Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமணத்திற்கு பிறகு சில மாதங்களுக்குள் மகாலட்சுமிக்கு கிடைத்த பரிசு... நெகிழ்ச்சியாக வெளியிட்ட பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீபத்தில் திருமணம் முடிந்திருந்த மகாலட்சுமிக்கு அவருடைய கணவர் அன்பு பரிசு ஒன்றை வழங்கி இருக்கிறார்.

திருமணம் முடிந்த ஒரு சில மாதங்களுக்குள் மகாலட்சுமிக்கு விலை உயர்ந்த காரை பரிசளித்த ரவீந்தர் நெகிழ்ச்சியான பதிவினை வெளியிட்டு இருக்கிறார்.

புது காரோடு மனைவியை குறித்து ரவீந்தர் வெளியிட்ட பதிவுக்கு வாழ்த்துக்கள் அதிகரித்து வருகிறது.

மகாலட்சுமியின் இரண்டாவது திருமணம்

மகாலட்சுமியின் இரண்டாவது திருமணம்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலில் வாசுகி கேரக்டரில் நடித்து வரும் மகாலட்சுமி சமீபத்தில் தான் திருமணம் செய்திருந்தார். இவருடைய திருமணம் சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஏற்கனவே திருமணம் முடிந்து ஒரு குழந்தை இருக்கும் நிலையில் இவர் இரண்டாவது முறையாக தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்து விட்ட நிலையில் இவர்களுடைய இரண்டாவது திருமணம் மகிழ்ச்சியாக தொடங்க வேண்டும் என்று இவருக்கு சமூக வலைத்தளத்தில் அதிகமானோர் வாழ்த்து கூறி வந்தனர்.

இணையதளத்தில் பரபரப்பு ஏற்படுத்திய தம்பதி

இணையதளத்தில் பரபரப்பு ஏற்படுத்திய தம்பதி

கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு இவர்களுடைய திருமணம் எளிமையாக நடைபெற்றது. ஆனால் திருமணத்திற்கு பிறகு இவர் மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் சமூக வலைதளத்தில் பலரும் அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு வைரலாக பரவி வந்தனர் .இவர்களுடைய புகைப்படங்கள் மீம்ஸ் களாகவும் ட்ரோல்களாகவும் வலம் வந்து கொண்டிருந்தது. தற்போது வரைக்கும் அந்த ஒரு எஃபெக்ட் இருந்து வருகிறது. தொகுப்பாளர் மற்றும் நடிகையாக இருக்கும் மகாலட்சுமிக்கு அவருக்கு உடலளவில் பொருத்தமில்லாத தயாரிப்பாளர் ரவீந்தர் கணவரா ?என்று பலர் கருத்து தெரிவித்த நிலையில் இவர்கள் காதலுக்கு மனது மட்டும் இருந்தால் போதும் என்று பலரும் வாழ்த்துக்களை கூறியிருந்தனர்.

வாசுகியை திட்டும் ரசிகர்கள்

வாசுகியை திட்டும் ரசிகர்கள்

திருமணத்திற்கு பிறகு ஒரு சில நாட்களாகவே பல சேனல்களில் பேட்டி கொடுத்து பலரையும் வெறுப்பேத்தி கொண்டிருந்தனர். இவர்களுக்கு இருதரப்பட்ட கருத்துக்கள் அதிகரித்து வந்து கொண்டிருந்தது. அது மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் இவர்களுடைய திருமணத்திற்கு வாழ்த்துகளையும் கூறி வந்தனர் .இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகும் மகாலட்சுமி தன்னுடைய வழக்கமான சீரியலில் நடித்து வருகிறார். அன்பே வா சீரியலில் இவர் வாசுகி ஆக கதாநாயகியை பாடாய் படுத்தி வருவதை பார்த்த பல ரசிகர்கள் இவரை கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.

மகாலட்சுமிக்கு கிடைத்த மகிழ்ச்சி

மகாலட்சுமிக்கு கிடைத்த மகிழ்ச்சி

திருமணத்திற்கு பிறகு மகிழ்ச்சியாக தலை தீபாவளியை கொண்டாடிய மகாலட்சுமிக்கு அவருடைய கணவர் ரவீந்தர் புதியதாக எம்ஜிஜி லாஸ்டர் கார் ஒன்றை பரிசளித்திருக்கிறார் .இந்த காரின் விலை கிட்டத்தட்ட 50 லட்சம் என்று பலரும் கூறி வருகின்றனர் .இதில் கார் பரிசளித்த ரவீந்தர் தன்னுடைய மனைவியை பற்றி நெகிழ்ச்சியாக பதிவு ஒன்ற வெளியிட்டு இருக்கிறார். அதில், "வாழ்க்கை முழுக்க நாம நேசிக்கிற ஒரு நபர் நமக்கு கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். அப்படி நேசிக்கிற நபர் நமக்கு பொண்டாட்டியா வந்தா? அது பெரிய அதிர்ஷ்டம். அப்படி நமக்கு கிடைச்ச பொண்டாட்டிய கூட்டிட்டு சுத்த சொர்க்கம் மாதிரி ஒரு கார் கிடைச்சா? புது கார், புது வைஃப், புது லைப்" என்று கேப்ஷன் கொடுத்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+