தினேஷ் என்கிற பெயரை உளறிய ஷிவின், ரச்சிதாவின் எதிர்பார்க்காத செயல்.. ஒரே வார்த்தையில் பதில்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய ரச்சிதா மீண்டும் இன்று அந்த வீட்டிற்குள் வந்திருக்கிறார்.
ரச்சிதாவை ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த ஷிவின் ரச்சிதாவிடம் கேட்ட கேள்வி ரச்சிதாவை கோபப்பட வைத்திருக்கிறது.
ரச்சிதாவின் கணவருடைய பெயரை கூறி ஷிவின் கேட்ட கேள்வியால் ரச்சிதா ஷிவினை முறைத்து இருக்கிறார்.

இறுதிக்கட்டத்தில் சுவாரசியம்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் தற்போது கடைசி வாரத்தில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. இன்னும் இந்த நிகழ்ச்சி முடிவடைய ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஆறு போட்டியாளர்கள் மட்டுமே இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கின்றனர். ஏற்கனவே இந்த நிகழ்ச்சியை விட்டு எவிட் ஆகி வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்து இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து எவிட் ஆகி வெளியேறிய ரச்சிதாவும் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டும் வந்திருக்கிறார்.

ஷிவின் கேட்ட கேள்வி
ஏற்கனவே பல போட்டியாளர்கள் இரு தினங்களுக்கு முன்பே வந்துவிட்ட நிலையில் ரச்சிதா இன்று தான் வந்திருக்கிறார். ரட்சிதாவின் வருகையை அவருடைய நெருங்கிய தோழியான ஷிவின் ஆரம்பத்தில் இருந்தே எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு இடத்திலும் தான் ரச்சிதாவை அதிகமாக மிஸ் பண்ணுவதாக கூறிக் கொண்டே இருந்தார். இந்த நிலையில் இன்று ரச்சிதா வந்ததும் அவரிடம் அதிகமான கேள்விகளை கேட்டுக்கொண்டு பாசமாக பேசிக்கொண்டு இருந்தார். அப்போது ஷிவின் கேட்ட ஒரு கேள்வி ரச்சிதாவை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

குழப்பமான கேள்வி
ஷிவின் ரச்சிதாவிடம் நீ தினேஷிடம் பேசினியா என கேட்க எந்த பதிலும் சொல்லாமல் முறைத்தபடி இருக்கிறார். பிறகு தான் கேட்டது தவறு என்று புரிந்து கொண்டாரோ என்னவோ ஷிவினும் நான் சொன்னேன். இந்த வாரம் வெளியேறிய ஏடிகேவிடம் பேசினியா என்று கேட்பதற்கு மாறி தினேஷ் என்று கேட்டு விட்டேன் என்று சொல்ல நான் ஒன்னும் பேசவில்லை என்று ரச்சிதா பேசி முடிக்கிறார்.ஆனால் அருகில் இருந்த அனைவரும் தினேஷ் என்ற கேள்வியை ஷிவின் கேட்டதும் சிரிக்கின்றனர். ஆனால் ரச்சிதா கோபத்தோடு தான் இருக்கிறார். இதனால் ஷிவின் ரச்சிதாவிடம் அப்படியே சமாளித்துக் கொண்டிருக்கிறார்.

கணவர் பற்றி பதில் இல்லை
ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது அவருடைய கணவர் தினேஷ் அவருக்கு அதிகமாக சப்போர்ட் கொடுத்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் வெளியே வந்த பிறகு மனம் விட்டு பேசி மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள் என்று இவர்களுடைய ரசிகர்கள் ஆசைப்பட்டு கொண்டிருந்த நிலையில் அதைப்பற்றி எந்த தகவல்களையும் வெளியே பேசாமல் இருந்து வரும் ரச்சிதா முதல் முறையாக ஷிவில் கேட்ட கேள்வியால் தன்னுடைய பதிலை சொல்ல முடியாமல் திணறி இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரச்சிதா பல்வேறு டிவி சேனல்களில் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அப்போது கூட அவருடைய கணவரை பற்றி யாருமே கேள்வி கேட்கவும் இல்லை. அவர் எந்த பதிலையும் கூறவில்லை ஆனால் திடீரென்று ஷிவின் கூறியதை கேட்டு ரச்சிதா திணறியதை வைத்து சமூக வலைத்தளத்தில் ரசிகர்களும் பீல் பண்ணி கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப்












Click it and Unblock the Notifications