விஜய் டிவி நிகழ்ச்சியில் பேசிய வார்த்தை தான்.. முதல் மனைவியை பிரிவதற்கு காரணம்? மனம் திறந்த பப்லு
சென்னை: நடிகர் பப்லு ப்ரித்வி தன்னுடைய முதல் மனைவியை என்ன காரணத்திற்காக பிரிந்தேன் என்று மனம் திறந்து பேசி இருக்கிறார்.
விஜய் டிவி நிகழ்ச்சியில் தன்னுடைய மனைவி தன்னை பற்றி பேசிய வார்த்தை தன்னை காயப்படுத்தி விட்டதாக கூறியிருக்கிறார்.
தனக்கு மனைவி மரியாதை தராததால் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் தான் முதல் மனைவியை பிரிந்ததாகவும் கூறி இருக்கிறார்.
வெள்ளித்திரை, சின்னத்திரை என்று வில்லனாகவும் குணச்சித்திர வேடத்திலும் கலக்கிக் கொண்டிருக்கும் பப்லு பிரிதிவிராஜ் தன்னுடைய குடும்பப் பிரச்சனையை பற்றி சமூக வலைதளத்தில் பேசியிருக்கிறார். ஏற்கனவே பப்லு பிரிதிவிராஜ்க்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தை இருக்கும் நிலையில் தற்போது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, இரண்டாவதாக தன்னைவிட வயதில் குறைந்த சீத்தல் என்ற பெண்ணை காதலித்து வரும் செய்தியை சமீபத்தில் அறிவித்து இருந்தார்.

பப்லு மற்றும் அவர் காதலிக்கும் சீத்தல் என்ற பெண்ணிற்கு இடையே வயது வித்தியாசம் காரணத்தை கூறி காட்டி சமூக வலைத்தளத்தில் அதிகமானோர் இவர்களை கலாய்த்து கொண்டிருக்கின்றனர். பலர் முதல் மனைவி மற்றும் குழந்தைகள் பாவம் என்று கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் பப்லு தான் எதற்காக முதல் மனைவியை விவாகரத்து செய்தேன் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அதில் நானும் என்னுடைய முதல் மனைவியும் நண்பர்களாகத்தான் இருந்தோம். நண்பர்களாக இருக்கும்போது நன்றாகத்தான் இருந்தது. பிறகு கணவன் மனைவியாக மாறிய பிறகு தான் பிரச்சனை தொடங்கியது.
எனக்கு கணவன் என்கிற மரியாதை கொஞ்சம் கூட கிடைக்கவே இல்லை. என்னை சாப்பிட்டியா என்று கூட கேட்க மாட்டார். நான் அத்தனை வருடங்களாக அவரோடு வாழ்ந்த போது ஓரிருமுறை மட்டும்தான் சாப்பிட்டாயா? என்று விசாரித்தார். அதுவும் சாப்பாடு வீட்டில் இல்லை வெளியே சாப்பிட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்வதற்காக தான். சாப்பிட்டாச்சா என்று கேட்டால் என்னவென்று கேட்டால் கூட பசித்தால் நீங்கலே சாப்பிட போறீங்க. இதுல என்ன கேட்கிறதுக்கு இருக்கு என்று சொல்லுவார் என்று கூறியிருக்கிறார்.
அதோடு விஜய் டிவியில் சில வருடங்களுக்கு முன்பு கல்யாணம் பந்தல் என்கிற ஒரு நிகழ்ச்சியில் பப்லுவும் அவருடைய மனைவியும் ஒன்றாக கலந்து கொண்டு இருந்தார்களாம். அப்போது தொகுப்பாளர் பப்லுவின் முதல் மனைவியிடம் உங்கள் கணவர் அழகாக இருக்கிறார். அவரை ஹக் பண்ணுவதற்கு நீங்கள் சந்தோஷப்படுகிறீர்களா? என்று கேட்டதற்கு, யார் இவனா? என்று கேட்டாராம். அது என்னை ரொம்பவே காயப்படுத்தி விட்டது. ஒரு நிகழ்ச்சியில் என்னை அவமானம் செய்தது போல இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

அது மட்டுமில்லாமல் எனக்கு சூட்டிங் ஸ்பாட்டில் நான் கேட்டதும் ஜூஸ், கார் எல்லாம் தந்து எனக்கு மரியாதை தந்திருக்கிறார்கள். ஆனால் என்னுடைய முதல் மனைவியின் ரிலேஷன் ஃபங்ஷனுக்கு போகணும் என்றால் கூட ஆட்டோவில் வாங்க, கார் அனுப்ப அனுப்ப முடியாது என்று கூறுவார். நான் ஏதாவது டிரஸ் போட்டு இது நல்லா இருக்கா என்று கேட்டால் கூட உனக்கு இது செட் ஆகவில்லை என்று ஒரே வார்த்தையில் கூறிவிட்டு, நல்லாவே இல்லை என கிளம்பி போய் விடுவார். அது எனக்கு அன்னைக்கு ஃபுல்லாவே ஒரு மாதிரி இருக்கும். அதனால எங்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்படும்.
கோபத்தில் நானும் என்னுடைய முதல் மனைவியை அதிகமாக கெட்ட வார்த்தை எல்லாம் பேசி திட்டி இருக்கிறேன். அவரும் என்னை திட்டுவார். அதை பார்த்த என்னுடைய மகன் ரொம்பவே அப்செட் ஆகி விட்டான். அதனால் தான் நான் வீட்டில் இருந்து கிளம்பி வாடகைக்கு வீடு எடுத்து இருந்தேன். எனக்கு மரியாதை கொஞ்சம் கூட இல்லாததால் தான் நான் இப்படி ஒரு முடிவு எடுக்க காரணம் என்று தெரிவித்திருக்கிறார். தற்போது இந்த பதிலுக்கு அதிகமான கருத்துக்கள் குவிந்து வருகிறது.
-
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது?












Click it and Unblock the Notifications