மணிமேகலை வெளியேற்றம் குறித்து அந்த நிகழ்ச்சியின் டைரக்டர் கூறிய கருத்து.. அப்போ இதுதான் காரணமா?

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேறியது குறித்து அந்த நிகழ்ச்சியின் டைரக்டர் பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 4 இல் இருந்து மணிமேகலை விலகி இருப்பதாக அவரே பதிவு வெளியிட்டு இருந்தார்.

மணிமேகலை எதனால் திடீரென எந்த முடிவு எடுத்தால் என்ன ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் டைரக்டர் பார்த்திவ் மணிமேகலைக்கு இனிமேலும் உங்களுடைய ஃபியூச்சர் ப்ராஜெக்ட் எல்லாம் நல்லா வர வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

தொகுப்பாளர் மணிமேகலை

தொகுப்பாளர் மணிமேகலை

2019 ஆம் ஆண்டில் இருந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்று ரசிகர்களின் மத்தியில் தனி வரவேற்பு இருக்கிறது. சின்ன திரையில் சீரியல்களை பார்த்து அலுத்து போய் இருந்த ரசிகர்களுக்கு இந்த நிகழ்ச்சி வரப்பிரசாதமாக கிடைத்தது. அதன் காரணமாகத்தான் தற்போது நான்காவது சீசனில் இது அடி எடுத்து வைத்திருக்கிறது. முதல் மூன்று சீசன்களில் ஒரு கோமாளியாக அறிமுகமாகி தொகுப்பாளர் மணிமேகலை தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை இந்த நிகழ்ச்சியில் ஏற்படுத்தி இருக்கிறார்.

ரசிகர்களை கவர்ந்த குணம்

ரசிகர்களை கவர்ந்த குணம்

காதலித்து திருமணம் செய்து கொண்டு பெற்றோருடைய எதிர்ப்பையும் மீறி தன்னுடைய கணவரோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் மணிமேகலை விஜய் டிவியில் தொகுத்து வழங்காத நிகழ்ச்சிகள் இல்லை என்று சொல்லும் வகைக்கு அதிகமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் திடீரென அதிலிருந்து கொஞ்சம் பிரேக் எடுத்து தற்போது குக் வித் கோமாளியாக நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராகவே மாறி இருக்கிறார். இவர் கோமாளியாக செய்யும் கோமாளித்தனம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. டைமிங் காமெடியில் பக்கத்தில் இருப்பவர்களை மொக்கை செய்து, அவர்கள் தன்னை திருப்பி என்னதான் கலாய்த்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் சிரித்த முகமாக இருக்கும் இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கூடிக்கொண்டு தான் இருக்கின்றனர்.

நெகிழ்ச்சியான பதிவு

நெகிழ்ச்சியான பதிவு

இந்த நிலையில் கடந்த வாரத்தோடு மணிமேகலை தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார், அதில்,இன்று குக் வித் கோமாளியில் என்னுடைய கடைசி எபிசோடு நான் வரமாட்டேன் என நானே வருவேன் கெட்டப்பில் அறிவிக்கிறேன் என்று ஆரம்பித்து இருந்தார்.2019 இல் தொடங்கிய முதல் சீசனில் இருந்து நீங்கள் எனக்கு குக் வித் கோமாளிக்காக அதிக அளவு அன்பை பொழிந்து கொண்டிருக்கிறீர்கள். அதற்கு நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன். எனக்கு கொடுக்கப்படும் வாய்ப்புகளில் நான் எப்போதும் பெஸ்ட் ஆக இருக்க அதிக அளவு efforts போட்டு இருக்கிறேன். உங்களை entertain செய்ய கொஞ்சம் justice செய்து இருக்கிறேன். உங்களிடம் இருந்து எதிர்பாக்காத அளவு அன்பு கிடைத்தது. அது நான் செய்யும் மற்ற விஷயங்களிலும் இருக்கும் என நம்புகிறேன் என்று பதிவிட்டு இருந்தார்.

மணிமேகலையின் பதிவு

மணிமேகலையின் பதிவு

இதைப் பார்த்த ரசிகர்கள் பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் மணிமேகலை இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று பல்வேறு கருத்துக்களும் கேள்விகளும் பலம் வந்து கொண்டிருக்கிறது. இதைப்பற்றி மணிமேகலை எந்த விளக்கமும் கொடுக்காத நிலையில் பலர் குக் வித் கோமாளி டீம் உடன் தான் மணிமேகலைக்கு ஏதாவது பிரச்சனை இருக்குமா? என்று கேட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அந்த நிகழ்ச்சியின் டைரக்டர் பார்த்திவ் மணிமேகலையின் பதிவிருக்கு கருத்து கூறியிருக்கிறார். அதில் உங்களின் எதிர்கால முயற்சிக்கு வாழ்த்துக்கள் மணி என்று கூறி இருக்கிறார். அதற்கு ரசிகர்கள் அவரிடம் மணிமேகலை எதற்காக வெளியேறினார் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இதுவும் சந்தேகம்

இதுவும் சந்தேகம்

இன்னும் சில ரசிகர்கள் சில மாதங்களுக்கு முன்பு மணிமேகலை ஒரு பேட்டியில் தங்களுக்கு youtube இல் இருந்து வருமானம் அதிகமாக வருகிறதா அல்லது விஜய் டிவியில் இருந்து வருமானம் அதிகமாக வருகிறதா என்று கேட்டபோது மணிமேகலை யூடியூபில் இருந்து என்று கூறியதால் தான் மணிமேகலை வெளியேற்றப்பட்டு இருப்பாராக இருக்குமோ? என்றெல்லாம் தங்களுடைய சந்தேகங்களை கேள்விகளாக கருத்துக்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

புது சூட்டிங் தொடங்கியாச்சு

புது சூட்டிங் தொடங்கியாச்சு

இந்த நிலையில் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் புது சூட்டிங் நடக்கும் வீடியோ ஒன்றை மணிமேகலை பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் இதனால்தான் அப்போ விலகினாரா? புது வாய்ப்பு வந்து இருக்கிறதா? அதை பற்றி விளக்கமாக எதுவும் மணிமேகலை கூறவில்லையே? என்று கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். பல பிரபலங்களும் மணிமேகலையும் மிஸ் பண்ணுவதாக கருத்துக்கூறி வரும் நிலையில், பலர் மணிமேகலையின் அடுத்த முயற்சி பிரபாண்டமாக வரவேண்டும் என்று வாழ்த்து கூறி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+