Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உமா ரமணன் முகத்தில் எப்போதும் சோகம் ஏன்? கடைசியில் நடந்தது என்ன? தோழி பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாடகி உமா ரமணனின் உடல் நலன் குறித்து அவருடைய தோழி ஷோபனா ரமேஷ் தெரிவித்துள்ளார்.

ஆகாய வெண்ணிலாவே, நீ பாதி நான் பாதி, பூங்கதவே , கண்மணி நீ வர வேண்டும், கஸ்தூரி மானே, குயிலே குயிலே , மேகம் கருக்கையிலே, பூத்து பூத்து, வெடலபுள்ள உள்ளிட்ட ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். அவர் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசை கச்சேரிகளை நடத்தியுள்ளார்.

What happened to Uma Ramanan her close friend Shobana reveals

அவர் கடந்த மே 1 ஆம் தேதி காலமாகிவிட்டதாக அவருடைய கணவர் ரமணன் வீடியோ மூலம் அறிவித்தார். உடல்நலம் ஏதும் பாதிக்கப்படாமல் உமாவுக்கு என்ன ஆயிற்று என்ற கேள்விதான் பலருக்கு இருந்தது.

இந்தியா கிளிட்ஸ் தமிழ் சேனலுக்கு உமா ரமணனின் தோழியும் நடன கலைஞருமான ஷோபனா ரமேஷ் அளித்த பேட்டியில், மே தினம் அன்று காலை உமா ரமணன் இறந்துவிட்டார் என்ற செய்தி எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏ.வி.ரமணன் மிகவும் பிரபலம். அவர் 30 நாட்களில் 35 இசைக் கச்சேரிகளை நடத்தினார்.

ஆனால் அவருடைய செல்வாக்கை எப்போதுமே உமா ரமணன் பயன்படுத்தியது இல்லை. கணவர் என்ன சொல்கிறாரோ அதை கேட்பார். நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது என்னிடம் உமா எதையும் மறைக்காமல் பேசுவார். முதல் முதலில் ஜிமிக்கி போட்டு உமாதான் பாட ஆரம்பித்தார்.

What happened to Uma Ramanan her close friend Shobana reveals

என் கணவர் மூலம் எனக்கு ரமணனையும் உமாவையும் தெரியும். என் கணவர் ரமேஷுக்கு இசை என்றால் மிகவும் பிடிக்கும். பாங்கோ என்ற இசை கருவியை வாசிப்பார். ரமணனின் கச்சேரிகளில் என் கணவர் வாசித்தார். எனக்கு நடன வகுப்புகள் இல்லாத நேரத்தில் நான் அந்த கச்சேரிகளை பார்ப்பேன்.

அப்படித்தான் நானும் உமாவும் தோழிகளானோம். தனது கணவர் குழந்தைதான் உலகம் என்றிருப்பார். ரமணனுக்கு எல்லாமே தெரியும். ஆனால் தேவைப்பட்டால் மட்டுமே பேசுவார். இளையராஜாவின் இசையில் உமா பாடிய பாடல்கள் எல்லாமே நன்றாக இருக்கும். இன்று கண்களை மூடிக் கொண்டு அந்த பாடல்களை கேட்டாலே மனதிற்கு இதமாக இருக்கும்.

உமா இறப்பின் போது குடும்பத்தினர் மட்டும் வந்தால் போதும், மற்றவர்கள் யாரும் வர வேண்டாம் என ரமணன் கூறினார். அவருக்கு உலகம் முழுக்க நண்பர்கள் இருந்தாலும் அவர் யாரிடமும் எதையும் கேட்க மாட்டார்கள். குடும்பத்தினர் செய்ய வேண்டிய சடங்கு முறைகள் அதிக கூட்டத்தால் பாதிக்கப்படுமோ என்று கூட அவர் நினைத்து யாரையும் வர வேண்டாம் என சொல்லியிருந்திருப்பார்.

உமாவுக்கு 7 மாதங்களுக்கு முன்பு கீழே விழுந்து கால் முட்டியில் அடிப்பட்டதாக நான் கேள்விப்பட்டேன். அதற்கு அவர் மருத்துவ சிகிச்சையும் எடுத்துக் கொண்டிருந்ததாக எனக்கு தகவல் கிடைத்தது. அதனால் அவரால் நடக்க முடியவில்லை. ஆனால் அவர் என்னிடம் எதையும் சொல்லவில்லை. இறப்புக்கு போன போது கூட என் தோழிகள், நண்பர்கள், எல்லாரும் உமாவுக்கு என்னாச்சு என கண்களால்தான் கேட்டோம். ஆனால் அங்கு ரமணன் நிலைக்குலைந்து உட்கார்ந்திருந்ததால் எங்களால் எதையும் கேட்க முடியவில்லை.

மகன் விக்னேஷ் தங்க பதக்கம் வாங்கியவர். இசையையும் பயின்று வருகிறார். ஆனாலும் அவருக்கு திருமணம் ஆகவில்லையே என்ற கவலை உமாவுக்கு இருந்திருக்கலாம். கச்சேரிக்கு வந்தால் உமா முகத்தில் ஒரு சோகம் இருப்பது போல் இருக்கும். ஆனால் எங்களை எல்லாம் பார்த்தால் சிரிப்பார். எனவே எனக்கு அவர் சிரித்த முகம்தான் நினைவுக்கு வருகிறது. இவ்வாறு ஷோபனா தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+