டேனியல் பாலாஜி கடைசியா சொன்னது! நேற்று இரவு நடந்தது இதுதான்! கதறி அழுத உயிர் நண்பன்
சென்னை: பிரபல திரைப்பட நடிகர் டேனியல் பாலாஜி நேற்று மாரடைப்பு காரணமாக யாரும் எதிர்பார்க்காத வகையில் மரணம் அடைந்திருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் நிலையில் அவருடைய நண்பர்களும் கதறி அழுது கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் டேனியல் பாலாஜியின் உயிர் நண்பர் ஒருவர் நேற்று நடந்த நிகழ்வுகள் குறித்து பேசியது பார்ப்போரை கண் கலங்க வைத்திருக்கிறது. திரைப்படங்களில் வில்லனாக எல்லோருக்கும் தெரியும் டேனியல் பாலாஜி தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் கதாநாயகனாக இருந்திருக்கிறார். 48 வயதான டேனியல் பாலாஜி திருமணம் செய்யாமல் இருந்த நிலையில் சமீபத்தில் அவர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் வைத்திருந்தார்.

அவர் கோவில் கட்ட தொடங்கிய பிறகு அதிகமாக பக்தியில் மூழ்கி விட்டாராம். அது குறித்து அவருடைய நண்பர் உருக்கமாக பேசி இருக்கிறார். அதில், நானும் டேனியல் பாலாஜியும் பல வருடங்களாக நண்பர்களாக இருக்கிறோம். நாங்கள் அடிக்கடி வெளி இடங்களுக்கு சுற்றுலாவுக்கு போவோம். அவருடைய திரைப்பட சூட்டிங் நடக்கும் இடங்களுக்கும் கூட எங்களை கூட்டிக்கொண்டு போவார்.
அதுபோல புது திரைப்பட வாய்ப்புகள் வந்தாலும் கதையை எங்களிடமும் சொல்லி விவாதிப்பார். இந்த கதையில் நடிக்கலாம் என்று இருக்கிறேன் என்று சொல்லுவார். நாங்களும் எங்களுக்கு தோன்றுகிறதை அவரிடம் ஷேர் பண்ணுவோம். அதுபோல அவரோடு பழகுறவர்கள் எல்லாருமே எப்படி நடிக்க வேண்டும்? எப்படி சினிமாத்துறைக்குள் வரவேண்டும் என்று அவருக்கு தெரிந்த விஷயங்கள் எல்லாவற்றிலும் சொல்லித் தருவார்.
அதுபோல உதவி என்று அவரிடம் யாரு வந்தாலும் அவர்களுக்கு அள்ளிக் கொடுப்பார். பல பேருடைய படிப்புக்கு பீஸ் கட்டியிருக்கிறார். ஸ்கூல், காலேஜ் என்று இவர் பலருக்கு பீஸ் கட்டி இருக்கிறார். அதுபோல வயசானவர்களுக்கு அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் இங்கு எனக்கே அவர்தான் பிசினஸ் தொடங்கி வைத்தார். எனக்கு மட்டுமல்லாமல் என்னை போன்று பல நண்பருக்கு பிசினஸ் தொடங்கி கொடுத்திருக்கிறார்.
நாங்கள் இன்று இந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறோம் என்றால் அதற்கு காரணமும் டேனியல் பாலாஜி தான். எப்போது நாங்கள் அவரிடம் ஃபோன் பண்ணினாலும் ரொம்பவே ஜாலியா பேசுவார். இப்போ கோவில் கட்டிய பிறகு முழுக்க முழுக்க அவருடைய கவனம் கோவிலிலும் ஆன்மீகத்திலும் இருக்கிறது. அதனாலேயே நிறைய திரைப்பட வாய்ப்புகள் வந்ததை எல்லாம் வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.
நாங்கள் அதை பற்றி கேட்டாலும் அதற்கு அவர் எனக்கு ஆன்மீகத்திலேயே தீட்சை பெற வேண்டும் என்பதுதான் ஆசை என்று சொல்லிக் கொண்டிருந்தார். நேற்று எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்ததால் நான் அவருக்கு போன் போட்டேன். அவர் போனை எடுக்கவில்லை, அதனால் மீண்டும் மீண்டும் அவருக்கு அடித்துக் கொண்டு இருந்தேன். அவர் எடுக்கவில்லை என்றதும் எனக்கு ஒரு பதட்டம் ஏற்பட்டது.
அதற்கு பிறகு அங்கிருந்தவர்களுக்கெல்லாம் ஒவ்வொருவருக்காக போன் அடித்தால் யாருமே தெரியவில்லை என்று சொல்லிவிட்டார்கள். பிறகு ஒரே ஒருவர் மட்டும்தான் அண்ணனோடு இருந்திருக்கிறார். அவர் தான் டேனியல் பாலாஜியை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போயிருக்கிறார். எங்களுக்காக எவ்வளவோ உதவிகள் செய்திருக்கிறார். கோவிலில் வழிபாடுகள் எல்லாம் செய்து இருக்கிறார்.
ஆனால் அவருக்கு முடியாத போது நாங்கள் யாருமே அவர் பக்கத்தில் இல்லை. அவர் தனி ஆளாகத்தான் கஷ்டப்பட்டு இருக்கிறார். அந்த நேரத்தில் நாங்கள் கூட இல்லாமல் போய்விட்டோமே என்ற வருத்தம் எங்களுக்கு அதிகமாக இருக்கிறது. எங்கள் யாருக்காவது போன் பண்ணி இருந்தால் நாங்கள் ஓடி வந்திருப்போம். ஆனால் அவர் ஏன் அதை செய்யாமல் விட்டார் என்று தான் தெரியவில்லை என்று பேசிக் கொண்டிருக்கும்போதே அந்த நபர் அழுதிருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications