"அயலியை அம்மாவுடன் பாருங்கள்” இது பலருடைய கதை.. வெற்றி விழாவில் இயக்குனர் முத்துக்குமார் பேச்சு
அயலி வெப்சீரிஸை அனைவரும் அம்மாவுடன் சேர்ந்து பாருங்கள் என இயக்குனர் முத்துக்குமார் வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.
சென்னை: அயலி வெப் சீரிஸ் வெற்றி விழாவில் இயக்குனர் முத்துக்குமார் ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
என் அம்மா மற்றும் பல பெண்களுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் தான் அயலி திரைப்படத்தில் வந்துள்ளது என கூறி இருக்கிறார்.
அயலி திரைப்படத்தில் நடக்கும் நிகழ்வுகள் பல பெண்களின் வாழ்க்கையிலோ அல்லது பலர் சொல்லியோ கேட்டிருப்பார்கள் என்று கூறி இருக்கிறார்.

வெற்றி கொண்டாட்டம்
கடந்த ஜனவரி 26 ஆம் தேதி ஜி5 ஒடிடி தளத்தில் வெளியான அயலி வெப் சீரிஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதுவரைக்கும் எந்த கமர்சியல் வெப் சீரிஸ்க்கும் இந்த அளவிற்கு இதை போன்று வரவேற்பு கிடைக்கவில்லை என்று சொல்லும் வகையில் தான் இந்த வெப் சீரிஸ் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இது இதுவரைக்கும் 50 பில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது அது மட்டும் அல்லாமல் நான்கு வாரங்களாக கடந்தும் ரசிகர்களின் பிடித்த சீரியஸில் முன்னணியில் இருக்கிறது வெப் சீரிஸ் வெற்றி கொண்டாட்டம் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாந்த் லேப்பில் நடைபெற்றது.

இதை எதிர்பார்க்கவில்லை
வெற்றி விழாவில் இயக்குனர் முத்துக்குமார் வெப் சீரிஸ் என்பதால் நிறைய கதாபாத்திரங்கள் தேவைப்பட்டது. கதாபாத்திரங்களுக்குள் முக்கியத்துவம் மாறுபடாக இருக்கும் ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் பல சீனியர் நடிகர்கள் இதில் நடித்து கொடுத்தனர். வெப் சீரிஸ் வெளியான பிறகு நடந்த சம்பவங்கள் அனைத்தும் எதிர்பாராதது. நினைத்து கூட பார்க்காத பல சம்பவங்கள் நடந்திருக்கிறது. திரையலகில் பலரும் எனக்கு தொடர்ந்து தொடர்பு கொண்டு பேசி வாழ்த்தினார்கள். அது மட்டும் அல்லாமல் அரசியலில் இருப்பவர்களும் வாழ்த்தினார்கள். மாதவிடாய் காலங்களில் பெண் ஒருவர் பூஜை அறைக்குள் சென்றது குறித்த மாற்றங்களை நிறைய பேர் என்னிடம் கூறும்போது நெகிழ்ந்தேன்.

பலர் சந்தித்த பிரச்சனை
இந்த சினிமா சமூகத்தில் மாற்றத்தை உண்டாக்கும் என நான் நினைத்ததில்லை. காரணம் ஏற்கனவே மாற்றத்திற்கான சமூகத்தில் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு பக்க பலமாக சினிமா இருக்கும் என நான் நினைத்தேன். ஆனால் இப்போது இந்த சினிமாவால் பல மாற்றங்களை அரங்கேற்ற முடியும் என்பதை நானும் புரிந்து கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அது மட்டுமில்லாமல் அயலியை உங்கள் அம்மாவுடன் சேர்ந்து பாருங்கள். நான் இதை படமாக்கலாம் என நினைத்தபோது என் அம்மாவும் இதை சந்தித்திருக்கலாம் என்று எனக்கு தோன்றியது.இந்த சீரியஸில் அனுமோல், நடித்த குருவம்மாள் குழந்தையாக இருக்கும்போது பக்கத்தில் இருப்பவரின் சிலேட்டை பார்த்து எழுதி டீச்சர்ரிடம் அடி வாங்கியது என்னுடைய அம்மா சொன்ன கதை தான்.

ஆண்களின் நம்பிக்கை
இதே போல நிறைய பெண்கள் சந்தித்த பல பிரச்சனைகளையும் இந்த தொடருக்காக நான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். அவர்கள் தான் இந்த கதைக்கு காரணம். அது மட்டும் அல்லாமல் இந்த கதை பெண்களை மைய கதாபாத்திரமாக கொண்ட கதையாக இருந்தாலும், ஆண் கேரக்டர்களும் கதைக்காக உள்ளே வந்து நடித்தது அந்த மைண்ட் செட் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மொத்த குழுவும் என் மீது நம்பிக்கை வைத்தார்கள் என்று கூறியிருக்கிறார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications