எனக்கும் அவருக்கும் இருப்பது இதுதான்! ஜெயம் ரவியை டேக் செய்து.. வெளிப்படையாக போஸ்ட் போட்ட கெனிஷா
சென்னை: ஜெயம் ரவி மற்றும் அவருடைய மனைவி விவாகரத்து பிரச்சனையில் பாடகி கெனிஷாவை தொடர்புப்படுத்தி பல வதந்திகள் பரவி வரும் நிலையில் பாடகி கெனிஷா நடிகர் ஜெயம் ரவியை டேக் செய்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு அதிகமான கமெண்ட்களை பெற்று வருகிறது.
கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் அதிகமாக விவாதிக்கப்பட்ட விஷயங்களில் ஜெயம் ரவி அவருடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வது பற்றி தான் பலரும் பேசி வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பே ஜெயம் ரவி அவருடைய மனைவியை பிரியப் போகிறார் என்று கிசுகிசு வெளியான நிலையில் திடீரென இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் தான் மனைவி ஆர்த்தியை பிரிய முடிவு எடுத்திருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

அதோடு அதில் தன்னை சார்ந்தவர்களுக்காக தான் எடுத்த முடிவு என்றும் விளக்கம் அளித்து இருந்தார். ஆனால் அடுத்த சில நாட்களில் ஆர்த்தி இது எனக்கே தெரியாமல் ஜெயம் ரவி அவராகவே எடுத்த முடிவு. அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் நான் இருக்கிறேன். நானும் என்னுடைய குழந்தைகளும் தவித்து வருகிறோம். என் தரப்பு நியாயத்தை அவரிடம் சொல்ல வேண்டும் என்று முயற்சி செய்கிறேன். ஆனால் அது முடியவில்லை என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து சில தினங்கள் கழித்து ஜெயம் ரவி நடித்த பிரதர் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது விவாகரத்து முடிவு எனக்கு தெரியவில்லை என்று ஆர்த்தி சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது. காரணம் இரண்டு நோட்டீஸ் அவர் வாங்கி இருக்கிறார். அதுபோல அவருடைய அப்பாவே என்னிடம் வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். நான் என்னுடைய மகன்களுக்காகத் தான் அமைதியாக இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

அதுபோல ஜெயம் ரவி கடந்து சில மாதங்களாகவே கோவாவில் ஒரு பாடகியோடு வசித்து வருகிறார் என்ற வதந்திகள் பரவி வந்த நிலையில் அதற்கும் ஜெயம் ரவி மறுப்பு தெரிவித்து இருந்தார். அந்த பாடகி உடன் வருங்காலத்தில் நான் ஒரு ஹீலிங் சென்டர் தொடங்கலாம் என்ற முடிவில் இருக்கிறேன் வேறு எதுவும் கிடையாது என்னுடைய குடும்ப பிரச்சனையில் அவர்களை இழுத்து விடாதீர்கள். வாழு வாழ விடு.. சிலர் அவர்களுடைய தப்பை மறைப்பதற்காக பிரச்சனையை வேறு விதமாக திருப்பி விடுகிறார்கள் என்று எல்லாம் பேசி இருந்தார்.
அதைத்தொடர்ந்து நேற்று ஜெயம் ரவி சென்னை ஈசிஆரில் அமைந்திருக்கும் ஆர்த்தியின் வீட்டில் உள்ள தன்னுடைய பொருள்களை மீட்டு தர வேண்டும் என்று ஆர்த்தி மீது அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்திருந்தார். இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் கெனிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறார். அதில், எனக்கும் ஜெயம் ரவிக்கும் இருக்கும் நட்பு என்பது தொழில் முறை சார்ந்தது மட்டும்தான். ஜெயம் ரவி என்னுடைய நண்பர், என்னுடைய வாடிக்கையாளர் அவ்வளவுதான். என்னை இந்த விவாகரத்தில் இழுக்காதீர்கள் எனக்கு வேலை இருக்கிறது. அதற்கு நேரமில்லை என்று கெனிஷா கூறி இருக்கிறார் .
அதைத்தொடர்ந்து, மற்றவர்களின் பிரச்சனைகளை உங்களுடைய சொந்தமாக்கிக் கொள்ள சுதந்திரம் பெற்ற அனைவருக்கும் ஒரு பணிவான வேண்டுகோள். முதலாவதாக நான் உங்களிடம் தாழ்மையாக ஒன்று சொல்கிறேன். அடுத்தவர்கள் வீட்டு பிரச்சனையில் இருந்து நீங்கள் விலகி இருங்கள். ஏனெனில் இது உங்க வீட்டு பிரச்சனை அல்ல, வேறொருவரின் வீட்டு பிரச்சனை. மேலும் இந்த விஷயத்தில் நீங்கள் கருத்து தெரிவிக்க அனுமதிக்கப்படவில்லை.

இரண்டாவதாக என்னை அதிலிருந்து விலக்கி விடுங்கள். எனக்கு வேலை இருக்கிறது நான் விசித்திரமான கேள்விகளுக்கு வாதிடுவதில்லை. இறுதியாக எல்லோரிடமும் அன்பாக இருங்கள். அது மட்டும்தான் இப்போது உலகில் உள்ள ஒரே தேவை. நான் எந்த விஷயத்தை பற்றி இனி வேறு எந்த ஊடகத்திலும் பேச மாட்டேன். இதுதான் என்னுடைய கடைசி வார்த்தைகள் என்று அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார். இதற்கு அதிகமான கமெண்ட்கள் குவிந்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications