்கு கிடைத்த லக்

பல்வேறு எதிர்பார்ப்புகளோடு காத்திருந்த துணிவு திரைப்படத்தின் முதல் நாள் காட்சி இன்று தொடங்கி இருக்கும் நேரத்தில் அந்த திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்த பிக் பாஸ் பிரபலங்களான பாவனி மற்றும் அமீர் பல்வேறு சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து இருக்கின்றனர். இந்த வீடியோவை தற்போது ரசிகர்கள் பலரும் பகிர்ந்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். பிக் பாஸ் சீசன் ஐந்தாவது போட்டியாளர்களாக கலந்து கொண்டு காதலர்களாக மாறிய அமீர் மற்றும் பாவனி ரசிகர்களுக்கு பேவரைட் ஜோடி தான். இவர்களோடு சிபியும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார். திரைப்படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்தே படக்குழுவில் உள்ள பல பிரபல பிரபலங்கள் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தனர். அந்த வகையில் பாவனியும் அமீரும் தற்போது பேட்டி கொடுத்திருக்கின்றனர். அந்த வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

காதலை சொல்ல தருணம்

காதலை சொல்ல தருணம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமீர் தன்னுடைய காதலை பாவனியிடம் தெரிவித்திருந்த நிலையில் பாவனி அதற்கு அப்போது ஓகே சொல்லாமல் இருந்தார். அதற்கு பிறகு பிக் பாஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சியின் டைட்டில் ஜெயித்த தருணத்தில் சமூக வலைதள பக்கத்தில் மூலமாக தன்னுடைய காதலை அமீருக்கு மட்டுமல்லாமல் மொத்த ரசிகர்களுக்கும் தெரியப்படுத்தி இருந்தார் அந்த நிலையில் தான் துணிவு படத்தின் இவர்களுக்கு நடிப்பதற்கு அழைப்பு வந்திருக்கிறது. அப்போது இவர்களை யாரோ கலாய்க்கிறார்கள் என்று தான் நினைத்திருந்தார்களாம். பிறகு தான் அது உண்மை என்று தெரிந்ததாம்.

சூட்டிங் ஸ்பாட் பதட்டங்கள்

சூட்டிங் ஸ்பாட் பதட்டங்கள்

இந்த நிலையில் முதல் நாள் இவர்கள் சூட்டிங் சென்றதும் அதிகமாக பதட்டத்துடன் தான் இருந்தார்களாம். அமீர் அஜித்தின் பக்கத்தில் அமர்ந்திருந்தால் அசையாமல் அப்படியே இருப்பாராம். எப்பவாவது அஜித்தை பார்க்க மாட்டோமா என்று ஏங்கி இருந்தவர்களுக்கு அருகிலே அமர வாய்ப்பு கிடைத்ததும் இவர்களாலே நம்ப முடியவில்லையாம். அஜித் எல்லோரிடமும் அன்பாக பழகினார். அதுமட்டுமல்லாமல் அவர் வரும்போதும் யாரும் எழுந்து நிற்க கூடாது. எழுந்து நின்றால் பெவிகால் போட்டு ஒட்டி விடுவதாக கூறி இருந்தாராம். நாட்கள் செல்ல செல்ல அஜித்தோடு நடிக்கிறோம் என்ற பதட்டமே இல்லாமல் மாறி இருந்ததாம். அந்த நேரத்தில் தான் சூட்டிங் ஸ்பாட்டில் இவர்கள் அஜித்தோடு எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பெரும் வைரலாக பரவி வந்தது.

காதலுக்கு கூறிய அட்வைஸ்

காதலுக்கு கூறிய அட்வைஸ்

அதுமட்டுமல்லாமல் இவர்கள் நடித்த அந்த 15 நாட்கள் மிகவும் அற்புதமானது என்றும் கூறியிருக்கிறார்கள். அதோடு முதல் நாளிலிருந்து கடைசி நாள் வரைக்கும் என்ன நடந்தது என்று இப்போதும் அப்படியே நினைவில் இருக்கிறது. அஜித் அந்தளவிற்கு தங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் என்று கூறியிருக்கிறார்கள். அஜித் தங்களோடு சகஜமாக பழகி வந்த நிலையில் தான் இவர்களுடைய காதல் இரண்டாவது நாளில் அவருக்கு தெரிந்திருக்கிறது. அப்போது இவர்கள் இருவரையும் கூப்பிட்டு வாழ்க்கையில் என்னவெல்லாம் செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது, என்ன மாதிரி கொண்டு போக வேண்டும் என்று இவர்கள் இருவருக்கும் அட்வைஸ் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் தான் படத்தின் கடைசி நாள் வந்திருக்கிறது. அதை எங்களால் மறக்கவே முடியாது என்று கூறியிருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+