முகம் கலராக மாறுவதற்கு பாக்கியலட்சுமி ரித்திகா என்ன செய்தார் தெரியுமா?இவ்வளவு எளிமையானதா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ரித்திகா அமிர்தா கேரக்டரில் நடித்து வருகிறார்.
அவர் ஒரு பேட்டியில் தான் தன்னுடைய முக அழகை எப்படி பராமரித்துக் கொள்கிறேன் என்று சில ரகசியங்களை கூறியிருக்கிறார்.
அதிகமாக ரசாயன பொருட்களை பயன்படுத்தாமல் எளிமையாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து முகத்தை கலராக மாற்ற முடியும் என்று அவர் நம்பிக்கை கொடுத்திருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவாக பலருடைய மனதை கவர்ந்த ரித்திகா ஏற்கனவே விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். குறிப்பாக ராஜா ராணி சீரியலில் அறிமுகமாகி இருந்த ரித்திகா நடிப்பதற்கு ஆரம்பத்தில் ஆசைப்படவே இல்லையாம்.
ஒரு தொகுப்பாளராக வரவேண்டும் என்று ஆசைப்பட்ட ரித்திகாவிற்கு நடிக்க வாய்ப்பு கிடைத்த பிறகு முதலில் மறுத்தாலும் அதன் மூலம் தனக்கு கிடைக்கும் வரவேற்பு மற்றும் ரசிகர்களின் அன்பை பார்த்து தான் மீண்டும் நடித்துக் கொண்டு இருப்பதாக கூறி இருக்கிறார். இந்த நிலையில் இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் முடிந்தது.
ரித்திகா விஜய் டிவியில் வேலை செய்யும் வினோத் என்பவரை தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவருடைய அழகு குறித்து பலரும் இவரிடம் அழகு குறிப்பு கேட்டுக் கொண்டிருக்கின்றனர். போகும் இடம் எல்லாம் இவரிடம் இதே கேள்விதான் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் பேட்டியில் அதற்கான ரகசியம் என்னவென்று கூறியிருக்கிறார்
ரித்திகா ஸ்கின் பளபளப்பாக இருப்பதற்கு காரணம் தக்காளி ஜூஸ் தானாம். தினமும் தவறாமல் தக்காளி ஜூஸ் குடிப்பதை வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதோட ஸ்கின் டேமேஜ் ஆகாமல் இருக்க காரணம் அதிக மேக்கப் பொருட்களை பயன்படுத்த மாட்டாராம்.

சூட்டிங் இல்லாத நேரத்தில் அல்லது வெளியிடங்களுக்கு செல்லும்போது கூட மேக்கப் போடாமல் வெறும் மாய்ஸ் ரைசர் மட்டும்தான் பயன்படுத்துவாராம். அதுபோல பார்லர் செல்வது பேசியல், பிலிச்சிங் போன்ற பழக்கங்களும் ரித்திகாவிற்க்கு கிடையாதாம். அதற்குப் பதில் வீட்டிலேயே தயிர் சேர்த்த ஹெர்பல் பேஸ் பேக்கில் தான் போடுவாராம்.
அதோடு ஆரஞ்சு தோலை வீட்டிலேயே காய வைத்து நன்கு பொடியாக்கி அந்த பவுடரை முகத்தில் இரவு நேரத்தில் பாலுடன் சேர்த்து அப்ளை செய்வாராம். இதனால் முகம் இயற்கையாகவே பிரகாசமாக மாறிவிடும் என்று கூறியிருக்கிறார். அதோடு தினமும் இளநீர் குடிப்பது ரித்திகாவின் வழக்கமாக இருக்கிறதாம். இளநீர் தினமும் குடிப்பதால் வயிற்றை குழுமையாக்கி முகத்திற்கு ஒரு விதமான குளோ கிடைக்கும் என்றும் கூறியிருக்கிறார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங்












Click it and Unblock the Notifications