அடிப்பாவி நீ இப்படி பண்ணுவன்னு எதிர்பார்க்கல.. சமூக வலைத்தளத்தில் மகளைத் திட்டிய அர்ச்சனா.. காரணம்?
சென்னை: தொகுப்பாளர் அர்ச்சனாவின் மகளான சாரா சமூக வலைத்தளத்தில் அர்ச்சனாவின் வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.
சாராவும் தற்போது தொகுப்பாளராக மாறி இருக்கும் நிலையில் தன்னுடைய அம்மாவை பற்றி வீடியோ வெளியிட்டதற்கு பல்வேறு கருத்துக்கள் குவிந்து வருகிறது.
எப்போதும் ஜாலியாக பேசும் அர்ச்சனா தற்போது தன்னுடைய மகள் செய்த செயலுக்கு சமூக வலைத்தளத்தில் திட்டி இருப்பதை குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ஜீ தமிழ் செல்லப்பிள்ளை
ஜீ தமிழில் செல்லப்பிள்ளையாக வலம் வந்து கொண்டிருந்த விஜே அர்ச்சனா இந்த டிவியில் தொகுத்து வழங்காத நிகழ்ச்சிகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். தொகுப்பாளர் மட்டுமல்லாமல் விருது வழங்கும் நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கி தன்னுடைய பேச்சால் ரசிகர்களை கட்டி இழுத்தவர்.

அம்மாவுக்கு சளைக்காத பொண்ணு
தொகுப்பாளராக இவர் இருந்தாலும் பலபேர் மனதில் நல்ல ஒரு இடத்தில் இருந்தவர். ஆனால் திடீரென்று விஜய் டிவியின் நிகழ்ச்சியில் இவர் களம் இறங்கியதும் அனைத்து ரசிகர்களும் ஷாக் ஆகி விட்டனர். ஜீ தமிழில் இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருப்பது போல அவருடைய மகளும் அவருடன் இணைந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானார். சூப்பர் மாம் என்னும் நிகழ்ச்சியை அம்மா பொண்ணு இருவருமே சிறப்பாக தொகுத்து வழங்கி பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றிருந்தனர் .

கருத்து பட்டிமன்றம்
இந்த நிகழ்ச்சியில் அம்மா அழகா பொண்ணு அழகா என்று பல பேர் பட்டிமன்றமே வைத்திருந்தனர். அந்த அளவிற்கு இருவரும் பேச்சாலும் அழகாலும் பம்பரம் போல் சுற்றி வந்தனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நாலாவது சீசனில் இவர் கன்டஸ்டன்ட்டாக அறிமுகமாகும்போது பலர் அதிர்ச்சி அடைந்தனர்.இவர் ஜீ தமிழில் செல்லப் பிள்ளையாக இருந்தவர். திடீரென விஜய் டிவி நிகழ்ச்சியை களமிறங்கியிருக்கிறார் என்று தான் பலரும் யோசித்து வந்தனர். ஆனாலும் இந்த வீட்டிற்குள் சென்ற பிறகு இவருக்கு ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட் வந்துகொண்டிருந்தன.

அன்பு டீம்
இந்த வீட்டிற்குள் இவர் அன்பு என்று ஒரு டீம் ஏற்படுத்தி அன்பால் உலகை மாற்றி விடலாம் அனைவரையும் மாற்றலாம் என்று அடிக்கடி பேசிக் கொண்டிருந்தனர் .அன்பு தான் ஜெயிக்கும் என்றும் இவரது தாரக மந்திரமாக இருந்ததால் இப்ப வரைக்கும் இவரை அன்பு டீம் தலைவி என்றுதான் சிலர் கலாய்த்து வருகின்றனர். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும்போது அவர் அந்த வீட்டிற்குள் இருக்கும் போது வெளியே அவரைப் பற்றி வரும் நெகட்டிவ் கமெண்ட்களுக்கு அவருடைய மகள் சாரா தக்க பதிலடி கொடுத்துக்கொண்டிருந்தார் .

இதை எதிர்பார்க்கலையே அர்ச்சனா
ஆனாலும் அடங்காத ரசிகர்கள் அவரை ஒரு சின்னப் பெண் என்று கூட பார்க்காமல் திட்டி தீர்த்து வந்தனர்.ஆனால் அதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இந்த மாதிரி நெகட்டிவ் கமெண்டுகளை கண்டுகொள்ளவே கூடாது என்று தங்களுடைய வழியில் போய்க் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தன்னுடைய மகளோடு அர்ச்சனா ஒரு இடத்திற்கு சென்றிருக்கிறார். அங்கே இயற்கையின் அழகை பார்த்து லயத்து போன அர்ச்சனா அங்கே சில புகைப்படங்களையும் எடுத்திருக்கிறார். அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த சாரா அழகான இடங்களில் புகைப் படங்களை கிளிக் செய்யும் இந்திய பெற்றோர்கள் என்று தன்னுடைய அம்மாவின் வீடியோவை வெளியிட அந்த வீடியோவை பார்த்த அர்ச்சனா, அடிப்பாவி நீ டைரக்ட் பிளான் பண்ணும் போதே நான் இதை நினைச்சேன் என்று கருத்து வெளியிட்டிருக்கிறார். அதற்கு சாரா சிரித்து வைத்திருக்கிறார். தற்போது இந்த பதிவிற்கு அதிகமாக கருத்து குவிந்து வருகிறது.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications