ரத்தத்திலேயே அது இருக்கு அதனால்தான் அப்படி நடந்துகிறார்.. மைனா நந்தினி பற்றி கணவர் கூறிய செய்தி
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருக்கும் மைனா நந்தினியை பற்றி அவருடைய கணவர் பேசிய தகவல்கள் கேட்டு ரசிகர்கள் பலர் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.
மைனா நந்தினி பற்றி பல்வேறு நெகடிவ் கருத்துக்கள் வலம் வரும்போது அவருடைய நிஜ கேரக்டரையும் அவர் அப்படி நடந்து கொள்வதற்கான காரணத்தையும் பற்றி அவருடைய கணவர் யோகேஷ் முதல்முறையாக பேசி இருக்கிறார்.

பிக் பாஸில் அறிமுகம்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகையாக இருக்கும் மைனா நந்தினியும் ஒரு போட்டியாளராக அறிமுகமாக இருக்கிறார். இவர் சக போட்டியாளர்கள் அறிமுகமான ஒரு வாரம் கழித்து தான் இந்த நிகழ்ச்சியில் அறிமுகம் ஆகி இருந்தார். நிகழ்ச்சியை பற்றி நன்றாக பார்த்துவிட்டு தான் இவர் நிகழ்ச்சியில் அறிமுகமாக இருந்தாலும் போட்டியாளர்களிடமும் கமல் முன்னிலையிலும் இவர் பேசும் வார்த்தைகளை எரிச்சல் ஊட்டுவதாகவே பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். எபிசோட்டில் கூட கமல் காமெடி என்கிற பெயரில் அடுத்தவர்களை பேசவிடாமல் செய்யக்கூடாது என்று அறிவுரை கூறியிருந்தார்.

மதுரைக்காரப் பெண்
திட்டிக் கொண்டிருக்கும்போதும் இளக்காரமாக இவர் காமெடியாக பேசுவதை குறித்து பலர் நெகட்டிவ் கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில் மைனா நந்தினி அப்படி பேசுவதற்கு காரணம் அவருடைய சொந்த ஊர் மதுரை. மதுரைக்கார பெண் என்பதால் அவருடைய பேச்சிலேயே ரத்தத்திலேயே காமெடி யும் நக்கல் தனமும் கலந்து இருக்கிறது. பொதுவாக மதுரைக்கார பெண்கள் எப்போதுமே இப்படித்தான் பேசுவார்கள். அதுபோலத்தான் நந்தினியும் பேசுகிறார். அவர் வேண்டும் என்று யாரையும் நக்கல் செய்வதில்லை. அவளுடைய பேச்சை அப்படித்தான் என்று கூறியிருக்கிறார்.

கணவரின் கண்டனம்
கடந்து வாரம் நடைபெற்ற தலைவர் போட்டியில் மைனா நந்தினி கலந்து கொள்ளும் போது அணிந்து இருந்த டயபர் குறித்து யூடியூபில் அவரை உருவ கேலி செய்யும் விதமாக ஒரு யூடியூபர் பேசியதை குறித்து கண்டனம் தெரிவித்து மைனாவின் கணவர் யோகேஷ் பேசி இருந்தார். அதற்குப் பிறகு அந்த யூடியூபர் மன்னிப்பும் கேட்டிருந்தார். ஏற்கனவே கமல் மைனா என்ன அறிவுரை கூறினாலும் அங்கே காமெடியாக பேசுகிறோம் என்று நக்கல் செய்வதாக குறிப்பிட்டு இருந்தார். அதுபோலத்தான் எப்போதும் நடந்து கொண்டிருக்கிறார் என்று ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

புது உருட்டு
மதுரைக்கார பெண் என்பதால் இப்படி நக்கலாக பேசுவதாக மைனாவின் கணவர் வெளியிட்ட கருத்துக்கு ரசிகர்கள் பலர் கலாய்த்து கருத்து வெளியிட்டு வருகின்றனர். இது என்ன புது உருட்டாக இருக்கிறது என்று பலர் கேள்விகளை எழுப்ப வழக்கம் போல இதை வைத்தும் நெட்டிசன்கள் அதிகமாக கலாய்த்து கொண்டிருக்கின்றனர். மனைவிக்கு சப்போர்ட் கொடுக்கிறேன் என்கிற பெயரில் இப்படி எல்லாமா பேசுவாங்க என்று சிலர் கேள்வி எழுப்ப, மைனா நிகழ்ச்சிக்கு சுவாரசியமாகத்தான் பேசிக் கொண்டிருக்கிறார். வெறுப்போடு பார்ப்பவர்களுக்கு அவர் செய்வது எல்லாம் தப்பாகத் தான் இருக்கும் என்று மைனாவின் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications