Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூப்பர் ஹீரோ பட.. பார்முலாவையே உடைக்கும் மலையாள படம் "லோகா-1".. வெற்றிபெற காரணமான 10 விஷயங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மலையாளத் திரையுலகின் சூப்பர் ஹீரோ திரைப்படமான 'லோகா: அத்தியாயம் 1' இந்தியா முழுக்க கவனம் பெற்றுள்ளது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வசூலில் சாதனை படைத்ததோடு மட்டுமல்லாமல், பான்-இந்தியா திரைப்படங்கள் குறித்த எண்ணத்தையே இந்த படம் மறுவரையறை செய்துள்ளது.

கேரளத்தின் மண்ணின் மைந்தர்களின் கதைகளை, பிரம்மாண்டமான சூப்பர் ஹீரோ கற்பனையுடன் இணைத்து இந்த படம் வெளியாகி உள்ளது. தமிழில் பல நாட்டார் கதைகள் உள்ளன. நிறைய பெண் நாட்டார் தெய்வங்கள், ஆண் நாட்டார் தெய்வங்கள் உள்ளன. அதை அப்படியே சூப்பர் ஹீரோ போல மாற்றி எடுத்தால் எப்படி ஹிட் அடிக்குமோ அப்படித்தான் இதிலும் செய்துள்ளனர். பெரிய நட்சத்திரங்களை மட்டுமே நம்பி எடுக்கப்படும் படங்கள் மட்டுமே மாநில எல்லைகளை கடக்கும் என்ற கருத்தை இத்திரைப்படம் தகர்த்துள்ளது.

Lokah 1 movie review

'லோகா: அத்தியாயம் 1

டொமினிக் அருண் இயக்கி, துல்கர் சல்மான் தயாரித்து, சாந்தி பாலச்சந்திரனுடன் இணைந்து எழுதிய 'லோகா: அத்தியாயம் 1' திரைப்படம், நாடு முழுவதும் பேசப்படும் ஒரு படமாக மாறியுள்ளது. 30 கோடி ரூபாய் செலவில், பெண் சூப்பர் ஹீரோவை மையமாக வைத்து, முன்னணி நட்சத்திரம் இல்லாமல் வெளியான இத்திரைப்படத்தின் வெற்றி, இந்திய சினிமாவுக்கு புதிய பாதையை வகுத்துள்ளது.

கல்யாணி ப்ரியதர்ஷன் என்ற நடிகையை லீடிங் கதாபாத்திரமாக வைத்து இந்த படம் தற்போது ரூ.100 கோடி வசூலை நெருங்கி கொண்டு இருக்கிறது. கடந்த வாரம் வெளியான இத்திரைப்படம், "லோகா" மற்ற பான்-இந்தியா திரைப்படங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது.. இந்த படம் எப்படி ஹிட் அடித்தது என்பதற்கான 10 முக்கிய காரணங்களை இங்கு காணலாம்.

'லோகா: அத்தியாயம் 1 - வெற்றிபெற காரணம்

1. இந்த ஆண்டு பான்-இந்தியா என விளம்பரப்படுத்தப்பட்ட பல திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறத் தவறிவிட்டன. கூலி போன்ற படங்கள் கடுமையான விமர்சனங்களை சந்தித்தன. வார் 2 போன்ற பெரிய நட்சத்திரங்களின் பிரம்மாண்டமான படங்கள் ஆரம்ப hype-ஐத் தாண்டி நிலைக்கவில்லை. ஹீரோ பில்டப், தீவிர ப்ரோமோஷன், அதிக எதிர்பார்ப்பு, தேவையில்லாத கேமியோ போன்ற hype-ஐத் தாண்டி பல படங்கள் தியேட்டர்களில் பெரிதாக வெற்றிபெறவில்லை. ஆனால் இந்த லோகா படத்திற்கு ப்ரோமோஷன் பெரிதாக செய்யவில்லை.. இதனால் hype ஏற்றி மக்களை ஏமாற்றாமல்.. படம் வெளியான பின் நல்ல விமர்சனங்கள் வந்த பின்பே ப்ரோமோஷன் செய்தனர். இதனால் தியேட்டருக்கு போய் ஏமாறாமல்.. மக்கள் எதிர்பார்ப்பு இன்றி சென்று ஆச்சரியம் அடைந்தனர்.

2. 'லோகா: அத்தியாயம் 1' திரைப்படத்தின் முக்கிய அம்சம், கதைக்கு முக்கியத்துவம் அளிப்பதாகும். பொதுவாக, சூப்பர் ஹீரோ திரைப்படங்கள், சாதாரண மனிதன் சக்தி பெற்று, உலகைக் காப்பாற்றுவதைச் சுற்றியே இருக்கும். ஆனால் 'லோகா' இந்த வழக்கமான சூத்திரத்தை மாற்றி அமைத்துள்ளது. நாயகி சந்திரா (கல்யாணி ப்ரியதர்ஷன்), கல்லியாங்கட்டு நீலி என்ற நாட்டுப்புறக் கதையின் பாத்திரமாக, அறிவியல் மூலம் உருவான சூப்பர் ஹீரோவாக இல்லாமல், பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதியாக சித்தரிக்கப்பட்டுள்ளார்.

3. அவர் ஒரு யட்சியாக மாறுவது, இயற்கையாகவும், கேரளத்தின் கலாச்சாரத்துடன் ஆழமான பிணைப்பு கொண்டதாகவும் உள்ளது. இத்திரைப்படம் வழக்கமான சூப்பர் ஹீரோ கதையை போல அல்லாமல் புராணக் கதையின் சாயலைக் கொண்டுள்ளது. வழக்கமான வில்லன்கள் அல்லது நகரங்களை அழிக்கும் காட்சிகள் இல்லாமல், இத்திரைப்படம் ஒரு புதுமையான அணுகுமுறையைக் கொண்டுள்ளது. வில்லன் பாத்திரமான நாச்சியப்பா (சண்டி), ஒரு யட்சனாக மாறி, அரக்கனாக உருவெடுக்கும் ட்விஸ்ட் கவனம் பெற்றுள்ளன.

4. அதே சமயம் அறிவியல் பூர்வமாகவும் அணுக வேண்டும் என்பதற்காக இந்த சூப்பர் ஹீரோ.. வௌவால் மூலம் வைரஸ் தாக்கி அந்த சக்தியை பெற்றதாகவும் காட்டி இருப்பார்கள். அதாவது வைரஸ் காரணமாகவே அந்த பெண் "வேம்பயராக" மாறி இருப்பதாக காட்டி நம்ப வைத்திருப்பார்கள். வேம்பயர்கள் விதிப்படி அவர்கள் எந்த வீட்டிற்குள்ளும் அழைக்காமல் செல்ல மாட்டார்கள் அதேபோல் ரத்தம் குடிப்பது, பல லட்சம் வருடங்கள் வாழ்வது போன்ற பார்முலா விதிகளையும் பின்பற்றி இருப்பார்கள்.

5. இத்திரைப்படம், "உலகைக் காப்பாற்றும்" என்ற வழக்கமான சூப்பர் ஹீரோ கதையில் இருந்து மாறுபட்டு, நாட்டுப்புறக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய சினிமா உலகத்தை உருவாக்குகிறது. அதே சமயம் 'லோகா' பொறுமையாக கதையின் அடித்தளத்தை அமைக்கிறது. கேரளத்தின் கலாச்சாரம் மற்றும் சமூக யதார்த்தத்தில் இருந்து எடுக்கப்பட்ட இந்த கதை, மிக இயல்பாக உள்ளது. மின்னல் முரளியின் கேமியோ.. அடுத்த பாகங்களுக்கான லீடிங் என்று இப்போதே அவெஞ்சர்ஸ் பாணியில் படம் எதிர்பார்ப்பை எகிற வைத்து உள்ளது. . '2018' மற்றும் 'மின்னல் முரளி' போன்ற முந்தைய மலையாள வெற்றிப் படங்களின் பார்முலா அணுகுமுறையையும் இத்திரைப்படம் பிரதிபலிக்கிறது.

6. கல்லியாங்கட்டு நீலியின் கதை, படத்திற்கு ஒரு வலிமையான அடித்தளத்தை அளிக்கிறது. வெறுமனே அந்த ஹீரோ கேமியோ, இந்த ஹீரோ கேமியோ , பழைய பாடல் கிம்மிக்ஸ் எல்லாம் காட்டாமல்.. (இது எல்லாமே இந்த படத்திலும் உள்ளது.. ஆனால் அதை மட்டும் நம்பி படம் இல்லை).. முழுக்க முழுக்க கதை பின்புலத்தை நம்பி எடுத்துள்ளனர்.

7. இரண்டாம் பாகம் கொஞ்சம் மெதுவாக சென்றாலும்.. கிளைமேக்ஸ் கட்டத்தில் வேகம் எடுக்கிறது. சந்திராவின் கதாபாத்திரம், பல நூற்றாண்டுகளாக அனுபவித்த ஒடுக்குமுறை, துயரம் மற்றும் தனிமை ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்ட சக்திவாய்ந்த மற்றும் பலமான ஒரு கதாபாத்திரமாக எழுதப்பட்டுள்ளது. இந்த பாத்திரமே படத்தில் லாஜிக் பார்க்காமல் கைதட்ட வைக்கிறது.

8. நஸ்லென் போன்ற நடிகர்கள் கூட, தங்கள் பாத்திரங்களுக்கு உயிரூட்டி, சந்திராவின் பயணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். துல்கர் சல்மான் கேமியோ, மம்முட்டியின் வருங்கால கேமியோ, எதிர்கால பாகங்களில் வரப்போகும் மற்ற நடிகர்களுக்கான லீடிங்கை இப்போதே கொடுத்தது கவனம் பெற்றுள்ளது.

9. 'லோகா' திரைப்படம் அதன் எல்லைகளை நன்கு உணர்ந்து, அதை திறம்பட பயன்படுத்தியுள்ளது. பெரிய CGI அமைக்காமல், பெரிய பெரிய செட் போடாமல், பெங்களூரின் குறுகிய தெருக்கள் போன்ற எளிதில் அடையாளம் காணக்கூடிய இடங்களைப் பயன்படுத்தி, குறைந்த பட்ஜெட்டில் ஒரு பிரம்மாண்டமான சினிமா உலகத்தை உருவாக்கி உள்ளனர்.

10. நவீன மலையாள சினிமா இங்குதான் சிறந்து விளங்குகிறது. தங்கள் வரம்புகளுக்குள் பணியாற்றி அதற்குள் எவ்வளவு நவீனமாக படம் எடுக்க முடியுமோ எடுத்துள்ளனர். குறைந்த பட்ஜெட்டில் ஹாலிவுட் தரத்தில் படம் எடுத்துள்ளனர். சுமார் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான 'லோகா', மலையாள சினிமாவில் அதிக பட்ஜெட் படமாக கருதப்படுகிறது. ஆனால் ஒரு சூப்பர் ஹீரோ படத்திற்கு இது மிக குறைவான பட்ஜெட்தான்.. அங்குதான் இந்த படம் வெற்றிபெறுகிறது. மலையாள உலகின் மாவீரன் என்று இதை கூறலாம்.

ஆனால் என்ன.. நாங்கள் ஹாலிவுட் தரத்தில் படம் எடுத்தாலும் தமிழர்களைத்தான் வில்லன்களாக காட்டுவோம் என்ற அரதபழைய பார்முலாவை மட்டும் இந்த படத்திலும் கைவிட மறுத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+